Author: sitemanager

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

  • கடனில் தத்தளிக்கும் ஜெயப்பிரகாஷ் பவர் வென்சர்ஸை வாங்க அதானி திட்டம்

    ஜெயபிரகாஷ் பவர் வென்சர்ஸ் நிறுவனம் அதீத கடன் சுமையால் தவித்து வருகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட நிறுவனத்தை 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கவும் குறிப்பாக சிமெண்ட் ஆலையை மொத்தமாக வாங்கவும் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில்தான் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை அதானி குழுமம் கைப்பற்றியது மத்திய பிரதேசத்தில் உள்ள நிக்ரி பகுதியில் ஜெய்பிரகாஷ் அசோசியோட்ஸ்…

  • 5% வீழ்ச்சியை சந்தித்த டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள்

    இந்தியா மட்டுமின்றி உலகளவில் முக்கிய நிறுவனமாக உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன்கீழ் இயங்கும் ஜாக்குவார் லாண்ட்ரோவர் பிரிவில் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது சீன நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யப்படும் இந்த வகை சொகுசு கார்களுக்கு செய்யப்படும் பிரத்யேக சிப் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று உரிய நேரத்தில் சிப் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் மாத விற்பனை 90 ஆயிரம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் 75 ஆயிரத்து 307ஆக…

  • வாட்ஸ்ஆப் குரூப்பில் உறுப்பினர்களின் எண்ணிக்கை விரைவில் 1024 ஆகிறது….

    உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் மொபைல் செயலியாக உள்ளது வாட்ஸ் ஆப். இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் வசதியுள்ளது. விரைவில் இது இரட்டிப்பாகி ஆயிரத்து 24 ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது மட்டுமின்றி வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேருக்கு தகவல் சென்று சேரும் வகையில் புதிய அப்டேட்களையும் வாட்ஸ்ஆப் அடுத்தடுத்து வெளியிட உள்ளது. இந்த சூழலில் டெலிகிராம் நிறுவன…

  • 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்த முதலீட்டாளர்கள்…..

    இந்திய பங்குச்சந்தைகளில் நிலவிய நிலையற்ற சூழல் காரணமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே 57 ஆயிரத்து 365 புள்ளிகளாக சரிந்த பங்குச்சந்தையால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியான நிலையில் அங்கு மேலும் கடன்களின் விகிதம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே இந்திய பங்குச்சந்தைகளிலும் தாக்கம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோரின்…

  • கலக்கமடைய வைக்கும் மந்தநிலை:சிறப்பு கட்டுரை

    உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு,ஏற்றுமதி ஆகியன அதிகரித்துள்ளன. இது இத்துடன் முடியப்போவதும் இல்லை.மோசமான நிலை இதற்கு பிறகுதான் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி. கடந்த மாதம் மட்டும் 3.5% குறைந்துள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மட்டும் 17% சரிந்துள்ளது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது தொழிற்சாலை உற்பத்தி அளவு கடந்த ஜூலை மாதம் 2.4%குறைந்த நிலையில்,கோர் எனப்படும் முக்கியமான…

  • ஐபோனில் வருகிறது புதிய வசதி…

    செல்போன்கள்,டேப்லட்கள்,ஹெட்போன்கள்,கேமிராக்களுக்கு டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வகை ஆண்டிராய்டு போன்களிலும் கிட்டத்தட்ட டைப்சி சார்ஜர் வசதியே உள்ளன. ஆனால் ஆப்பிள் போன்களில் மட்டும் தங்களுக்கே உரிய லைட்டனிங் போர்ட் வசதி மட்டுமே உள்ளது. இந்த நிலை விரைவில் மாற உள்ளது. இதுகுறித்து புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த மாடலாக உள்ள ,ஐபாட்,ஏர்பாட் உள்ளிட்டவற்றிற்கு வரும் 2024ம் ஆண்டு முதல் டைப்-சி சார்ஜ் வசதி…

  • கடன் வாங்கும் அம்பானி?? …..

    முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாயும்,ஜியோ நிறுவனம் 20 ஆயிரத்து 600 கோடி ரூபாயும் வெளிநாட்டு கடன்தரும் நிறுவனங்கள் மூலம் கடன் வாங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 5ஜி செல்போன் சேவையை அண்மையில் ஜியோ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நிறுவன விரிவாக்கத்துக்கு இந்த கடன் வாங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கிளேஸ், எச்.எஸ்.பி.சி,MUFGவங்கிகளிடம் கடன் வாங்குவது குறித்துபேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் அங்கீக்கரிக்கப்பட்டுள்ள கடன் அளவான SOFRஐவிட 150 அடிப்படை புள்ளிகள்…

  • ஐடி துறையில் சேர நினைப்பவர்களுக்கான சோகமான சேதி….

    உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக ஐடி நிறுவனங்களில் புதிதாக பணியாளர்களை நியமிக்கும் அளவு கடுமையாக குறைந்துள்ளது. மொத்த அளவில் 20%மட்டுமே வரும் ஆண்டு ஆட்களை தேர்வு செய்ய ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சர்வதேச அளவில் நிலவும் நிலையற்ற சூழல் காரணமாக ஐடி நிறுவனங்களில் புதிதாக ஆட்களை தேர்வு செய்வதை நிறுவனங்கள் மறுபரிசீலனை செய்து வருகின்றன. இந்தியாவில் அதிகரித்து வரும் செலவு காரணமாக ஐடி ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மேலும் அமெரிக்க டாலருக்கு…

  • அதானி குழுமத்திடம் இருந்து 20,000 கோடி ரூபாய் பெற ஒப்புதல்…

    அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி அண்மையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவன பங்கை வாங்கினார். இந்த நிறுவனத்தில் 91.37% பங்கு தற்போது அதானி வசம் உள்ளது. இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு அம்புஜா நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதல் சனிக்கிழமை கிடைத்துள்ளது. கவுதம் அதானியின் மகன் கரண் அதானியை அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவன இயக்குநர்கள் பட்டியலில் சேர்க்க கவுதம் அதானி முடிவெடுத்துள்ளார். இதற்கான சிறப்பு தீர்மானத்துக்கும் அம்புஜா நிறுவன…