Author: sitemanager

  • கடினமான தருணத்துக்கு தயாராகும் அமெரிக்க பங்குச்சந்தைகள்….

    அமெரிக்காவில் விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிரடி கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து வகையான கடன்களின் விகிதங்களும் கடுமையாக உயர இருக்கிறது. இந்த சூழலில் மக்களையும், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார். நூறு அடிப்படை புள்ளிகளை உயர்த்துவதற்கு பதிலாக 75 புள்ளிகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் விலைவாசி…

  • வாட்ஸ்ஆப்,சிக்னல் செயலிகளுக்கு கட்டுப்பாடு…

    இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தொலைதொடர்பு சட்டங்களில் மத்திய அரசு விரைவில் மாற்றங்களை கொண்டுவர உள்ளது. இதற்கான பிரத்யேக சட்ட முன்வடிவையும் மத்திய அரசு வடிவமைத்து வருகிறது. அதன்படி வாட்ஸ் ஆப்,சிக்னல் மற்றும் பிற ஓடிடி தளங்களின் தரவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வர உள்ளன. குரல்,வீடியோ,இணையதள தகவல் பரிமாற்றத்தையும் இந்த புதிய சட்டம் கண்காணிக்க அதிக வாய்ப்புள்ளது. தேவை ஏற்பட்டால் பிற செயலிகளையும் இந்த வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக…

  • இனி எல்லாம் 1 மணி நேரத்தில் ….

    வரும் 2047ம் ஆண்டு உலகளவில் சரக்கு கையாள்வதில் இந்தியா 10% என்ற அளவை எட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. இதையொட்டி துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வரும் சரக்குகளை , வந்த ஒரு மணி நேரத்துக்குள் வெளியேற்றும் முறைக்கான பணிகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.இந்த திட்டத்துக்கு கஸ்டம்ஸ் ஒன் என்று பெயரிடப்பட்டுள்ளது 2047ம் ஆண்டு இந்தியா நூறாம் ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாட உள்ள நேரத்தில் இந்தியா வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்ட வேண்டும் என்ற நோக்குடன்…

  • 19 ஆயிரம் கோடி ரூபாய் தருகிறதா மத்திய அரசு …. ???

    இந்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித்தவித்து வருகின்றன. இரு நிறுவனங்களும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளன. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த கடனை அடைக்க மத்திய அரசு உதவி செய்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு பிஎஸ்என் எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் அளித்தது.பிஎஸ்என்எல் நிறுவனத்தை…

  • கள்ளச்சந்தையில் விற்பனை: ரூ.58,000 கோடி ரூபாய் இழப்பு !!!

    கடந்த 2019-20ம் ஆண்டில் சட்டவிரோத பொருட்கள் விற்பனை குறித்த அறிக்கையை FICCI வெளியிட்டுள்ளது. அதன்படி அரசுக்கு வரியாக செல்லவேண்டிய 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள், செல்போன்கள், புகையிலை மற்றும் சாராயம் உள்ளிட்ட பொருட்கள்தான் அதிகம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்த வரி இழப்பில் 49% வரி இழப்பு புகையிலை மற்றும் மதுவிற்பனையில்தான் நடப்பதாக கூறப்பட்டுள்ளது கள்ளச்சந்தையில் குறிப்பிட்ட ஒரு வருடத்தில் மட்டும் 2 லட்சத்து…

  • மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்துக்கு தடை …..

    இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம், இந்த நிறுவனம் வாகனங்கள் வாங்க கடன் அளித்து வருகின்றது. அண்மையில் ஜார்க்கண்டில் டிராக்டருக்கு வாங்கிய கடனை விவசாயி செலுத்தவில்லை என்பதற்காக மகேந்திரா நிறுவனம் அனுப்பிய நபர், டிராக்டரை பறிமுதல் செய்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியின் 27 வயது கர்ப்பிணி மனைவியை டிராக்டர் ஏற்றி கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. புகார் எழுந்த்தை அடுத்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள…

  • வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு….

    அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டி விகித்தத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் 59 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது அமெரிக்க டாலருக்கான தேவை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளதன் காரணமாக டாலரின் தாக்கம் ஆசிய கரன்சிகளில் பிரதிபலிக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 81 ரூபாய் முதல் 82 ரூபாய் வரை சரியக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர் எதிர்பார்த்த அளவை விட அமெரிக்க…

  • வேதாந்தாவுக்கு மானியமே 80 ஆயிரம் கோடியா ????

    இந்தியாவில் செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பெரிய அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தைவான் நிறுவனமான பாக்ஸ்கானுடன் இணைந்து வேதாந்தா நிறுவனம் குஜராத்தில் செமி கண்டெக்டர் ஆலையை நிறுவுகிறது. இந்த நிலையில் வேதாந்தா குழுமத்துக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக கிடைப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் 80 ஆயிரம் கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையாக அளிப்பது இலவசம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும்…

  • அம்பானியை மிஞ்சிய அதானி…

    IIFL wealth hurun india நிறுவனம் இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியை கவுதம் அதானி மிஞ்சியுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தினசரி அதானியின் வருமானம் ரூ.1612 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது அந்த நிறுவனத்தின் தரவுகளின்படி கவுதம் அதானியின் சொத்துமதிப்பு 10 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது . இந்த அளவு அம்பானியின் சொத்து மதிப்பை விட 3 லட்சம் கோடி ரூபாய்…

  • தீவிரமாகும் கட்டுப்பாடுகள்…

    இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை 2024ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கார் உற்பத்தியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது அதன்படி, எம் மற்றும் என் வகையிலான வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் உள்ள மோட்டார் வாகன சட்டத்தின்படி காரின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பது விதி.ஆனால் அதனை பெரும்பாலானோர் மதிப்பதே இல்லை. அண்மையில் மெர்சிடீஸ் காரில் பின் இருக்கையில் அமர்ந்து…