Author: sitemanager

  • தனி ரூட் எடுக்கும் அசோக் லேலாண்ட் …

    நாட்டில் பெட்ரோலிய பொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக பலரும் மின்சார வாகனங்கள், இயற்கை எரிவாயு வாகனங்களை விரும்புகின்றனர். பல நிறுவனங்களும் இதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் முன்னணி பஸ் மற்றும் டிரக் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலாண்ட் நிறுவனம் நெடுந்தூரம் பயணிக்கும் பேருந்து மற்றும் டிரக்கில் ஹைட்ரஜனை எரிபொருளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இது சாத்தியமாக அதிக வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சரவணன் தெரிவித்துள்ளார். ஹைட்ரஜன் வாயு…

  • போதுமான கோதுமை கையிருப்பில் உள்ளது!!!

    உள்ளூரில் அதிக கோதுமையை விநியோகிக்கும் வகையில் போதுமான கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளதாக உணவுத்துறை செயலாளர் சுதன்ஷூ பாண்டே தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் சுமார் 24 மில்லியன் டன் அளவுக்கு கோதுமை கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடப்பாண்டு ரபி பருவத்தில் மட்டும் 105 மில்லியன் டன் அளவுக்கு கோதுமை உற்பத்தி இருப்பதாகவும், சந்தைக்கு 95 முதல்…

  • ஆழமாய் களம் இறங்கும் Bad Bank….

    இந்திய தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான NARCL எனப்படும் நிறுவனம் பேட் பேங்க் எனப்படுகிறது. இந்த வங்கி தற்போது அக்டோபர் 31ம் தேதிக்குள் 18 கடன் பெற்ற நிறுவன கணக்குகளை வாங்க இருக்கிறது. அதாவது மொத்தம் 39ஆயிரத்து 921 கோடி ரூபாய் தொகையை வசூலிக்க இந்த பேட் பேங்க் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 18 நிறுவனங்களில் முதலில் 8 நிறுவனங்களின் கணக்குகளையும் பின்னர் 10 நிறுவனங்களின் கணக்குகளையும் பேட் பேங்க் வாங்கிக்கொள்ளும். இவ்வாறு செய்வதன் மூலம் நிறுவனங்களின் கணக்குகள்…

  • ஜூம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!!!

    கொரோனா காலகட்டத்தில் பல தரப்பினரும் தங்கள் அலுவலக மீட்டிங்களை ஜூம் செயலி மூலமே செய்து வந்தனர். இந்த நிலையில் அதில் உள்ள குறைபாடு குறித்து மத்தியஅரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்திய கணினி அவசரகால செயல்பாட்டு குழு என்ற அமைப்பு (CERT-IN) என்ற அமைப்புதான், இந்தியாவின் சைபர் பாதுகாப்பு மற்றும் அறிவுறுத்தல்களில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த அமைப்பு அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஜூம் செயலியில் பாதுகாப்பு குறைபாடு மிதமான வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.…

  • மூத்த குடிமக்கள் கவனத்திற்கு !!!

    மூத்த குடிமக்களுக்காக பாரத ஸ்டேட் வங்கி தனது பழைய பிக்சட் டெபாசிட் திட்டமான WE CARE திட்டத்தை அடுத்தாண்டு நீட்டித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி மூத்த குடிமக்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் வட்டி காணப்படும்..அதாவது சாதாரண பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தால் அளிக்கப்படும் விகிதம் 5 புள்ளி 65 விழுக்காடாகும்…, ஆனால் மூத்த குடிமக்கள் முதலீடு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு 6புள்ளி 5 விழுக்காடு வட்டியாக கிடைக்கும்.. இந்த வட்டி விகிதம் வரும் அடுத்தாண்டு மார்ச் மாகம்…

  • என்ன பண்ணலாம்? விவாதிக்கும் பெட்ரோலிய அமைச்சகம்

    இந்தியாவில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் விண்ட் ஃபால் டாக்ஸ் என்ற வரி எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து ஆலோசிக்க வரும்படி பெட்ரோலிய அமைச்சகம் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சில பிளாக்குகளை இந்த வரி விதிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. 1990களில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் எண்ணெய் உற்பத்திக்காக ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், அரசாங்கத்துக்கு அளித்து வரும் ராயல்டி உள்ளிட்ட வரிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட…

  • தங்கம் வாங்க சிறந்த நேரமா?

    தங்கத்தில் முதலீடு செய்தால் பெரிய லாபம் ஈட்டலாம் என முதலீட்டாளர்கள் இந்தாண்டு எடுத்த முடிவு தலைகீழாக மாறிப்போய் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 14 விழுக்காடு இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலை வீழ்ந்துள்ளது. போர் மற்றும் கொரோனா உள்ளிட்ட பேரழிவான காலகட்டத்தில் தங்கம் புதிய உச்ச விலையை எட்டியது. அதாவது, கடந்த மார்ச் 2022-ல் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 69 டாலர்களாக இருந்தது. இந்தாண்டு…

  • ரூபாய்-ரியாலில் வர்த்தகம் நடத்த ஆயத்தம்

    இந்தியா-சவுதி அரேபிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்க டாலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயில் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரியால்-ரூபாய் இடையே வர்த்தகம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் சவுதியில் யுபிஐ முறை மற்றும் ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்த இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை…

  • கூகுளுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு…

    கொரோனா காலகட்டத்தில் செல்போன் செயலிகள் மூலம் கடன்பெறும் வசதி மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் வகை தொகை இல்லாமலும் எந்த விதிகளையும் பின்பற்றாமலும் சில கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்திருந்தன.  இந்த சூழலில் மோசடி ஆப்கள் மூலம் பணத்தை இழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசு பலமுறை அழைத்து எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூகுள் இல்லை என்றாலும்…

  • இப்படி செலவு செய்தால் என்ன செய்வது?

    இந்திய ரிசர்வ்வங்கி தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணங்களை அதிகளவில் விற்று வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2013-ம் ஆண்டு காலகட்டத்தை டேபர் டான்ட்ரம் என்று அழைப்பார்கள். குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் அதிக வெளிநாட்டு பணத்தை ரிசர்வ் வங்கி செலவழித்த்து அந்நாளில் விவாத பொருளானது. இந்நிலையில் டேபர் டான்ட்ரம் காலகட்டத்தை விட அதிக அளவில் அந்நிய கையிருப்பை ரிசர்வ் வங்கி செலவிடுவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டும் இந்தியா 38.8…