Author: sitemanager

  • அமெரிக்க பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி

    அமெரிக்க பெடரல் ரிசர்வ், தங்கள் நாட்டு கடன் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக அறிவிக்க உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. நேற்று அமெரிக்க பங்குச்சந்தைகளில் 0.35% சரிவு ஏற்பட்டது. S&P 500 துறை பங்குகளில் பிரதான 11 பங்குகளில் 5 பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. சுகாதாரத்துறை பங்குகள் ஒன்றரை விழுக்காடு சரிந்துள்ளது. ஆற்றல் துறையில் 1 விழுக்காடு விலை வீழ்ச்சியும் காண முடிந்தது.பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் கடன் வட்டி விகிதத்தை நூறு…

  • இதையும் விற்கலாம்னு இருக்கோம்.. யாருக்காவது வேணுமா?

    கடன் சுமையில் சிக்கித்தவித்த ஐடிபிஐ வங்கியை தனியாருக்கு விற்க கடந்த 2016ம் ஆண்டே மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இந்த வங்கியின் பங்குகளை விற்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அண்மையில் எல்ஐசியின் பங்குகள் விற்கப்பட்டதை போல அடுத்தபடியாக ஐடிபிஐ பங்குகள் விற்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் ஐசிஐசிஐ வங்கியும், ஐடிபிஐ வங்கியும் ஒப்பீட்டு அளவில் பார்த்தால், ஐசிஐசிஐ வங்கி பின்பற்றிய உத்திகள் சிறப்பாக இருந்துள்ளது. இந்நிலையில் ஐடிபிஐ வங்கிகளின் உரிமை தற்போது எல்ஐசி…

  • பணத்தை வாரி இறைக்கும் அதானி….

    கடந்த மே மாதம் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன. அதாவது, அம்புஜா மற்றும் ஏசிசி சிமென்ட் நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை ஹோலி சிம் என்ற நிறுவனம் தன்வசம் வைத்திருந்தது. இந்த சூழலில் ஹோலிசிம் நிறுவன பங்குகளை, பங்குச்சந்தை ஒழங்குமுறை அமைப்பான செபியின் விதிகளுக்கு உட்பட்டு என்டேவர் டிரேட் மற்றும் முதலீட்டு நிறுவனம் மூலமாக அதானி வாங்கினார். இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில்…

  • டாலர் கெட் அவுட்: வெயிட் காட்டும் ரஷ்யா

    உலகின் பல நாடுகளும் அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே வர்த்தகம் செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு ரஷ்யா ஆளாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாய் மற்றும் ரஷ்ய பணத்தில் வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய திட்டத்தை ரஷ்யா அறிவிக்க உள்ளது. ஏற்கனவே இந்திய ரூபாய்க்கு நிகராக ஈரானிய பணத்தில் இந்தியா வர்த்தகம் செய்து வருகிறது. இதற்கான பணிகளை பாரத ஸ்டேட் வங்கி செய்தது. இந்நிலையில் இதே பாணியிலான திட்டத்தை செயல்படுத்தும்…

  • ஒரு மீட்டிங்கை போட்டாத்தான் சரி வரும் போல இருக்கு!!!!

    இந்த மாத இறுதியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் சிஇஓக்களை சந்திக்க உள்ளார். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய நிலை, வளர்ச்சி குறித்து இந்த கூட்டத்தில் பேச உள்ளார். முக்கியமாக பட்டியலினத்தவர் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதிலும் குறிப்பாக பட்டியலினத்தவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட் அப் இந்தியா, பிரதமரின் முத்ரா யோஜ்னா,உள்ளிட்ட அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தின் போது பட்டியலினத்தவரின் தேசிய…

  • ரயில் பயணிகள் கவனத்திற்கு!!!

    3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் ரயிலில் பயணிப்பவர்களா நீங்கள், அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான். கொரோனா காலகட்டத்துக்கு முன்பு பொருளாதார வகுப்புகளில் 3வது பிரிவு ஏசி வகுப்புகளில் பயணித்தவர்களுக்கு ஒரு தலையணை, படுக்கை விரிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இடையில் இந்த வசதிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த சூழலில் தற்போது அவை மீண்டும் இந்த வாரத்தில் இருந்து வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. 3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் பயணிப்பவர்களுக்கு படுக்கை விரிப்புகள் அளிக்கப்படாமல் உள்ளது. மேலும்…

  • 12000 கோடி வந்துருக்கு!!!

    அமெரிக்க பொருளாதாரம் ஓரளவு சீரான வளர்ச்சி எட்டியுள்ளதை அடுத்து அந்நாட்டின் கடன் வட்டி விகிதம் உயர்வது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு 51 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டு அக்டபோர் முதல் இந்தாண்டு ஜூன் வரை மட்டும் மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஒரே…

  • கவனமா இருங்க!!!

    ஆன்டிராய்டு போன்களில் மொபைல் பேங்க்கிங் செயலியை குறிவைத்து புதிய வைரஸ் களமிறங்கியுள்ளது சோவா என்ற பெயரில் அமெரிக்கா, ரஷ்யா ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஒரு Trojan வகை வைரஸ் ஆன்டிராய்டு போன்களில் பரவியதுஇந்தியாவிலும் ஆன்டிராய்டு செல்போன்களில் புகுந்துவிட்ட இவ்வகை வைரஸ்கள் அவ்வளவு எளிதில் அழிக்க முடியாதபோலியான மற்றும் பாதுகாப்பு இல்லாத ஆப்களை பதிவிறக்கம் செய்யும்போது இந்த வைரஸ் ஆன்டிராய்டு செல்போன்களுக்குள் நுழைந்து விடுகிறது… ஆன்டிராய்டு செல்போனில் உள்ள வங்கி செயலிகளின் username,password களை இந்த வைரஸ் திருடிக்ககொ…

  • தரத்தில் கவனம் செலுத்துங்க.. பணத்தில் இல்ல…

    சியாம் எனப்படும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வாகன உற்பத்தியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என்றும், பணத்தை கருத்தில் கொள்ளாமல் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இறக்குமதியை குறைத்து, வாடிக்கையாளர்களுக்கு அதிக சௌகர்யத்தை தரும் வகையில் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அதனை அதிகம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வாகனங்களை வாங்கும்போது அதன் விலையில் ஜிஎஸ்டியை குறைக்க மத்திய…

  • உலகின் 2-வது பணக்காரர் ஆனார் கவுதம் அதானி…

    ஃபோர்ப்ஸ் அமைப்பு ரியல் டைம் பில்லியனர் என்ற பட்டியலை தயாரித்துள்ளது. இதில் இந்தியாவின் பெரும்பணக்காரர் கவுதம் அதானி உலகளவில் இரண்டாவது இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 273.5 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்திலும், 155.7 பில்லியன் சொத்து மதிப்புடன் கவுதம் அதானி இரண்டாவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் பெருநிறுவமனை ஜெப் பெசூஸாசின் அமேசான் நிறுவனத்தை விட அதிகம் வருவாயை கொண்டுள்ளார் கவுதம் அதானி. இந்தாண்டில் மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை…