-
ஏர் இந்தியாவின் திட்டம்…
அரசு வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அண்மையில் கைமாறிய பிறகு, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியா நிறுவன சிஇஓ கேம்ப்பெல் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது உள்நாட்டு சந்தையில் டாடா குழுமத்தின் விமானங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 30 விழுக்காடு ஆதிக்கம் செலுத்த முடிவு எட்டப்பட்டது. விமான போக்குவரத்துத்துறையில் ஏர் இந்தியா நிறுவனம், தற்போது 3 பிரிவுகளை கொண்டு விமான சேவையை அளித்து வருகிறது. இந்தியாவில் இன்டிகோ…
-
வேதாந்தா நிறுவனம் விளக்கம்…
இந்தியாவில் பிரபலமான வேதாந்தா குழுமம் அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து புதிய செமிகண்டெக்டர் ஆலையை குஜராத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் வேதாந்தா நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. ஆனால் புதிய அரைகடத்தி ஆலையை வேதாந்தா நிறுவனம் நேரடியாக நடத்தவில்லை என்றும், அதன் நிர்வாகம் மற்றும் முதலீடுகளை வோல்கான் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் கவனிப்பதாகவும் வேதாந்தா விளக்கம் அளித்துள்ளது. இதே போல் கடந்த பிப்ரவரி மாதமும் வேதாந்தா நிறுவனம் தனது விளக்கத்தை அளித்திருந்த்து. அதிலும் வோல்கான்…
-
சுயதொழில் செய்பவர்களுக்கு கால ஆயுள் காப்பீடு ஏன் முக்கியமானது?
ஒரு சுயதொழில் செய்பவர் சம்பளம் பெறும் நபரை விட அதிகமான சவால்களை எதிர்கொள்கிறார், அதனால்தான் ஒரு சுயதொழில் செய்பவர் டேர்ம் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது. COVID-19 தொற்று உலகை நாம் அனைவரும் பார்க்கும் விதத்தை மாற்றியுள்ளது. இந்தியாவில் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த நிதியாண்டின் இதே…
-
பஞ்சாபில் ஆலையை அமைக்கவில்லை: BMW நிறுவனம் மறுப்பு
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதலமைச்சராக உள்ள பகவாந்த்சிங் மான் அண்மையில் ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு பிஎம்டபிள்யு நிறுவன அதிகாரிகளை சந்தித்ததாகவும், பஞ்சாபில் உற்பத்தி ஆலை அமைக்க அந்த நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது ஆனால் அதனை பிஎம்டபிள்யூ நிறுவனம் மறுத்துள்ளது. பிஎம் டபிள்யூ நிறுவனத்துக்கு நாட்டிலேயே சென்னையில் மட்டும்தான் உற்பத்தி ஆலை உள்ளது. உதிரி பாகங்களுக்கான கிடங்கு புனேவில் அமைந்துள்ளது. மாநில முதலமைச்சர் தனியார் பயணத்திற்காக…
-
“டிசம்பர் வரை 15% ஏற்றுமதி வரி இருக்கும்”
தயார் நிலையில் உள்ள ஸ்டீல் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் மத்திய அரசு 15 விழுக்காடு ஏற்றுமதி வரி விதித்தது. இந்த வரி விகிதம் வரும் டிசம்பர் மாதம் வரை தொடர வேண்டும் என்று மத்திய அரசின் ஸ்டீல் பொருட்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. திடீரென வரியை குறைத்தால் உள்நாட்டு சந்தையில் விற்பனை வீழ்ச்சியடைந்து ஏற்றுமதியில் அதிக கவனம் செல்லும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது நடப்பாண்டு மழைக்காலத்திற்கு பிறகு உள்நாட்டு…
-
யாராவது நிர்பந்தித்தால் என்னிடம் சொல்லுங்கள்”
ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வாகன உதிரி பாக இறக்குமதி கடந்தாண்டு மட்டும் 33 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 18 புள்ளி 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த அளவு கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். இதனை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் பேசினார்.…
-
“மகாராஷ்டிராவில் ஐபோன்களை தயாரிக்கிறது வேதாந்தா நிறுவனம்”
இந்தியாவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் சிஎன்பிசி டிவி 18 நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சுரங்கத்துறையில் கொடிகட்டி பறக்கும் வேதாந்தா நிறுவனம் மின்சார வாகன உற்பத்தியிலும் களம்காண உள்ளது. இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதற்காக தைவான் நிறுவனமான விஸ்ட்ரானுடன் இணைந்து டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் வேதாந்தா நிறுவனமும் ஐபோன்களை தயாரிக்க ஆர்வம்…
-
பொதுமக்கள் கவனத்திற்கு!!!
எல்லா தரப்பினரும் வாங்கி பயன்படுத்தும் வகையிலான அத்தியாவசிய மருந்துப் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதிய பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. அத்தியாவசிய மருந்துப் பட்டியல் கடந்த 1996ம் ஆண்டு முதல்முறையாக உருவாக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு இந்த பட்டியலை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்திருந்தது. அந்த குழு ஆராய்ந்து, அண்மையில் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்தது. இதனை பரிசீலித்த மத்திய அரசு, தேவையற்ற 26 மருந்துகளின் பட்டியலை நீக்கி,…