-
டாடாவின் ஷாப்பிங் லிஸ்ட்!!!!
இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் சந்தையில் கோக்க- கோலா நிறுவனத்தின் கின்லே, பெப்சி நிறுவனத்தின் ஆக்வஃபீனா ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில், பிஸ்லரி நிறுவனம் உள்ளது. மொத்த சந்தையில் பிஸ்லரி நிறுவனத்தின் பங்கு மட்டும் 32 விழுக்காடாக உள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வரும் பிஸ்லரி நிறுவனத்திடம் தற்போது 150 உற்பத்தி ஆலைகள், 4 ஆயிரம் விநியோகஸ்தர்கள், 5 ஆயிரம் லாரிகள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் பெரு நிறுவனமும், ஜாம்பவானுமான டாடா குழுமத்தின்,டாடா…
-
சந்தையில் நடந்தது என்ன?
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று அதீத ஏற்ற இறக்கம் காணப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தின் போது, 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கின. அதன் பின்னர் ஏற்ற இறக்கமாக இருந்த பங்குச் சந்தைகள், சற்று அதிகரிக்கத் தொடங்கின. வர்த்தக நேரம் முடிவில் 224 புள்ளிகள் வரை சரிந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60 ஆயிரத்து 347 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.…
-
ரோடு போட இனி இடம் இல்லை!!!! கார் வாங்காதீங்க!!!
டெல்லியில் மைண்ட் மைன் என்ற மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசினார். அப்போது சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர், பொதுமக்கள் பேருந்துகள் போன்ற பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றார். ஒரே ஒரு நபருக்காக காரில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பெங்களூரு போன்ற நகரங்களில் சாலை விரிவாக்கத்தாக இடத்தை இதற்கு மேல் எடுக்க முடியாது என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்க பைபாஸ், பல அடுக்குச் சாலைகள்,உள்ளிட்ட அம்சங்களை…
-
வேலை போயிடும் ஜாக்கிரதை..!!!!
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் அதே காலகட்டத்தில், இரண்டாவதாக ஒரு பணியை செய்வது மூன்லைட்டிங் எனப்படுகிறது. இது பல நிறுவனங்களில் இயல்பாக நடக்கும் செயலாக உள்ளது. கூடுதல் வருவாய்க்காக, ஓய்வாக இருக்கும் நேரத்தில் இரண்டாவதாக ஒரு வேலையை செய்வதை பல ஊழியர்களும் விரும்புகின்றனர். இந்த சூழலில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் இன்போசிஸில் பணியில் இருக்கும் அதே காலகட்டத்தில், இரண்டாவதாக ஒரு வேலையை கூடுதலாக செய்வது இன்போசிஸ் நிறுவன…
-
வாட்ஸ் ஆப்பில் இது புதுசு!!!
கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட் போன்களிலும் தவிர்க்க முடியாத ஒரு ஆப்பாக உள்ளது வாட்ஸ் ஆப். சீரான இடைவெளியில் புதுமைகளை புகுத்தி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் வாட்ஸ் ஆப் புதிய வசதியை பரிசோதித்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு சாட்டிங்கில் உள்ள தரவுகளை தேதியை மட்டும் வைத்து தேடும் வசதியை வாட்ஸ் ஆப் சோதித்து வருகிறது. இந்த வசதியை 2020ம் ஆண்டே வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த்து. எனினும் சற்று தாமதமாக விரைவில் இது பயன்பாட்டுக்கு வருகிறது.…
-
ரூ.28000 கோடி எல்லாம் முடியாது!!! ரூ.20000 கோடி தருகிறோம்!!!!
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் இயங்கி வருகின்றன. மாறி வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை காரணமாக இந்த நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பெரிய அளவு இழப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் இழப்பை சரி செய்ய 28 ஆயிரம் கோடி ரூபாயை இந்த 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் கோரியிருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 200 பில்லியன்…
-
எங்களுக்கு இது பத்தாது, நாங்க குஜ்ராத்துக்கு போறோம்!!!!
அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் செமி கண்டெக்டர் எனப்படும் அரைக்கடத்திகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டி வந்தது.இந்த நிலையில் இந்தியாவில் செமி கண்டெக்டர் ஆலைகளை தொடங்க பல்வேறு நிறுவனங்களும் இசைவு தெரிவித்திருந்தன. மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஆலைகள் அமைக்க திட்டமிடப்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் துபாய் மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்த…
-
இதில் தான் உயர்ந்து இருக்கிறோம்!!!
உலகிலேயே இந்தியா தான் அரிசியை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலகளவில் உணவு தானிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவும் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக உடைத்த அரிசி எனப்படும் நொய் மற்றும் அரிசி ஏற்றுமதி செய்தால் 20 விழுக்காடு கூடுதல் வரி உள்ளிட்டவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த சூழலில் நடப்பாண்டு 52 மில்லியன் டன் அளவுக்கு…
-
விலையை குறைப்பீங்களா? மாட்டீங்களா?
உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த பெட்ரோல்,டீசல் தேவை 85 விழுக்காடு இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு முதன் முறையாக கடந்த வாரம் 90 டாலருக்கும் கீழ் குறைந்தது. எனினும் உயர்த்தப்பட்ட பெட்ரோல்,டீசல் விலை இன்று வரை இந்தியாவில் குறைக்கப்படவே இல்லை. இது குறித்து பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,…