-
எச்டிஎப்சி வங்கிக்கணக்குளை மூடச் சொல்லிய அரசு:
பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அதன் முதன்மை பொறியாளர்கள்,செயற் பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் எச்டிஎப்சி வங்கிக் கணக்குகளை மூடும்படி கேட்டுக்கொண்டுள்ளது.போதிய ஒத்துழைப்பை வங்கி தரப்பில் வழங்கவில்லை என்றும் அந்த துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 22ம் தேதியிட்ட சுற்றறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு பணம் அளிப்பதாக வங்கி வாக்குறுதி அளித்த நிலையில், அந்த வாக்குறுதிகளை வங்கி நிறைவேற்றவில்லை என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர் புகார்களை அடுத்து எச்டிஎப்சி வங்கியில் கணக்கு…
-
டாடாவின் அவதாரம்!!
உலகளவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிறுவனம் ஆப்பிள், இதன் ஐபோன்கள் உலகம் முழுவதும் பெரிய ஹிட் அடித்த தயாரிப்பாகும். இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இந்த ஐபோன்கள் தயாராகின்றன. இந்த சூழலில் டாடா குழுமத்தில் இருந்து டாடா எலெக்ட்ரானிக்ஸ் என்ற பிரிவில் புதிய உற்பத்தி ஆலை ஓசூரில் துவங்கப்பட உள்ளது.இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும் பூமி பூஜைகள் நடந்ததாக கூறப்படுகிறது,துவக்கத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய்…
-
“இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மேலும் உயரும்”…
இந்தியாவில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் உயர்வு குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு மற்றும் கருத்துக்கேட்டது. இதன்படி கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பணவீக்கம் மீண்டும் உயரும் என்று கூறப்பட்டுள்ளது.அரிசி, கோதுமை,மற்றும் பருப்பு வகைகள் விலையேற்றம் கண்டுள்ளதால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவின் ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி நிற்கின்றனர்.இந்த சூழலில் ஜூலை மாதம் 6.71 விழுக்காடாக இருந்த சில்லறை பணவீக்கம் கடந்தமாதம் 6 புள்ளி 9 ஆக இருக்கும் என்று…
-
புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு IRDAI கட்டுப்பாடு
இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசிகள் தொடர்பான கட்டுப்பாட்டு அமைப்பு ஐஆர்டிஏஐ. இந்த அமைப்பு இன்சூரன்ஸ் தொடர்பான புதிய ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் பதிவேற்றுவதை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளது.இந்தாண்டு இறுதியில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளதுவர்த்தகத்தை மேம்படுத்தவும், பாலிசி எடுத்துள்ளோருக்கு புரியும் வகையில் இதனை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் IRDAI கூறியுள்ளது.இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி என்ற முறை மூலம் இந்த தரவுகள் மின்மயப்படுத்தப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இ-கே ஓய்சி எனப்படும் மின்னணு வடிவலான வாடிக்கையாளர்கள் விவரத்தை இன்சூரன்ஸ் ரெபாசிட்டரி நிர்வகிக்கிறது. இதன்…
-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஐபிஓ:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது புதிய ஐபிஓவை அண்மையில் தொடங்கியது. 3 நாட்கள் நடந்த பங்கு வர்த்தகத்தில், 831 கோடி மதிப்புள்ள பங்குகள் , 2 கோடியே 49லட்சத்து 39 ஆயிரத்து 322 பங்குகளாக விற்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு பங்குகளை அளிப்பது தொடர்பாக வரும் 12ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பங்குச்சந்தையில் விருப்பம் தெரிவித்தோருக்கு பங்குகள் வரும் 14 ம் தேதி கிடைக்க உள்ளது. வரும் 15ம் தேதி இந்தியாவின் இரண்டு பங்குச்சந்தைகளிலும் தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கியின்…
-
அரிசி ஏற்றுமதிக்கு தடை ஏன்?: அரசு விளக்கம்
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சில ரக அரிசிகள் ஏற்றுமதிக்கு மட்டும் 20% கூடுதல் வரி வித்தக்கப்பட்டுள்ளது, இதற்கு காரணம் என்ன என்று மத்திய அரசின் உணவுத்துறை செயலாளர் விளக்கம் தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களில் விலையேற்றம் மற்றும் அதிகளவு ஏற்றுமதியே காரணிகள் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது இந்தியாவில் நடப்பாண்டின் முதல் நாளில் 16 ரூபாயாக இருந்த உடைத்த அரிசி, செப்டம்பர் மாதம் 8ம் தேதி கிலோ 22…
-
நம்மிடம் இல்லை… வெளியானது உண்மை…
அரிசிக்கு பற்றாகுறை இல்லை.. கோதுமைக்கு பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்த, ஏற்றுமதி வரியை விதித்துள்ளது மத்திய அரசு. இதன்படி,பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய 20 சதவிதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பு, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்கும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. காரிப் பருவ நெல் சாகுபடி…
-
இன்றைய சந்தை நிலவரம்…
வாரத்தின் கடைசி வர்த்தக தனமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் அதிகரித்து 59 ஆயிரத்து 956 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 886 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை என்று 60,000 புள்ளிகளை கடந்தது குறிப்பிடத்தக்கது. அதானி…
-
ப்ளீஸ்.. இனி இதை விற்காதீங்க!!!
இந்தியாவில் 4 நிமிடங்களுக்கு ஒருவர் விபத்தில் உயிரிழக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் சாலை விபத்தில் உயிரிழந்த டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மரணம் பல முக்கிய பிரச்சனைகளை முன் வைத்துள்ளது. சாலை விபத்தில் அவர் உயிரிழந்ததற்கு சீட் பெல்ட் அணியாமல் இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் அமேசான் இணையதளத்தில் சீட்பெல்ட் அணியாவிட்டாலும் அனிந்தபடி காட்டும் சீட் பெல்ட் அலாரம் பிளாக்கர்ஸ் கிளிப்கள் பற்றி மத்திய அமைச்சர்…
-
ஊழியர்களை ஆபிஸ் கூட்டி வர படகு வாங்க போறோம்…..
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் 30ம் தேதி கொட்டித்தீர்த்த கனமழையால் வணிகம் வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக அந்த மாநிலத்துக்கு பெரிய வருவாய் ஈட்டித்தரும் ஐ.டி நிறுவனங்கள் அமைந்திருந்த அவுட்டர் ரிங் ரோடு பகுதி வெகுவான பாதிப்பை சந்தித்தது. மழை வெள்ளத்தில் பயணித்தும் கூட சில ஊழியர்கள் கடமையே கண்ணாக பணிக்கு வந்திருந்தனர். சிலர் ஜேசிபி இயந்திரங்களிலும் பயணித்து பலரின் கவனத்தை ஈர்த்திருந்தனர். இந்த சூழலில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீட்கவும்,அவர்களின் குடும்பத்தினரை…