-
வருகிறது உலகளாவிய மந்தநிலை:எச்சரிக்கும் ஐ.எம்.எஃப்.
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலைக்கான வாய்ப்புகள் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அடுத்தாண்டு உலகளாவிய பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதை சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் கணித்துள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வாரம் வெளியாக உள்ளது. அந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தற்போதுள்ள மந்த நிலை தொடர்ந்தால் வரும் 2026ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரம் 4 டிரில்லியன் அளவுக்கு சரியும்…
-
வாட்ஸ்ஆப் பாதுகாப்பானது இல்லையா ??
டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமாக இருப்பவர் பாவெல் துரோவ். இவர் அண்மையில் ஒரு பரபரப்பு பதிவை செய்திருந்தார். அதில் வாட்ஸ்ஆப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், ஹேக்கர்கள் மிக எளிதில் தரவுகளை அனுக முடிவதாகவும் கூறி அதிரவைத்துள்ளார். உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியில் ஏகப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், ஒரே ஒரு வீடியோகால் லிங்க் மூலம் ஹேக்கர்கள் மிக எளிதாக வாட்ஸ் ஆப் செயலிக்குள் புகுந்து தரவுகளை திருட…
-
PF வட்டி விவரம் அறிவதில் சிக்கல்…
ஊழியர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் PF பணத்தில் வட்டி விகிதம் எவ்வளவு வருகிறது என்பதை அறியும் வசதி அண்மையில் காணாமல் போனதால் சிலர் அதிர்ச்சியடைந்தனர். இந்த விவகாரம் குறித்து முன்னாள் இன்போசிஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி டி.வி.மோகன்தாஸ் பாய் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், வருங்கால வைப்பு நிதியில் எந்த விதிமீறல்களும் செய்யப்படவில்லை என்றும், வட்டி விவரம் குறித்த தகவல்கள் மென்பொருள் தர உயர்வால் காட்டப்படவில்லை…
-
கிரிப்டோ கரன்சி மூலம் துபாயில் வாங்கிய வீடுகள்..
இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர்களில் சிலர் துபாயில் சட்டவிரோதமாக கிரிப்டோ கரன்சிகள் மூலம் சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளனர். அவர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி துபாயில் பெரிய வீடுகள் வாங்கியோரின் பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.நேரடியாக அவர்களின் எண்கள் மட்டுமின்றி குடும்பத்தாரின் பாஸ்போர்ட் மற்றும் செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால் வருமான வரித்துறையினருக்கும், அமலாக்கத்துறையினருக்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டு கிரிப்டோ கரன்சிகள் மூலம் பணத்தை அனுப்பியது பல வகைகளில் விதிமீறலாக உள்ளது.தன்நபரின் கிரிப்டோ கரன்சி வாலட்டில்…
-
40ஆயிரம் கோடிக்கு புதிய ஆர்டர் ….
அமேசான்,ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் பண்டிகை கால சலுகைகளாக பொருட்களை விற்பனை செய்தன. இதில் மொத்தம் 40ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர்களை பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பண்டிகை கால விற்பனை மற்றும் சலுகைகள் பற்றி ரெட்சீர் என்ற நிறுவனம்,ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. அதன்படி மின்வணிக நிறுவனங்கள் தங்கள் வழக்கமான விற்பனையை விட 27%வளர்ச்சியை அதிகம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. 40 ஆயிரம் கோடியில் ஃபிளிப்கார்ட் நிறுவன பங்கு மட்டும் 62% என…
-
ஆயுள் காப்பீடு: நாக்பூரை சேர்ந்த ரஞ்சித் செய்த தவறு என்ன
ஆயுள் காப்பீடு என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் அடிப்படையான தேவையாக இன்று மாறி இருக்கிறது. காப்பீடு எடுத்த ஒருவர் இறந்துவிடும் பட்சத்தில் அவருடைய குடும்பத்தார் எந்தவித நிதி சிக்கலிலும் சிக்காமல் இருக்க ஆயுள் காப்பீடு மிகவும் அவசியமாக உள்ளது. ஒருவரின் மரணத்திற்கு பிறகு அவரை சார்ந்தவர்களை நிதி சார்ந்து காப்பாற்ற, ஆயுள் காப்பீடு ஒன்றே விலை குறைவான உபாயமாக இருக்கிறது. ஆயுள் காப்பீட்டை ஒருவர் எவ்வளவு குறைந்த வயதில் எடுக்கிறாரோ, அந்த அளவிற்கு பிரீமியம் தொகை குறைவாக இருக்கும்.…
-
கல்லா கட்டும் நிறுவனங்கள்…
பண்டிகை நாட்களை குறிவைத்து முன்னணி மின் வணிக நிறுவனங்கள் விற்பனை நடத்தும் போக்கு கடந்த சில ஆண்டுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது லாபகரமானதும் கூட என்று நிரூபித்துள்ளது சமீபத்திய புள்ளி விவரம். கடந்தாண்டு பண்டிகை கால விற்பனையை விட இந்தாண்டு பண்டிகை கால விற்பனை முதல் வாரத்தில் 30% உயர்ந்துள்ளது. முதல் தர பெரிய நகரங்களைவிடவும், 2, மற்றும் 3 ம் நிலையில் உள்ள குட்டி நகரங்களில் தான் 60% வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக ஈசிகாம் நிறுவனம்…
-
சிக்கன நடவடிக்கை சூப்பர்..
உலகளவில் பொருளாதார மந்தநிலை உள்ள சூழலில் பல நாடுகளும் தங்கள் ரிசர்வ் வங்கிளின் மூலம் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் விலைவாசி,வேலைவாய்ப்பின்மை உயர்ந்து வரும் சூழலிலும் கூட வட்டி விகிதங்களை சில நாடுகள் எடுத்து வருவது நல்ல வியூகம் என்று பாராட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் அண்மையில் வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதால் நல்ல முன்னேற்றம் காணப்பட்ள்ளதாகவும், இதேபோல் இந்தியாவில் ரிசர்வ்…
-
நீங்கள் சாப்பிடும் பொருள் கொட்டுப்போனதா?
ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் உணவில் 17% குப்பைக்கு செல்கிறது. அதாவது நல்ல பொருட்களும் சில நேரங்களில் குப்பைக்கு செல்வதோடு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் அதிகமாக உள்ளது என்கிறது அந்த அமைப்பு. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் பொருட்கள் வீணாக குப்பைக்கு செல்வதை தடுக்கும் நோக்கில் best before என்ற லேபிளை நீக்க திட்டமிட்டுள்ளனர். 1970களில் கொண்டு வரப்பட்ட இந்த முறை உலகம் முழுவதும் பிரபலமானதாகும். ஆனால் சில பொருட்கள் குறிப்பிட்ட காலத்தை…
-
ரிசர்வ் வங்கியின் புதிய யோசனை..
இந்திய ரிசர்வ் வங்கி என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் மிக முக்கியமான கண்காணிப்பு அமைப்பாகும். இந்த அமைப்பின் கண்காணிப்பையும் மீறி சில நேரங்களில் நிதி நிறுவன முறைகேடுகள் நடைபெறுவது உண்டு. இந்த சூழலில் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களை கண்காணிக்கவும்,புள்ளி விவரங்களை சரியாக ஆய்வு செய்யவும் செயற்கை நுண்ணறிவு, மற்றும் மிஷின் லர்னிங் நுட்பங்களை ரிசர்வ் வங்கி பயன்படுத்த இருக்கிறது. இதற்கென துறைசார்ந்த நிபுணர்களின் உதவியையும் ரிசர்வ் வங்கி நாடியுள்ளது. உலகளவில் மிஷின் லர்னிங்…