Author: sitemanager

  • நீண்ட கால முதலீட்டிற்கு தங்கப் பத்திரம்

    தங்கப் பத்திரத் திட்டத்தின் (SGB) 2021-22 ஆம் ஆண்டிற்கான வெளியீட்டு விலை கிராம் ஒன்றிற்கு ₹5,197 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு சந்தாவிற்கு இத் திட்டம் திறந்து இருக்கும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறது. அந்த அறிக்கையில் குறைந்த பட்சம் 1 கிராம் அளவில் முதலீடு செய்யலாம், வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் NSE, BSE மூலம் தங்கப் பத்திரங்கள் விற்கப்படும். பத்திரத்தின் தவணைக்காலம் 8 வருட காலம் ஆகும்.…

  • ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச்சந்தையின் நம்பிக்கை நாயகன்

    ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட கோடீஸ்வர முதலீட்டாளர். ஆகஸ்ட் 14 அன்று காலமானார். ‘இந்தியாவின் வாரன் பஃபெட்’ என்றும், இந்திய சந்தைகளின் பிக் புல் என்றும் அறியப்படும் அவரது சொத்தின் நிகர மதிப்பு $5.8 பில்லியன். பெரும் செல்வந்தராக இருந்த போதிலும், ஜுன்ஜுன்வாலா எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அக்டோபர் 2021 இல், அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, ஜுன்ஜுன்வாலா ஒரு கசங்கிய வெள்ளைச் சட்டை அணிந்திருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அவரது…

  • டிஜிட்டல் கடன் விதிமுறைகள் மதிப்பீடு – CRISIL

    இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 10 அன்று அறிவித்த டிஜிட்டல் கடன் விதிமுறைகள், வாடிக்கையாளர் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று மதிப்பீட்டு நிறுவனம் CRISIL வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் உடனடியாக நடைமுறைக்கு வரும் சில விதிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) செயல்படும் விதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். திருத்தப்பட்ட விதிமுறைகள் வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள் இன்னும் கூடுதலான பரிசோதனையில் உள்ளன. கூடுதலாக தரவு பாதுகாப்பு…

  • சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள்

    வெள்ளியன்று சென்செக்ஸ் 60,000-ஐத் தாண்டியதன் மூலம் இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டது. முன்னதாக சென்செக்ஸ் 651.85 புள்ளிகள் குறைந்து 59,646.15 இல் நிறைவடைந்தது. பெஞ்ச்மார்க் அதிகபட்சமாக 60,411.20 ம் குறைந்த பட்சமாக 59,474.57 ஐயும் இன்ட்ரா டே வர்த்தகம் தொட்டது. இதன் காரணமாக வங்கி, வாகனம், நுகர்வோர் பொருட்கள், உலோகம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இதற்கிடையில், நிஃப்டி 50 198.05 புள்ளிகள் குறைந்து 17,758.45 இல் நிறைவடைந்தது. பெஞ்ச்மார்க்…

  • மின்சார ஸ்கூட்டருக்கு இனி அபராதம்?!

    தீ விபத்துகளை ஏற்படுத்திய மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு அபராதம் விதிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு மின்சார வாகன (EV) தயாரிப்பாளர்கள் பதிலளித்ததை அடுத்து இந்த கருத்து எட்டப்பட்டுள்ளது. தீ விபத்துகளைப் பற்றி விசாரிப்பதற்கும், பேட்டரி சோதனை அளவுகோல்களைப் பற்றி பரிந்துரைப்பதற்கும் அரசாங்கம் இரண்டு விசாரணைக் குழுக்களை அமைத்தது. இந்த இரு குழுக்களும் தற்போது தங்கள் பணிகளை முடித்துவிட்டன. அரசு…

  • அம்புஜா சிமெண்ட்ஸ் – செபியின் ஒப்புதலை பெற்ற அதானி குழுமம்

    அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசிக்கான $3.8 பில்லியன் ஓப்பன் ஆஃபருக்காக செபியின் ஒப்புதலை அதானி குழுமம் பெற்றதாகத் தெரிகிறது. இதன்படி அம்புஜா சிமெண்ட்ஸுக்கு ஒரு பங்கிற்கு ₹385 மற்றும் ACCக்கு ₹2,300 ஆஃபரை அதானி குழுமம் வழங்கியுள்ளது. தோராயமாக ₹31,139 கோடி முதலீட்டில், இந்த இரண்டு திறந்த சலுகைகளும் இந்திய நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஓப்பன் ஆஃபராக இது அமையலாம். ஒரு அறிவிப்பின்படி, அதானி குடும்பத்திற்குச் சொந்தமான மொரிஷியஸைச் சேர்ந்த எண்டெவர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட், ₹19,880…

  • ஏற்றுக்கொள்ள முடியாத அளவு பணவீக்கம் – சக்திகாந்த தாஸ்

    இந்தியாவில் பணவீக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் தெரிவித்தார். இதே கருத்தை MPCயின் மற்ற உறுப்பினர்களும் தெரிவித்திருந்தனர். ஆகஸ்ட் 3 முதல் 5 வரை நடந்த கூட்டத்தில், பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில், பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் 5.40% ஆக அதிகரிக்க MPC முடிவு செய்தது. எம்.பி.சி உறுப்பினர்கள், நடுத்தர காலத்தில் பொருளாதார வளர்ச்சியைத்…

  • இன்று மறைந்த பிரதமர் ஸ்ரீ.ராஜிவ் காந்தியின் 78 வது பிறந்தநாள்.

    இன்று மறைந்த பிரதமர் ஸ்ரீ.ராஜிவ் காந்தியின் 78 வது பிறந்தநாள். அவரின் ஆட்சி மற்றும் சாதனைகள், காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும், அவர் ஒரு சிறந்த தலைவர் மற்றும் அவரின் அற்பணிப்பை எடுத்துக்கூறும் 6 விஷயங்கள்.. இந்தியாவை மாற்றிய, தகவல் தொழில்நுட்ப துறைக்கு தேவையான அடித்தளத்தை மிக ஆழமாக வேறூன்றியவர். இந்தியாவை கணினி, தகவல் தொடர்பு என்ற காலத்திற்கு கொண்டு வந்தவர். அது மட்டும் அல்ல, தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள், சமூக எதிர்…

  • இரண்டாம் நிலை வர்த்தகத்தில் பங்குகள் விற்பனை

    வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையைத் தொடர்ந்து, பில்லியன் கணக்கான மதிப்புள்ள பங்குகளை இரண்டாம் நிலை வர்த்தகம் மூலம் தனியார் ஈக்விட்டி மற்றும் மூலதன முதலீட்டாளர்கள் விற்று, பங்குச் சந்தைகளில் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆகஸ்டில் இதுவரை, முதலீட்டாளர்கள், பிளாக் டிரேட்கள் மூலம் $2 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். ஜூன் மாதத்தில் 2022 இல் குறைந்த இந்திய பங்குகள் மீண்டும் 18% ஏற்றம் பெற்றதன் பின்னணியில் இரண்டாம் நிலை பங்கு விற்பனைகள் வந்துள்ளன. சமீபத்திய வாரங்களில் பங்குச் சந்தைகளில்…

  • விண்ட்ஃபால் வரி – புதிய அறிவிப்பு

    கச்சா எண்ணெய், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்ட புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்ட்ஃபால் வரியை அரசு மீண்டும் திருத்தியுள்ளது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பின்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரி டன்னுக்கு ரூ.17,750லிருந்து ரூ.13,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜெட் எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி பூஜ்ஜியத்தில் இருந்து லிட்டருக்கு ரூ.2 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஏற்றுமதிக்கான…