-
லட்சம் கோடி வேண்டும்!!!!
நடப்பு நிதியாண்டில் 14 ஐபிஓகள் மட்டுமே வெளியான நிலையில் அடுத்தடுத்து வெளியிட தயாராக 71 ஐபிஓகள் உள்ளன. இதற்கு செபி அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. 71 நிறுவன பங்குகளின் மதிப்பு மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 43 நிறுவனங்கள் ஐபிஓகளுக்கு தயாராக செபியிடம் விண்ணப்பித்துள்ளன. எம்கியூர் பார்மா,நவி டெக்னாலஜீஸ், பிகாஜி புட்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் நிதி திரட்ட ஆயத்தமாக உள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2021-22ம் நிதியாண்டின்…
-
நிலைமை இன்னும் மோசம் ஆகும்!!!! கவனம்!!!
ஜெனிவாவில் உள்ள உலகளாவிய அமைப்பு WTO உலக வர்த்தக அமைப்பான இந்த அமைப்பு சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்கள், பொருளாதார நிலைகள் குறித்து அவ்வப்போது புள்ளி விவரங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் WTO அமைப்பு தனது புதிய புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிதியாண்டின் இரண்டாவது பாதி மிகவும் நன்றாக இருக்கும் என்று கணித்துள்ள அந்த அமைப்பு உலகளவில் வர்த்தகம் 3.5% ஆக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அளவு 3%ஆக மட்டுமே…
-
பெட்ரோல், டீசல் விலை உயருமா?
ஓபெக் என்பது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு எடுக்கும் முடிவின்படிதான் உலகம் முழுக்கவும் எண்ணெய் வளங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குழுவினரின் அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் என்ற அளவாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிலையில் தொடங்கியிருக்கும் பொருளாதார மந்தநிலை, ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட காரணிகளால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள…
-
விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு கெட்ட செய்தி….
கொரோனா பெருந்தொற்றின் போது பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே பணியாற்றும் சேவையை அறிமுகப்படுத்தின. இது பணியாளர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியதோடு ஐடி துறை, பெருந்தொற்று காலகட்டத்தில் கூட நல்ல லாபம் ஈட்டியது. நிலைமை இப்படி இருக்க, கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மீண்டும் ஆபிசுக்கு வர அழைப்பு விடுத்துள்ளனர்.…
-
ஆஃபர் லெட்டரை தந்துவிட்டு ஜகா வாங்கிய நிறுவனங்கள்…
தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணி நிறுவனங்களாக கருதப்படும் விப்ரோ, இன்போசிஸ் மற்றும் டெக் மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் அண்மையில் fresherகள் எனப்படும் முதல் முறை பணியாளர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு செய்தனர். அவர்களுக்கு ஆஃபர் லெட்டர்களும் அளிக்கப்பட்டன. ஆனால் அவர்களை பணியில் அமர்த்துவதற்கு நீண்ட காலத்தை அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். அப்படி இருந்தாலும் பரவாயில்லை, பணியில் சேர்த்துக்கொள்வார்கள் என நம்பியிருந்த தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அந்த நிறுவனங்கள் பேரிடியை அளித்துள்ளன. அவர்களுக்கு அளித்துள்ள மின்னஞ்சலில் உங்கள் கல்வித்தகுதி…
-
5.66 லட்சம் கோடி ரூபாய் லாபம்
மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் நேற்று ஆயிரத்து 300 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டதால் அனைத்து துறை பங்குகளும் லாபம் பெற்றன. வங்கி,உலோகம், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளில் குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த முதலீடுகளும் இந்திய பங்குச்சந்தையில் அதிகம் புழங்கியதால் சந்தை ஏற்றம் பெற்றது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தில் 5 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர். மும்பை பங்குச்சந்தையை போலவே தேசிய பங்குச்சந்தையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அமெரிக்க…
-
4 நகரங்களில் 5ஜி சேவை இலவசம்:ஜியோ
இந்தியாவின் பெரிய செல்போன் நெட்வொர்க் ஆன ஜியோ, மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் 5ஜி சேவையை இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது.தசரா பண்டிகை இந்தியா முழுக்கவும் கொண்டாடப்படும் நிலையில் புனித தினம் என்பதால் பீட்டா டெஸ்டிங்கை ஜியோ செய்துள்ளது. இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் இலவசமாக 5ஜி சேவையை பெற முடியும். இதற்கு free welcome offer என ஜியோ பெயர் சூட்டியுள்ளது.இந்த சலுகையை மேலே சொன்ன 4 நகரங்களில் மட்டும் முதல்கட்டமாக ஜியோ அளிக்க உள்ளதாக…
-
ஏர்டெல் 5ஜி பிளான் கட்டணம் எவ்வளவு..?
பார்த்தி ஏர்டெல் நிறுவனம் 5ஜிசேவையை கடந்த 1ம் தேதி முதல் 8 நகரங்களில் சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் வாடிக்கையாளர்களில் 8முதல் 9% பேரிடம் மட்டுமே 5ஜி வசதியுள்ள போன் உள்ளது. அவர்களிடம் தற்போது 5ஜிக்கான பிரீமியம் வசூலிக்க இயலாத சூழலில் ஏர்டெல் உள்ளது. அந்த நிறுவனம் தற்போது ஒரு வாடிக்கையாளரிடம் சராசரியாக 200 ரூபாய் வசூலிக்கிறது எனில் இது வரும் நாட்களில் 300 ஆக உயர வாய்ப்புள்ளது. வரும் டிசம்பரில் பெரிய…
-
சிங்கப்பூருக்கு Bye!!! இந்தியாவுக்கு Haii!!!
வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியான போன்பே நிறுவனம் IPO வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றுகட்டங்களாக இந்த மாற்றத்தை அந்நிறுவனம் செய்துள்ளது. முதலில் போன்பே டிஜிட்டல் பரிவர்த்தனை வணிகம், போன்பேவின் காப்பீட்டு திட்டம் மற்றும் வெல்த் புரோக்கிங் நிறுவனம் ஆகிய மூன்றின் செயல்பாடுகளையும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தநிறுவன பணியாளர்களே நிறுவன பங்குகளை வாங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு…
-
சரிந்து கொண்டே இருக்கிறது!!! என்ன தெரியுமா???
இந்தியாவின் ஏற்றுமதி திறன் கடந்தாண்டை ஒப்பிடுகையில் செப்டம்பரில் குறைந்துள்ளது.கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 33.81 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் அது தற்போது 32.62பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் இறங்குமதி அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் 56.29 பில்லியன் டாலராக இருந்த இறக்குமதி அளவு தற்போது மேலும் அதிகரித்து 59.35பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்தாண்டைவிடவும்…