Author: sitemanager

  • பெடரல் ரிசர்வ் வங்கி வளர்ச்சி கணிப்புகளை குறைத்திருக்கிறது

    சமீபத்திய மாதங்களில், பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறுவதற்கும், இப்போது விரைவான விகித உயர்வுகளுடன் மந்தநிலையை தவிர்ப்பதற்கும் பெடரல் ரிசர்வ் வங்கி எடுத்த பல முயற்சிகள் பங்குசந்தையில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி அவர்கள் கோபப்பட, நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவில் நுகர்வோர் பணவீக்கம் உயர்ந்துள்ளது ஒரு காரணமாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு அமெரிக்க பொருளாதாரத்திற்கான அதன் வளர்ச்சி கணிப்புகளை குறைத்திருக்கிறது என்பதும் மற்றொரு காரணம். S&P 500 மற்றும் Treasuries…

  • $44 பில்லியன் ஒப்பந்தம் – Twitter Inc வழக்கு

    ட்விட்டரை வாங்குவதற்கான தனது $44 பில்லியன் ஒப்பந்தத்தை மீறியதற்காக எலோன் மஸ்க் மீது Twitter Inc வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கு வால் ஸ்ட்ரீட் வரலாற்றில் மிகப்பெரிய சட்ட மோதல்களில் ஒன்றாகும், ஸ்பேம் கணக்குகள் தொடர்பான கூடுதல் தகவல்களை ட்விட்டர், மஸ்க்குடன் பகிர்ந்து கொள்ளவில்லை, ஏனெனில் ட்விட்டரை அவர் கையகப்படுத்தாமல் விட்டால் பிறகு ட்விட்டருக்குப் போட்டியாக அதைப்போலவே ஒரு தளத்தை உருவாக்குவார் என்று அஞ்சியது. மஸ்க் மேற்கோள் காட்டிய காரணங்களை தகுதி இல்லாத ஒரு ‘சாக்குப்போக்கு’ என்று…

  • வளரும் ஆசிய நாடுகளை விட இந்தியாவில் வட்டிவிகிதம் அதிகம்!

    ஆசியாவில் உள்ள வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களுடன் (EMEs) ஒப்பிடுகையில், ரிசர்வ் வங்கி தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 7.04% இலிருந்து 7.01% ஆகக் குறைந்துள்ளது, ஆனால் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட 2-6% ஐ விட அதிகமாக இருந்தது. பருவமழையின் போது பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயரும் என்பதால், CPI பணவீக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்டில் நடக்கவிருக்கும் கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ரெப்போ…

  • கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது! பெட்ரோல் விலை?

    ஆரம்ப ஆசிய வர்த்தகத்தில், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களில் அமெரிக்க இருப்புத் தரவுகள் அதிகரித்திருப்பதைக் காட்டியதால், புதன்கிழமை எண்ணெய் விலை குறைந்துள்ளது. ப்ரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் $98.81 ஆக இருந்தது. யுஎஸ் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் $95.12 ஆக இருந்தது, இது மூன்று மாதங்களில் மிகக் குறைவு. வட்டி விகித உயர்வுகள் எண்ணெய் தேவையை பாதிக்கும் என்ற கவலையில் முதலீட்டாளர்கள் எண்ணெய் பங்குகளை விற்றுள்ளனர். முந்தைய அமர்வில் விலைகள் 7 சதவீதத்திற்கும்…

  • வேலைவாய்ப்பு குறைய வாய்ப்பு – சுந்தர் பிச்சை

    பணியமர்த்தல் மற்றும் முதலீடுகளின் வேகத்தை கூகுள் 2023 ஆம் ஆண்டுக்குள் குறைக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மின்னஞ்சலில் தெரிவித்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்துள்ள கூகுள், பொருளாதார நிச்சயமற்ற இந்த காலகட்டத்தில் பணத்தை எங்கு செலவிடுகிறது என்பது குறித்தும் அதிக கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார். ” ஆண்டு முழுவதும் பணியமர்த்தும் வேகத்தை நாங்கள் குறைப்போம்” என்று தனது மின்னஞ்சலில் சுந்தர் பிச்சை தெரிவித்தார். இந்த ஆண்டு இதுவரை…

  • விஜய் மல்லையாவுக்கு நான்கு மாத சிறைத்தண்டனை?!

    நீதிமன்ற உத்தரவுகளை மீறி 40 மில்லியன் டாலர்களை வெளிநாட்டுக்கு மாற்றிய விவகாரத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நான்கு மாத சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. அவரது நிறுவனத்தை கையகப்படுத்திய பிரிட்டிஷ் நிறுவனமான டியாஜியோவிடமிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து பணத்தை மாற்றுவதை நீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை நான்கு வாரங்களுக்குள் ஆண்டுக்கு 8% வட்டியுடன் திரும்பச் செலுத்த உத்தரவிட்டது. அவ்வாறு செய்யத் தவறினால் அவரது சொத்துக்களிலிருந்து பணத்தை மீட்டெடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.…

  • உரிம நிபந்தனைகளில் ‘விரிவாக்கம்’ – தொலைத்தொடர்புத் துறை

    உரிம நிபந்தனைகளை, தொலைத்தொடர்புத் துறை (DoT) மேலும் கடுமையாக்கியுள்ளது. ஆபரேட்டர்கள் “நம்பகமான ஆதாரங்களின்” ஒப்புதலுடன் விற்பனையாளர்களிடமிருந்து உபகரணங்களை நெட்வொர்க் மேம்படுத்தல் மட்டுமின்றி விரிவாக்கத்திற்கும் பயன்படுத்துவதை கட்டாயப்படுத்தியுள்ளது. உரிம நிபந்தனைகளில் ‘விரிவாக்கம்’ என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ”நெட்வொர்க்கின் விரிவாக்கம்” என்ற போர்வையில் இரண்டு சீன விற்பனையாளர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதாக அரசாங்கத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இது உரிம நிபந்தனைகளின் கீழ் இல்லை. சமீபத்திய மாற்றங்கள் நடப்பு வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்களை (AMC) பாதிக்காது என்று அரசாங்கம்…

  • வீட்டிலிருந்து வேலை – சட்டத்திற்கு செனட் ஒப்புதல்?

    நெதர்லாந்து நாட்டு பாராளுமன்றம், வீட்டிலிருந்து வேலை செய்வது சட்டப்பூர்வ உரிமை என்று மசோதாவை நிறைவேற்றியது. சட்டத்திற்கு செனட் ஒப்புதல் கிடைத்தால் வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு உரிமையாக மாறும். தற்சமயம், நெதர்லாந்தில் உள்ள முதலாளிகள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி மறுத்தால் அதற்கான போதுமான காரணங்களைக் கூற வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்வதை சட்டப்பூர்வ உரிமையாக்குவதற்கான மசோதா, 2015 ஆம் ஆண்டின் பணிச் சட்டத்தின் திருத்தமாகும். தற்போதுள்ள சட்டம், ஊழியர்களின் வேலை நேரம் மற்றும்…

  • ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வுகளை வழங்க திட்டம் – விப்ரோ

    இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான விப்ரோ லிமிடெட், தனது ஊழியர்களின் போனஸ் மற்றும் இன்க்ரிமென்ட்களையும் ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளது பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனம், பெரும்பாலான பணியாளர்களின் சம்பளத்தை செப்டம்பரில் 10% உயர்த்தவும், சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் 15% க்கும் அதிகமான உயர்வுகளையும் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. திட்டங்களை உறுதிப்படுத்திய விப்ரோவின் செய்தித் தொடர்பாளர், நிறுவனம் “ஜூலை முதல் அதன் ஊழியர்களுக்கு பல பதவி உயர்வுகளை வழங்கும்” என்றார். டாடா…

  • உள்நாட்டு வர்த்தகர்கள் ரூபாயில் செய்வதற்கான ஏற்பாடு

    உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை ரூபாயில் செய்வதற்கான ஏற்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நடவடிக்கை, ரஷ்யாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளை விரைவுபடுத்தும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். முதன்மையாக நடப்புக் கணக்கு தொடர்பான வர்த்தகங்களுக்காக அந்நியச் செலாவணிக்கான தேவையைக் குறைப்பதை நோக்கமாக இந்த நடவடிக்கைகள் கொண்டுள்ளன என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். பிரேசில், ரஷ்யா இடையேயான வர்த்தகம் இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா (பிரிக்ஸ்) மற்றும்…