Category: காப்பீடு

  • இண்டஸ்இண்ட் வங்கியில் பங்குகளை உயர்த்தும் LIC !

    இண்டஸ்இண்ட் வங்கியில் தனது பங்குகளை உயர்த்திக் கொள்ள LIC, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்கிறது, வங்கியின் செய்திக்குறிப்பொன்றில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் சந்தையில் 1 சதவிகிதம் அதிகரித்து 961 ரூபாய்க்கு வர்த்தகமாகியது, இண்டஸ்இண்ட்டின் மொத்த பங்கு மூலதனமான 9.99 சதவீதத்தில் 4.95 சதவீத மூலதனப் பங்கை LIC நிறுவனம் தன் வசம்…

  • எல்ஐசி முதலீடுகள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் சரிவு !

    இன்னும் சில மாதங்களில் ஐபிஓ வெளிவர இருக்கும் நிலையில் எல்ஐசி நிறுவனம் பிற நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தது, அந்த முதலீட்டின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு கண்டிருப்பதாக ப்ரைம் இன்ஃபோபேஸ் நிறுவனம் கூறியிருக்கிறது அதாவது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் செய்த முதலீடு 2009 ஆம் ஆண்டு ஜூன்…

  • எல்ஐசி யில் அன்னிய முதலீட்டாளர்கள் ! – முழு விவரம் இதோ !

    நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது புதிய பங்குகளை வெளியிட இருக்கும் நிலையில், அதன் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளில் 20% வரை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்க வகை செய்யும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த…

  • உங்களிடம் காப்பீடு (insurance) இல்லையா? இன்றே தொடங்கவும்… எத்தனை வகையான காப்பீடுகள் உள்ளன? மற்றும் இதர விவரங்கள்!

    இன்றைய நாளில் காப்பீடு மிக முக்கியமாகிவிட்டது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (life insurance) என்பது காப்பீட்டாளரின் (insured) இறப்பின் போது இறப்பின் போதான  ஈட்டுப் பலன்களை (death benefits) வழங்குவதாக உறுதியளிக்கும் ஒப்பந்தம் (agreement). ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இறப்புக்குப் பிறகு பொருளாதார பாதுகாப்பை அளிப்பது. இரண்டாவது, பணத்தை அளிப்பதோடு, முதலீட்டையும் (investment) ஊக்குவிக்கும். முதலாவது, இறந்த பிறகுதான் பாதுகாப்பு அளிக்கும். மாறாக இரண்டாவது, குறிப்பிட்ட காலம் நிறைவடைந்த பின்னர் அல்லது…