Category: சந்தைகள்

  • சந்தை இன்று எப்படி தொடங்கியது?

    இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் எப்டி 17 ஆயிரத்து 550 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வாகனத் துறை பங்குகளில் சுமார் ஒரு சதவீதம் அளவிற்கு சரிவு காணப்படுகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடன்…

  • உச்சம் பெற்ற ஐடிசி பங்கு

    சிகிரெட் விற்பனை முதல் ஹோட்டல்கள் வரை நடத்தி வரும் பெரு நிறுவனம் ITC. இந்நிறுவன பங்கு வெள்ளி அன்று 2.1விழுக்காடு உயர்ந்துள்ளது. இதுவரை(கடந்த 52வாரங்களில்) இல்லாத புதிய உச்சமாக ஐ டி சி பங்கு விலை 320ரூபாய் 20காசுகள் ஆக உயர்ந்துள்ளது.. மேலும் இந்த பங்கு, சந்தை மதிப்பு அளவில் 4 லட்சம் கோடியாக ஏற்றம் பெற்றுள்ளது. ITC நிறுவன பங்குகள் கடந்தாண்டு மட்டும் 53.54%வளர்ச்சியும். இந்தாண்டு இதுவரை 47.58விழுக்காடும் விலை ஏற்றம் கண்டுள்ளது. நிப்டியில் சிறந்த…

  • இனி இதற்கு கட்டுப்பாடே இல்லை…

    விமான கட்டணங்கள் தொடர்பாக கடந்த மாதம் மத்திய விமான போக்குவரத்துத்துறை ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆகஸ்ட் 31 தேதிக்கு பிறகு கேப் எனப்படும் திட்டம் நீக்கப்படும் என்று கூறிப்பட்டது. கொரோனா காலத்தில் பயணிகள் இடம் இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டது. இது கடந்த 27மாதங்களாக நடைமுறையில் இருந்தது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் விமான கட்டணத்தை, விமான நிறுவனங்களால் அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. அதன்படி…

  • செப்டம்பர் 5-ல் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ipo வெளியீடு

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது புதிய பொது பங்கு வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 5- ம் தேதி முதல் அந்த நிறுவன பங்குகளை மக்கள் வாங்க முடியும். ஒரு பங்கின் விலை 500-525 ரூபாயாக இருக்குமென அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பங்குகளை வரும் 7-ம் தேதி வரை வாங்கிக்கொள்ள முடியும். மொத்தம் 1,58,40,000பங்குகள் மூலம் நிதி திரட்ட படுகிறது. ஒவ்வொரு பங்கின் அடிப்படை விலை 10ரூபாயாக உள்ளது. இந்த வங்கி நாட்டில் உள்ள பழமை…

  • வருவாய் இழக்கும் சில்லறை விற்பனை யாளர்கள்

    ரஷ்யா உக்ரைன் போர் தொடக்கத்தில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் விலை உச்சம் பெற்றுள்ளன. இந்நிலையில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் சில்லறை விற்பனையாளர்களுக்கு தரும் மார்ஜின் தொகை குறைவாக உள்ளது. இதனால் சில்லறை விற்பனையாளர்களுக்கு வரும் வருவாய் சரிந்தது வருகிறது. குறிப்பாக 77டாலர் ஒரு பேரல் கச்சா எண்ணெய் புதிய உச்சம் தொட்டது. இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் தவிர பிற நிறுவனங்கள் நஷ்ட ம் அடைந்துள்ளன. இந்த சூழலில் பல நாட்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பெட்ரோலிய…

  • OFS குறித்து IRCTC விளக்கம்

    மத்திய ரயல்வேயின் கீழ் இயங்கி வரும் irctc அமைப்பின் ofs திட்டத்தை, நிலையற்ற பங்குச் சந்தை சூழலால் அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக ஐ அர் சிடிசி விளக்கம் அளித்துள்ளது. அதில், எந்த முடிவையும் மத்திய அரசே எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கள் தரப்பில் முறையான தகவலை கேட்டு பெறாமல் செய்தி வெளியிடப்பட்டு உள்ளதாகவும் IRCTC தெரிவித்துள்ளது. முதலில் வெளியான தகவலின்படி IRCTC யின் 3 .5% பங்குகளை விற்று 3000கோடி ரூபாய்…

  • இந்தியாவில் ஜூலையில் டீசல் ஏற்றுமதி 11%சரிவு

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பெட்ரோலிய பொருட்கள் பற்றி பெட்ரோலிய திட்டம் மற்றும் ஆய்வு அமைப்பான ppac கண்காணிக்கிறது. அதன் தரவுப்படி இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 2 புள்ளி 45 மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் சென்ற நிலையில் , மத்திய அரசு profit tax லிட்டருக்கு ரூபாய்6 விதித்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த கச்சா எண்ணெய் குறைந்து 2.18மில்லியன் டன்னாக ஜூலையில் சரிந்தது. பெட்ரோல் ஏற்றுமதியில் கூட இதன் தாக்கம் இருந்தது. இந்த…

  • மெய் நிகரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம்

    ரிலையன்ஸ் நிறுவனம் 45 ம் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று பகல் 2மணிக்கு நடக்கிறது. இன்றைய கூட்டத்தை 5சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதும் இந்த கூட்டத்தில் 5ஜி குறித்த அறிவிப்பு கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், அடுத்தகட்ட முதலீடுகள் குறித்தும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது. இவை தவிர ரிலையன்ஸ் குழுமம் அடுத்ததாக அடி எடுத்து வைக்க உள்ள ஹைட்ரஜன் திட்டம், சோலார் திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு…

  • தங்க பத்திரம் – தெரிந்து கொள்ள வேண்டியவை..!

    இந்தியா, கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக, அதிகமாக இறக்குமதி செய்வது தங்கத்தை தான். மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்தன. உதாரணமாக, இறக்குமதி வரியை உயர்த்துவது, தங்க காசு விற்பனையை தடை செய்வது உள்ளிட்டவை, எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லை. இந்நிலையில், தங்கத்தின் மீது முதலீடு செய்யும் பத்திரங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த தங்க பத்திரங்கள் மூலம் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வட்டி வழங்கப்படும், அதாவது ஆண்டுக்கு…

  • இந்தியாவிற்கு 30% தள்ளுபடியில் கச்சா எண்ணெய்

    இந்தியா உள்பட சில ஆசிய நாடுகளுக்கு 30 சதவீத எண்ணெய் தள்ளுபடியையும் நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தத்தை வழங்குவதையும் ரஷ்யா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ரஷ்ய எண்ணெய் மீதான ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளுக்கு விதிவிலக்கை உருவாக்குவது குறித்து G7 நாடுகளின் விவாதங்களைத் தடுக்க ரஷ்யா முயற்சிக்கிறது என்பதற்கான அறிகுறியாக இந்தப் பேச்சுக்கள் இருக்கலாம் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார். இந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் மும்பை மற்றும் புது தில்லிக்கு பயணம் செய்யும் போது ரஷ்யாவின்…