Category: செய்தி

  • தங்கம் வாங்க சிறந்த நேரமா?

    தங்கத்தில் முதலீடு செய்தால் பெரிய லாபம் ஈட்டலாம் என முதலீட்டாளர்கள் இந்தாண்டு எடுத்த முடிவு தலைகீழாக மாறிப்போய் உள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 14 விழுக்காடு இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலை வீழ்ந்துள்ளது. போர் மற்றும் கொரோனா உள்ளிட்ட பேரழிவான காலகட்டத்தில் தங்கம் புதிய உச்ச விலையை எட்டியது. அதாவது, கடந்த மார்ச் 2022-ல் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 69 டாலர்களாக இருந்தது. இந்தாண்டு…

  • ரூபாய்-ரியாலில் வர்த்தகம் நடத்த ஆயத்தம்

    இந்தியா-சவுதி அரேபிய நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அமெரிக்க டாலர்களுக்கு பதிலாக இந்திய ரூபாயில் வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரியால்-ரூபாய் இடையே வர்த்தகம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் சவுதியில் யுபிஐ முறை மற்றும் ரூபே கார்டுகளை அறிமுகப்படுத்த இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை…

  • கூகுளுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு…

    கொரோனா காலகட்டத்தில் செல்போன் செயலிகள் மூலம் கடன்பெறும் வசதி மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் வகை தொகை இல்லாமலும் எந்த விதிகளையும் பின்பற்றாமலும் சில கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்திருந்தன.  இந்த சூழலில் மோசடி ஆப்கள் மூலம் பணத்தை இழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசு பலமுறை அழைத்து எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூகுள் இல்லை என்றாலும்…

  • இப்படி செலவு செய்தால் என்ன செய்வது?

    இந்திய ரிசர்வ்வங்கி தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணங்களை அதிகளவில் விற்று வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2013-ம் ஆண்டு காலகட்டத்தை டேபர் டான்ட்ரம் என்று அழைப்பார்கள். குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் அதிக வெளிநாட்டு பணத்தை ரிசர்வ் வங்கி செலவழித்த்து அந்நாளில் விவாத பொருளானது. இந்நிலையில் டேபர் டான்ட்ரம் காலகட்டத்தை விட அதிக அளவில் அந்நிய கையிருப்பை ரிசர்வ் வங்கி செலவிடுவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டும் இந்தியா 38.8…

  • அமெரிக்க பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி

    அமெரிக்க பெடரல் ரிசர்வ், தங்கள் நாட்டு கடன் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக அறிவிக்க உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. நேற்று அமெரிக்க பங்குச்சந்தைகளில் 0.35% சரிவு ஏற்பட்டது. S&P 500 துறை பங்குகளில் பிரதான 11 பங்குகளில் 5 பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. சுகாதாரத்துறை பங்குகள் ஒன்றரை விழுக்காடு சரிந்துள்ளது. ஆற்றல் துறையில் 1 விழுக்காடு விலை வீழ்ச்சியும் காண முடிந்தது.பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் கடன் வட்டி விகிதத்தை நூறு…

  • பணத்தை வாரி இறைக்கும் அதானி….

    கடந்த மே மாதம் அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் நிறுவனங்களை வாங்க இருப்பதாக அதானி குழுமம் தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் தற்போது முடிந்துள்ளன. அதாவது, அம்புஜா மற்றும் ஏசிசி சிமென்ட் நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை ஹோலி சிம் என்ற நிறுவனம் தன்வசம் வைத்திருந்தது. இந்த சூழலில் ஹோலிசிம் நிறுவன பங்குகளை, பங்குச்சந்தை ஒழங்குமுறை அமைப்பான செபியின் விதிகளுக்கு உட்பட்டு என்டேவர் டிரேட் மற்றும் முதலீட்டு நிறுவனம் மூலமாக அதானி வாங்கினார். இந்த நிலையில் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில்…

  • டாலர் கெட் அவுட்: வெயிட் காட்டும் ரஷ்யா

    உலகின் பல நாடுகளும் அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே வர்த்தகம் செய்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போர் காரணமாக மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு ரஷ்யா ஆளாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாய் மற்றும் ரஷ்ய பணத்தில் வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய திட்டத்தை ரஷ்யா அறிவிக்க உள்ளது. ஏற்கனவே இந்திய ரூபாய்க்கு நிகராக ஈரானிய பணத்தில் இந்தியா வர்த்தகம் செய்து வருகிறது. இதற்கான பணிகளை பாரத ஸ்டேட் வங்கி செய்தது. இந்நிலையில் இதே பாணியிலான திட்டத்தை செயல்படுத்தும்…

  • ஒரு மீட்டிங்கை போட்டாத்தான் சரி வரும் போல இருக்கு!!!!

    இந்த மாத இறுதியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் சிஇஓக்களை சந்திக்க உள்ளார். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய நிலை, வளர்ச்சி குறித்து இந்த கூட்டத்தில் பேச உள்ளார். முக்கியமாக பட்டியலினத்தவர் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதிலும் குறிப்பாக பட்டியலினத்தவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட் அப் இந்தியா, பிரதமரின் முத்ரா யோஜ்னா,உள்ளிட்ட அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தின் போது பட்டியலினத்தவரின் தேசிய…

  • ரயில் பயணிகள் கவனத்திற்கு!!!

    3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் ரயிலில் பயணிப்பவர்களா நீங்கள், அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான். கொரோனா காலகட்டத்துக்கு முன்பு பொருளாதார வகுப்புகளில் 3வது பிரிவு ஏசி வகுப்புகளில் பயணித்தவர்களுக்கு ஒரு தலையணை, படுக்கை விரிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இடையில் இந்த வசதிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த சூழலில் தற்போது அவை மீண்டும் இந்த வாரத்தில் இருந்து வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. 3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் பயணிப்பவர்களுக்கு படுக்கை விரிப்புகள் அளிக்கப்படாமல் உள்ளது. மேலும்…

  • 12000 கோடி வந்துருக்கு!!!

    அமெரிக்க பொருளாதாரம் ஓரளவு சீரான வளர்ச்சி எட்டியுள்ளதை அடுத்து அந்நாட்டின் கடன் வட்டி விகிதம் உயர்வது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு 51 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக இருந்தது. கடந்தாண்டு அக்டபோர் முதல் இந்தாண்டு ஜூன் வரை மட்டும் மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஒரே…