-
இந்த நிறுவன பங்குகள் வைத்துள்ளீர்களா?.. ஜாக்பாட் உங்களுக்குத்தான்:
ஐடிசி நிறுவன பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம் வியாழக்கிழமை தொடங்கியதும். ஐடிசியின் ஒரு பங்கின் விலை 329 ரூபாய் 60 காசுகளாக இருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஐடிசி நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஐடிசி ஹோட்டல்களின் பங்குகள் தனியாக விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி தெரிவித்ததும், நாடு முழுக்க உணவு தானியங்களின் விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளதுமே ஐடிசி நிறுவன…
-
கூகுளுக்கே இந்த நிலையா?…
உலகம் முழுவதும் அறியப்பட்ட பெரிய நிறுவனம் கூகுள், இந்த நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 64 ஆயிரம் பேர் உலகின் பல நாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமாக ஆல்ப்பெட் நிறுவனம் உள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். அந்நிறுவனத்தின் வளர்ச்சி இவரின் தலைமையின் கீழ் அசுரவேகத்தில் உள்ளது.இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பங்கேற்றார்.…
-
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் எப்படி வேலை செய்கிறது? 2022 ஆம் ஆண்டில், சுகாதாரச் செலவு என்பது உங்கள் பாக்கெட்டில் ஒரு துளையை ஏற்படுத்தக்கூடிய ஒன்று; அதனால்தான் அந்த சூழலை சமாளித்துக்கொள்ள உங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான மருத்துவக் காப்பீட்டுக் கொள்கை தேவை. அத்தகைய மருத்துவக் காப்பீட்டுக் கொள்கை ஒன்றை வைத்திருப்பது, மருத்துவ அவசரநிலையுடன் வரக்கூடிய எந்தவொரு நிதி அழுத்தத்தையும் குறைக்கும் நிதிக் கவசமாக உதவுகிறது. மருத்துவ காப்பீடு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள +91 91500 87647 என்ற…
-
சந்தைக்கு இது புதுசோ புதுசு!!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐபோன் 14 சீரிஸ் வகை போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய நேரப்படி (7-9-2022) இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 புரோ மேக்ஸ், ஆப்பிள் அல்ட்ரா வாட்ச், ஆப்பிள் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 14 சீரிஸில் 4 போன்களும், 2 ஆப்பிள் வாட்ச்களும், நெக்ஸ்ட் ஜெனரேஷன் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டன. இதே போன்று, ஏ16 பயோனிக் சிப் உள்ளிட்டவையும்…
-
தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாகி கைது
தேசிய பங்குச்சந்தை NSEயின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ரவி நரைன். இவர் தலைமையில் நிர்வாகம் நடந்து வந்தபோது தேசிய பங்குச்சந்தையில் ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று இரவு அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 2009 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக இதுவரை தேசிய பங்குச்சந்தையின் முன்னாள்…
-
47% ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அனுமதியே இல்லையா-அதிர்ச்சி அறிக்கை
லான்செட் என்ற நிறுவனம் சுகாதார ஆய்வுகளில் உலகளவில் பிரபலமானதாக உள்ளது. இந்த நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் பிராந்திய சுகாதாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2019ம் ஆண்டு, இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களின் மருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 47 விழுக்காடு மருந்து நிறுவனங்களுக்கு மத்திய மருந்து கட்டுபாட்டு அமைப்பு அனுமதியே அளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்கொல்லி எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் குறித்த பட்டியலையும் அந்நிறுவனம்…
-
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல்…
வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றும் பணியை பாரின் எக்ஸ்சேஞ்ஜ் தளங்கள் செய்து வருகின்றன. முழுவதும் மின்னணு மயமான நிலையில் வகைதொகையில்லாமல் நிறுவனங்கள் புதிது புதிதாக இந்த பரிவர்த்தனைகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் தங்களிடம் பதிவு செய்யாத மோசடி ஏற்படுத்தும் வகையில் உள்ள 34 நிறுவனங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. Etp எனப்படும் இவ்வகை பரிவர்த்தனை தளங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை செலுத்த வேண்டாம் என்றும் ரசிர்வ் வங்கி எச்சரித்துள்ளது. Fema எனப்படும் வெளிநாட்டு…
-
“ஒரு நாள் மழையால 255 கோடி ரூபாய் நஷ்டம்”…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 30ம் தேதி பெரிய மழை கொட்டித் தீர்த்த்து. இதனால் பிரதான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள அவுட்டர் ரிங் ரோடு பகுதி திக்குமுக்காடியது. மோசமான வடிகால் வசதிகளால் இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் கட்டிடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வைத்திருப்போர் சங்கம் ஒரு கடிதத்தை முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் அளித்தனர். அதில் கடந்த 30ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர்…
-
எப்படி முடிந்தது சந்தை?
இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் நிறைவில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டின் நிஃப்டி 31 புள்ளிகள் சரிந்தும், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும், வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. வர்த்தகத்தின் முடிவில் டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தனர். அதேபோல் ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனங்கள் உயர்வுடன் இருந்தன. இன்றைய நிலவரம் படி நிஃப்டி 17,624 புள்ளிகள்…
-
பங்குதாரர்களுக்கு நூதனமாக நன்றி தெரிவித்த இந்திய நிறுவனம்
மெட்ரோ பிரான்ட்ஸ் என்ற நிறுவனம் காலணிகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்தாண்டு டிசம்பரில்தான் பங்குச்சந்தையில் அறிமுகமாகியது. இந்த நிறுவனம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த பங்குகளை விற்று முதலீடுகளை ஈட்டி காலணி வியாபாரத்தை ஜோராக செய்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் அந்த நிறுவனம், தங்கள் பங்குதார்ர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தங்கள் நிறுவனப் பொருட்களில் 15 விழுக்காடு தள்ளுபடி அளிப்பதாக கூறியுள்ளது. மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் காலணிகள், பெல்ட் உள்ளிட்டவற்றை பங்குதார ர்கள் வாங்கிக்கொள்ளலாம்,…