Category: செய்தி

  • கடுமை காட்டும் ஐடி நிறுவனங்கள்

    கொரோனா பெருந்தொற்றால் வீட்டிலேயே இருந்து பழகிய ஐடி ஊழியர்களுக்கு இது சற்று கசப்பான தகவல்தான்.., பெருந்தொற்று நேரத்தில் வகைதொகை இல்லாமல் ஆட்களை எடுத்துவிட்டோம் என பெரிய நிறுவனங்கள் வருத்தப்படுவதாக ஆய்வுக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை, சலுகைகள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழல் மாறிப்போய் தற்போது கொரோனாவுக்கு முன்பு இருந்ததைப் போல அலுவலகம் வர ஆரம்பித்துள்ளனர். இதனால்…

  • கார் பழுதுநீக்கும் நிறுவனத்தில் ஜப்பானிய வங்கி முதலீடு?

    2016ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனம் கோ மெக்கானிக் . பெரிய நிறுவனங்களின் தரத்தில் கார்களுக்கு பழுதுநீக்கும் பணியை, முன்னணி நிறுவனங்களை விட 40 விழுக்காடு குறைவான பணத்தில் சேவை வழங்கி வந்த இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் பிரபலமைடந்த்து. இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட் பேங்க் என்ற நிறுவனம் கோ மெக்கானிக்கிடம் கடந்த 9 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அதிக தொகை கொடுத்து கடந்தாண்டு முதலீடு செய்து சாஃப்ட் பேங்க்…

  • ஏர் இந்தியாவுக்காக 4 பில்லியன் டாலர் நிதி திரட்டும் டாடா-சன்ஸ்

    இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய கடனை சரி செய்யவும், விமான நிறுவனத்தை நவீனப்படுத்தவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தமாக 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 4 பில்லியன் டாலர் நிதியை ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிட் வகையில் திரட்ட…

  • காலேஜ் பக்கம் திரும்பும் ஐடி நிறுவனங்கள்…

    இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் தற்போது வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஐடி துறை பணிகளை செய்யும் ஊழியர்கள் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை என்றும் அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு அதிக ஊதியம் தரவேண்டியுள்ளதாகவும் பெரிய நிறுவனங்களே புலம்புகின்றனர். இந்த சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வீயூக்கள் அதிகப்படுத்த முயற்சித்து வருகின்றனர். முன்னணி நிறுவனமான காக்னிசண்டில் மட்டும் நடப்பாண்டில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் உரிய ஆட்கள் கிடைக்காமல் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆட்களை தேர்வு…

  • சந்தை இன்று எப்படி தொடங்கியது?

    இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் எப்டி 17 ஆயிரத்து 550 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வாகனத் துறை பங்குகளில் சுமார் ஒரு சதவீதம் அளவிற்கு சரிவு காணப்படுகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடன்…

  • டெட்டாலின் புதிய அவதாரம்..

    அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம்பிடித்து இருக்கும் பொருட்கள் பட்டியலில் டெட்டாலும் ஒன்று. அதுவும் கொரோனா சமயத்தில் இதன் பயன்பாடு அதிகம் இருந்தது.சந்தையில் தற்போது காத்ரேஜ் நிறுவன பொருட்கள் மற்றும் டெட்டால் ஆகியவற்றுக்கு தான் நேரடி போட்டி உள்ளது. இந்த சூழலில் பவுடர் to liquid வகை handwash சந்தையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள் டெட்டால் நிறுவனம். இது தொடர்பாக டெட்டால் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , 10 ரூபாய் முதல் கிடைக்கும் வகையில் இந்த பொருள்…

  • தனியார் வங்கியுடன் இணைகிறதா பெடரல் வங்கி??

    வாரத்தில் வர்த்தகத்தின் முதல் நாளில் பெடரல் வங்கியின் பங்குகள் அதிக விலைக்கு ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தையில் 52 வாரங்களில் இல்லாத வகையில் ஒரு பெடரல் வங்கி பங்கின் விலை. 129 ரூபாயாக இருந்தது. தனியார் வங்கியுடன் பெடரல் வங்கி இணைய உள்ளதாக வெளியான தகவல் காரணமாகவே இந்த விலையேற்றம் காணப்பட்டது. ஆனால், இது குறித்து பெடரல் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பெடரல் வங்கி எந்த தனியார் வங்கியுடன் இணையவில்லை என்றும், வெளியான…

  • இந்திய பணக்காரர்கள் வெளிநாடுகளில் சொத்து சேர்ப்பது ஏன்?

    இந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் சொத்து சேர்த்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி தரவுகளின் படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கு சொத்துகள் வாங்குவாரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. 2015இல் வெளிநாடு சென்று அங்கு சொத்து வாங்கியோர் அளவு சராசரியாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதே அளவு 2020-21 நிதியாண்டில் 12.7 பில்லியன் டாலர் ஆக உள்ளது. வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி அதன் மூலம் குடியுரிமை…

  • தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி IPO நிலை என்ன?

    தூத்துக்குடியை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இந்த நிறுவனம் தனது பங்கு வெளியீட்டை நேற்று தொடங்கியது. நாளை வரை பங்குகளை பொதுமக்கள் வாங்கிக் கொள்ள முடியும். ஒரு பங்கின் விலை 500-525 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளில் 0.83 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டு உள்ளன. வரும் 15ம் தேதி முதல் இந்த வங்கியின் பங்குகள் இந்திய பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும். மொத்தம் 1 கோடியே 58 லட்சம் ஈக்விட்டி…

  • மீண்டும் அனில் அம்பானியா?

    1995ம் ஆண்டு அப்போதைய ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்பட்ட நிறுவனம் ரிலையன்ஸ் பவர். பின்னர் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி சகோதரர்களுக்கு சொத்துக்களை பிரித்து கொடுக்கும் போது, ரிலையன்ஸ் பவர் நிறுவனம் அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டது. துவக்கத்தில் அட்டகாசமாக இயங்கிய நிறுவனம் காலப்போக்கில் கடும் கடனில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் varde partners என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வாங்கியுள்ள கடனுக்கான தொகையான 1,200…