Category: செய்தி

  • ஆடு வளர்ப்பில் 100 கோடி முதலீடு செய்யும் தைரோ கேர் நிறுவனர்

    தைரோ கேர் நிறுவனத்தை டாக்டர் ஆரோக்கிய சாமி வேலுமணி 1996முதல் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தற்போது ஆடு வளர்ப்பு சார்ந்த தொழிலில் குறைந்தது 100 கோடி ரூபாயை முதலீடு செய்ய டிவிட்டரில் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் 10வயதில் ஆடு வளர்க்கும் தொழிலில் தோற்று விட்டதாக கூறியுள்ளார். ஆடு வளர்ப்பு தொடர்பான வணிகம் பற்றி அறிந்துகொள்ள சிக்க பல்லார்பூர் சென்ற போது பல நாட்களாக வளர்ந்த…

  • தங்க பத்திரம் – தெரிந்து கொள்ள வேண்டியவை..!

    இந்தியா, கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக, அதிகமாக இறக்குமதி செய்வது தங்கத்தை தான். மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்தன. உதாரணமாக, இறக்குமதி வரியை உயர்த்துவது, தங்க காசு விற்பனையை தடை செய்வது உள்ளிட்டவை, எதிர்பார்த்த அளவு பலன் தரவில்லை. இந்நிலையில், தங்கத்தின் மீது முதலீடு செய்யும் பத்திரங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த தங்க பத்திரங்கள் மூலம் தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வட்டி வழங்கப்படும், அதாவது ஆண்டுக்கு…

  • தள்ளிப்போகும் NDTV வருடாந்திர பொதுக்கூட்டம்

    இந்தியாவின் முதல் 24மணி நேரம் செய்தி சேனலாக பிரனாய் – ராதிகா ராய் தம்பதியால் தொடங்கப்பட்டது என்டி டிவி . தொடக்கத்தில் தூர் தர்ஷனுக்கு ஒப்பந்த அடிபபடையிலான சேவையை இந்நிறுவனம் வழங்கி வந்தது. தவிர்க்க முடியாத செய்தி சேனாலாக வளம் வரும் இந்நிறுவனத்தின் 29விழுக்காடு பங்குகளை அதானி குழுமம் அண்மையில் மறைமுகமாக வாங்கியது சர்ச்சை ஆனது. இந்நிலையில் மேலும் 26விழுக்காடு பங்குகளை வாங்க அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ndtv யின் 34வது ஆண்டு பொதுக்கூட்டம் வரும்…

  • வரும் வாரம் இந்திய பங்குச் சந்தைகள் எப்படி இருக்கப்போகிறது?

    அமெரிக்காவில் நிலவும் கடுமையான பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து துறை வட்டிகளையும் உயர்த்த வேண்டுமென அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் அண்மையில் கூறியிருந்தார். இது அந்நாட்டின் பங்குச்சந்தையில் தாக்கத்தை உண்டாக்கியது. இது மட்டுமல்லாமல் உலகளாவிய பங்குச்சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய பங்குச்சந்தையில் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த6 வாரங்களாக ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தையான நிப்டி, தற்போது திருத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்., வரும் வாரங்களில் இந்த…

  • கோதுமை மாவு, ரவை, மைதா ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு

    உலகிலேயே அதிக கோதுமை மற்றும் அது சார்ந்த பொருட்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் தான் ஏற்றுமதி செய்து வந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக கோதுமை ஏற்றுமதி தடைபட்டு உலகளவில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் இருந்தது. இந்தியாவிலும் கோதுமை பொருட்கள் விலையும் உயர்ந்தன. இதனை கட்டுப்படுத்த மே மாதம் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது மைதா, ரவை உள்ளிட்ட பொருட்களின் விலையும் இந்தியாவில்…

  • உங்க பட்ஜெட்ல இலவசங்களை நிறைவேத்துங்க:நிர்மலா சீதாராமன்

    நாட்டில் இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்காக நடந்து வரும் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அரசியல் கட்சியினர் இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது கடன் சுமைகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்பது போல நடந்துகொள்வதாக சாடினார். மேலும் அரசியல் கட்சியினரை விமர்சித்த நிர்மலா சீதாராமன் குறிப்பாக மின்துறை கடன் சுமை குறித்து பேசினார். இலவச மின்சாரம் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்து…

  • பணவீக்கத்தை எதிர்த்து ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துகிறது!!!

    பணவீக்கத்தை எதிர்த்து ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதால், மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலையின்மை அதிகரிக்கும் என்று அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார். வயோமிங்கில் மத்திய வங்கி மாநாட்டை ஆரம்பித்து வைத்து பவல் ஆற்றிய உரையில், பெடரல் வங்கியானது வளர்ச்சியைக் கட்டுப்படுத்த தேவையான அளவுக்கு அதிக விகிதங்களை உயர்த்தும், மேலும் மூன்றுக்கும் மேல் இயங்கும் பணவீக்கத்தைக் குறைக்க “சில காலத்திற்கு” அவற்றை அங்கேயே வைத்திருக்கும் என்று பவல் கூறினார். பணவீக்க பிரச்சனை…

  • பணவீக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் மத்திய வங்கிகள் சிறப்பாக செயல்படும்: ரகுராம் ராஜன்!!!

    மத்திய வங்கிகள், பணவியல் கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தால், பணவீக்கத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்று அமெரிக்காவின் வயோமிங்கில் நடைபெற்ற மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார். ரகுராமைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளில் மத்திய வங்கிகளால் அதிகம் செய்ய முடியாது. மாறாக, நேரடிக் கொள்கைகள் இத்தகைய சிக்கல்களை மிகச் சிறந்த முறையில் கையாள முடியும். அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலான பணவியல் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்த்ததை…

  • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் அல்ல: நிதியமைச்சர் சீதாராமன் !!!

    டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த கட்டணம் விதிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர், இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். முன்னதாக ஒரு ட்வீட்டில், UPI சேவைகளுக்கு எந்தவிதமான கட்டணங்களையும் விதிக்க அரசாங்கத்தில் எந்தப் பரிசீலனையும் இல்லை. செலவுகளை சேவை வழங்குநர்கள் மற்ற வழிகளில் சரி செய்ய வேண்டும்” என்று…

  • தனியுரிமைக் கவலைகள் காரணமாக வாடிக்கையாளர் தரவைப் பணமாக்குவதற்கான டெண்டரை IRCTC திரும்பப் பெறுகிறது

    ஐஆர்சிடிசி, தரவுகளைப் பணமாக்குவதற்கான ஆலோசகர் ஒருவரை பணியமர்த்தும் சர்ச்சைக்குரிய டெண்டரை திரும்பப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டத்திற்குப் பதிலாக நவீன டிஜிட்டல் தனியுரிமை விதிமுறைகளுக்கான விரிவான மசோதா வரும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். டிஜிட்டல் டேட்டாவை பணமாக்குதலுக்கான ஆலோசகர் பணியிடத்தை, ஐஆர்சிடிசி நிர்வாகிகளிடம் நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது. ஐஆர்சிடிசியின் எம்டியும் தலைவருமான ரஜ்னி ஹசிஜா மற்ற பிரதிநிதிகளுடன் குழு முன் சாட்சியம் அளித்தார். குழு விசாரணைக்கு முன்னதாக, ஐஆர்சிடிசி வருடாந்திர பொதுக்…