-
அடுத்து இதற்கு தான் பற்றாக்குறை வரும்
உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ள பொருட்களில் தற்போது அரிசி முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலையில் அரிசிக்கான தட்டுப்பாடு சர்வதேச அளவில் அதிகரிக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இந்தியாவில் ஏற்படும் மழை பற்றாகுறை காரணமாக, அரிசி விவசாயம் குறைத்து வருவது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் அரிசி விவசாயம் செய்யப்படும் விவசாய நிலங்களின் அளவு கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இந்தியாவில், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில்…
-
வியாழனன்று அதிகரித்த கச்சா எண்ணெய் விலை
வியாழனன்று எண்ணெய் விலைகள் அதிகரித்தன. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $ 97.20 ஆக உயர்ந்தும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 49 காசுகள்கூடி $91.15 ஆகவும் இருந்தது. கடந்த வாரம் கச்சா மற்றும் பெட்ரோல் கையிருப்பு எதிர்பாராத விதமாக அதிகரித்ததைக் காட்டிய பின்னர், OPEC+ நாடுகள் அதன் எண்ணெய் உற்பத்தி இலக்கை ஒரு நாளைக்கு 1,00,000 பீப்பாய்கள் (bpd) உயர்த்த ஒப்புக்கொண்டதால், முந்தைய அமர்வில் பிப்ரவரி முதல் உலகளாவிய எண்ணெய் தேவை பலவீனமான…
-
வட்டி விகிதங்களை உயர்த்தும் இங்கிலாந்து வங்கி
1995 ஆம் ஆண்டுக்குப் பிறகு வியாழன் அன்று இங்கிலாந்து வங்கி, வட்டி விகிதங்களை அதிக அளவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முதலீட்டாளர்களும், பொருளாதார வல்லுநர்களும், இங்கிலாந்து வங்கி அதன் பெஞ்ச்மார்க் விகிதத்தை அரை சதவிகிதம் அதிகரித்து 1.75% ஆக இருக்கும் என்று கணித்துள்ளனர். பிரித்தானியாவின் பணவீக்க விகிதம் 9.4% ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 15% ஆகலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 65 பொருளாதார வல்லுனர்களில் 70%…
-
தொலைத்தொடர்பு உபகரண நிறுவனங்களுடன் ஒப்பந்தம் – பார்தி ஏர்டெல்
புதன்கிழமையன்று பார்தி ஏர்டெல், தொலைத்தொடர்பு உபகரண நிறுவனங்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் இந்த நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இந்த சுதந்திர தினத்தில் நிறுவனம் ஆரம்பிக்கப்படலாம் என்று ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதுவரை ரிலையன்ஸ் ஜியோவுடன் மட்டுமே 4ஜி நெட்வொர்க்குகளை உருவாக்கி வந்த சாம்சங், தனது கூட்டாளரைத் தாண்டி மற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற முயல்வது இதுவே முதல் முறை. பார்தி ஏர்டெல்லின்…
-
Zomatoவின் பங்குகள் அனைத்தையும் விற்ற Uber
Uber நிறுவனம் ஸொமேட்டாவில் இருந்த அதன் 7.78 சதவீதப் பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்று வெளியேறியது. பிஎஸ்இ பகிர்ந்துள்ள தரவுகளின்படி, நிறுவனம் மொத்தமாக 61,21,99,100 பங்குகளை ரூ.50.44 க்கு விற்றது. ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட், ஃபிடிலிட்டி சீரிஸ் எமர்ஜிங் மார்கெட்ஸ் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் நிறுவனம் 5.44 கோடி பங்குகளை ரூ. 50.26க்கு கொடுத்து வாங்கியது என்று பங்குச் சந்தை தரவு காட்டுகிறது. ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஒரு பங்கு ரூ. 50.25 என்ற விலையில்…
-
இந்திய ரயில்வேயுடன் அமேசான் இந்தியா ஒப்பந்தம்
தனது டெலிவரி சேவைகளை அதிகரிக்க அமேசான் இந்தியா நிறுவனம், இந்திய ரயில்வேயுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் பேக்கேஜ்களை கொண்டு செல்ல முடியும் என்று அமேசான் இந்தியா கூறியது, வாடிக்கையாளர்களின் பேக்கேஜ்களை நாகர்கோவில், ரத்னகிரி, கர்னூல், பரேலி, பொகாரோ ருத்ராபூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்புகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் 1 அல்லது 2 நாட்களில் பேக்கேஜ்களைப் பெறலாம். அத்துடன் அமேசான் இந்தியாவின் துணை நிறுவனமான அமேசான் டேட்டா சர்வீசஸ் இந்தியா பிரைவேட்…
-
“வளர்ச்சி; ஆனால் வேலையின்மை வளர்ச்சி” – ரகுராம் ராஜன்
இந்தியப் பொருளாதாரம் அதன் பாதையில் மட்டுமல்ல, வேகமாகவும் இயங்குகிறது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ராய்ப்பூரில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “இந்த வளர்ச்சியின் பெரும்பகுதி வேலையின்மை வளர்ச்சியாகும்,” என்று கூறினார் கடந்த காலங்களில், இந்தியா தனது இளைஞர்களுக்கு கல்வி கற்பதற்கான திறனை உருவாக்காமல் தோல்வியடைந்துள்ளது. மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் உள்ளனர் என்று ராஜன் தெரிவித்தார். சீனாவின் உற்பத்தித்…
-
பெரும் பங்குகளை விற்ற Zomato முதலீட்டாளர்
Zomato லிமிடெட்டின் பங்குகளை, Uber ஒரு பிளாக் டீல் மூலம் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டீல் விதிமுறைகளின்படி பெயர் வெளியிடப்படாத (உபெர்) பங்குதாரர், தனது 612.2 மில்லியன் பங்குகளை ஒரு பங்கிற்கு ₹48-54 என்ற விலையில் விற்கிறார். பங்குகள் நிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும். ஜொமாட்டோவின் முன்கூட்டிய ஐபிஓ பங்குதாரர்களுக்கான 12 மாத லாக்-இன் ஜூலை 23 அன்று முடிவடைந்த பிறகு, பிளாக் வர்த்தகம் வருகிறது. Zomato இன் IPO ப்ராஸ்பெக்டஸ் படி, Uber க்கு பங்குகள்…
-
ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரிப்பு
ஜூலை மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 20 மாதங்களில் முதன்முறையாக 31.02 பில்லியன் டாலராக உயர்ந்தது என்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே உள்ள இடைவெளி-கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்ட $10.63 பில்லியன்களிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்ததுள்ளதாகவும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் செவ்வாயன்று வெளியிட்ட தரவு காட்டுகிறது. அதிகரிக்கும் பற்றாக்குறை, டாலருக்கு எதிராக அதிகரித்து வரும் ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 80.16…
-
நுகர்வோர் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு!
இந்தியாவின் நுகர்வோர் பொருட்கள் (FMCG) தொழில் 2022 ஆம் ஆண்டில் 8 முதல் 10 சதவீதம்வரை வளர்ச்சியடையக்கூடும் என்றும் பண்டிகைக் காலம் மற்றும் இரண்டாம் பாதியில் நல்ல பருவமழையின் உதவியால் இந்த வளர்ச்சி இருக்கும் என நீல்சென் ஐக்யூ நிறுவனம் கூறியது. பணவீக்கம் மற்றும் விநியோக சவால்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும், அடுத்த ஆறு மாதங்களுக்கு, விலை நிர்ணயம் வளர்ச்சியின் பெரும் பகுதியாக இருக்கும் என்றும் நீல்சன்ஐக்யூவின் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சதீஷ் பிள்ளை கூறினார். நகர்ப்புற சந்தைகள்…