Category: செய்தி

  • டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்பு

    வர்த்தக பற்றாக்குறை காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போது இல்லாத அளவாக 79 ரூபாய் 37 காசுகள் என்ற அளவிற்கு சரிந்துள்ளது. இதன் காரணமாக, இனி வரும் காலங்களில், ஒரு டாலரின் மதிப்பு சுமார் 82 ரூபாய் வரை சரியலாம் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து…

  • ஹெச்டிஎஃப்சி லிமிடெட்டை இணைக்க ஒப்புதலைப் பெற்றுள்ள HDFC வங்கி

    எச்டிஎஃப்சி வங்கி, அதன் தாய் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட்டை தன்னுடன் இணைக்கும் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்தியாவின் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய பரிவர்த்தனை என்று கூறப்படும், HDFC வங்கி, சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பில் HDFCயை கையகப்படுத்த ஒப்புக்கொண்டது. இந்த வார தொடக்கத்தில், பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய இரு பங்குச் சந்தைகளிலும் இந்த இணைப்பு ஒப்புதல் பெற்றது. முன்மொழியப்பட்ட நிறுவனம் சுமார் ரூ.18 லட்சம் கோடி மொத்த சொத்துக்களைக் கொண்டிருக்கும். FY24…

  • சமீபத்திய வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட வால்ட் கிரிப்டோ

    வால்ட் நிறுவனம் அதன் நிதி சவால்களை மேற்கோள் காட்டி, வர்த்தகம், டெபாசிட்கள் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தெரிவித்துள்ளது. மேலும், “உடனடி நடவடிக்கை எடுப்பது” பங்குதாரர்களின் “சிறந்த நலனுக்காக” இருக்கும் என்று அது கூறியது. Coinbase ஆதரவுடன், சந்தையின் சமீபத்திய வீழ்ச்சியால் அதிகாரப்பூர்வமாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கிரிப்டோ வால்ட் ஆகும். நிறுவனம் கடந்த மாதம் 30% ஊழியர்களை பணிநீக்கம் செய்தது

  • 67 ஐபிஓக்கள் ஒப்புதல் பெற்றதில், தொடங்கப்பட்ட IPO

    இதுவரை இந்த காலண்டர் ஆண்டின் முதல் பாதியில் 67 ஐபிஓக்கள் ஒப்புதல் பெற்றதில், பதினாறு ஐபிஓக்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில், 24 ஐபிஓக்கள் தொடங்கப்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை நடப்பு காலண்டர் ஆண்டில் 9 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளன. நடப்பு காலண்டர் ஆண்டில் பட்டியலிடப்பட்டுள்ள ஐபிஓக்கள் கலவையான போக்கைக் காட்டியுள்ளன. இரண்டாம் நிலை சந்தையின் பலவீனம் மற்றும் மதிப்பீட்டுக் கவலைகள் காரணமாக பாதி பங்குகள் அவற்றின் வெளியீட்டு விலைக்குக் கீழே வர்த்தகம்…

  • அனுமதியின்றி சேவைக் கட்டணம் – நுகர்வோர் ஆணையம் எச்சரிக்கை

    வாடிக்கையாளர் ஒப்புதல் இல்லாமல் சேவைக் கட்டணத்தை பில்லில் சேர்ப்பதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடைவிதித்தது. ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர் அனுமதியின்றி சேவைக் கட்டணத்தைச் சேர்ப்பதைத் தடுக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளரிடம் இருந்து சேவைக் கட்டணத்தைக் கோர எந்த ஹோட்டல் அல்லது உணவகத்திற்கும் உரிமை இல்லை. உணவுக் கட்டணத்தில், மொத்தத் தொகையுடன் ஜிஎஸ்டியைச் சேர்ப்பதன் மூலம் சேவைக் கட்டணத்தை வசூலிக்க முடியாது என்பது உள்பட சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது…

  • பண மோசடி வழக்கில் சிக்கிய சரவணா கோல்டு பேலஸ்

    சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 234 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தொழில் பயன்பாட்டிற்காக, இந்தியன் வங்கியில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் 150 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அதே ஆண்டில் மேலும் 90 கோடி ரூபாய் கூடுதல் கடனாக பெறப்பட்டு உள்ளது. இந்நிலையில், முதலில் வாங்கிய கடன் தொடர்பான சொத்துக்களை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதாகவும், இரண்டாவதாக பெறப்பட்ட 90…

  • தங்கம்- விலை அதிகரிக்க வாய்ப்பு?!

    தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரித்துள்ள நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவும் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. தங்கத்தைப் பொறுத்தவரை உலகிலேயே அதிக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான மொத்த வரி 10 புள்ளி 75 சதவீதமாக இருந்தது. கொரோனா வைரஸ் தொடங்கியதில் இருந்து இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்த நிலையில்,…

  • நலத்திட்டங்களை செயல்படுத்த உதவும் உணவு தானியங்கள்

    பொது விநியோக முறையின் மூலம் உணவுப் பாதுகாப்பை வழங்குவதற்கும், அனைவருக்கும் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்கும் கோதுமை, அரிசி மற்றும் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பொதுவாக ’தானியங்கள் இருப்பு’ பராமரிக்கப்படுகிறது. இது வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற அவசர காலங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்து, அரசாங்கத்தின் நலத்திட்டங்களை செயல்படுத்த உதவுகிறது. விலை ஸ்திரத்தன்மையை எளிதாக்குவதற்கும் பராமரிப்பதற்கும், உணவுப் பணவீக்கத்தை குறைந்த மட்டத்தில் வைத்திருப்பதற்கும் அவை அரசாங்கத்திற்கு உதவுகின்றன. மோசமான சந்தை…

  • FY22 இல் GST இழப்பீடு இல்லாமல் நிர்வகிக்க வாய்ப்பு

    ஜூன் காலாண்டில் ஒரு மாதத்திற்கு சராசரியாக ₹1.51 டிரில்லியன் என்ற வலுவான சரக்கு மற்றும் சேவை வரி (GST) யினை நெருங்குகிறது என்று நிதித்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். சராசரி மாத ஜிஎஸ்டி வசூலான ₹1.51 டிரில்லியன் ஒரு வருடத்திற்கு முன்பு இதே நேரத்தில் வசூலித்ததை விட 37% முன்னேற்றம் அடைந்துள்ளது. FY22 இல் ₹14.8 டிரில்லியன் வசூல் என்பது 2021 நிதியாண்டில் வசூலிக்கப்பட்டதை விட 30% அதிகமாகும், இது GST இழப்பீடு இல்லாமல் மாநிலங்களால்…

  • அரசு நடத்தும் நிறுவனங்களின் சொத்து விற்பனை

    அரசு நடத்தும் நிறுவனங்களின் திட்டமிடப்பட்ட முதலீட்டை தாமதப்படுத்துவதால், அரசாங்கம் அதன் சொத்து விற்பனை இலக்கை மீண்டும் அடையத் தவறக்கூடும். ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பிஇஎம்எல் லிமிடெட், என்எம்டிசி லிமிடெட்டின் நகர்னார் ஆலை, சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL), பவன் ஹான்ஸ் மற்றும் கான்கார் ஆகியவற்றின் முதலீடுகள் தாமதமாகிவிட்டன. லீசிங் லிமிடெட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேஷனின் மும்பை தலைமையகமான ஷிப்பிங் ஹவுஸ், போவாயில் உள்ள பயிற்சி நிறுவனம் மற்றும் வேறு சில சொத்துக்கள் விற்கப்படாது, ஆனால்…