Category: செய்தி

  • அதிக வட்டிவிகிதம் தரும் சேமிப்புத் திட்டங்கள்

    அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதாலும், அவை பங்குச் சந்தை இயக்கத்திற்கு உட்பட்டவை அல்ல என்பதாலும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பாதுகாப்கானவை என்று மக்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருமான விகிதத்தைக் கொண்டுள்ளன. பல தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள், வங்கிகளை விட அதிக வட்டியை வழங்குகின்றன. பொது வருங்கால வைப்பு நிதி 7.1 சதவீதமாகவும், தேசிய சேமிப்பு சான்றிதழ் 6.8 சதவீதமாகவும், சுகன்யா சம்ரித்தி யோஜனா…

  • தயாரிப்பில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் : மாருதி

    மத்திய அரசின் கொள்கை காரணமாக சிறிய கார் தயாரிப்பில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டோம் என்று மாருதி நிறுவனத்தின் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு, காரில் பயணம் செய்யும் பயணிகளுக்காக 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவுள்ளாதாக தெரிவித்தது. இதனால் கார்களின் விலை இன்னும் அதிகரிக்குமே தவிர சாலை விபத்துக்கள், அதனால் ஏற்படும் மரணங்களை தவிர்க்க முடியாது என்று பார்கவா தெரிவித்தார். மேலும் இந்த கொள்கை முடிவினால் இந்தியப் பங்குச்…

  • அதானி பவர் பங்குகள் – மல்டிபேக்கர்

    அதானி பவர் பங்குகள், 2022 இல் இந்தியப் பங்குச் சந்தை உற்பத்தி செய்த மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாகும். NSE இல் அதானி பவர் பங்கின் விலை சுமார் ₹101 முதல் ₹270 வரை உயர்ந்துள்ளது, 2022 இல் சுமார் 165 சதவீத உயர்வைப் பதிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த அதானி குழுமப் பங்கு சுமார் ₹16ல் இருந்து ₹270க்கு உயர்ந்து, அதன் பங்குதாரர்களுக்கு சுமார் 1600 சதவீத லாபத்தை அளித்துள்ளது. அதேபோல், கடந்த ஓராண்டில்,…

  • அடுத்த மாதம் முதல் தடை – சுற்றுச்சூழல் அமைச்சகம்

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு (SUP) அடுத்த மாதம் முதல் திட்டமிட்ட தடையை அமல்படுத்த அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு பணிக்குழுக்களை அமைத்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட SUP பொருட்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்கக்கூடாது என்றும், தடைசெய்யப்பட்ட SUP உற்பத்திக்கான யூனிட்களுக்கு செயல்படுவதற்கான ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த பொருட்களின் விற்பனையை மின் வணிக நிறுவனங்கள் நிறுத்துமாறும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. செவ்வாயன்று, அகில இந்திய…

  • 88 வயது ஒரு தடையில்லை. தொழில்முனைவோரான நாகமணி பாட்டி

    நீங்கள் முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்படியென்றால், இதை தீர்க்க கர்நாடகத்தைச் சேர்ந்த 88 வயதான நாகமணி உதவுவார். சிறுவயதில் இருந்தே தனது கூந்தல் பராமரிப்புக்கு வீட்டில் தயாரிக்கப்படும் எண்ணெயை உபயோகித்து வரும் மணி, நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஹேர் ஆயில் ஃபார்முலாவை கூறிவந்தார். பயனடைந்தவர்கள் பாராட்டவே, அவர் தனது 60 களின் பிற்பகுதியில் எண்ணெயை ஒரு வணிகமாக மாற்ற முடிவு செய்தார். ஆரம்பத்தில் தனது அருகில் உள்ள சலூன் கடைகளில் அதை விற்பனை செய்தார். பின்னர் கண்காட்சிகள் நடக்கும்…

  • விஜய் மல்லையா மீதான நடவடிக்கை என்ன?

    தொழிலதிபர் விஜய் மல்லையா மீதாக திவால் நடவடிக்கை வழக்கை இலண்டனில் உள்ள உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ’கிங்பிஷர்’ விமான நிறுவனத்திற்கு கடன் கொடுத்த 12 இந்திய வங்கிகள், நிறுவனம் திவாலானவுடன் கொடுத்த கடனை கேட்டு மல்லையாவிற்கு நெருக்கடி கொடுத்தன. அதனால் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். மல்லையாவிற்குக் கடன் கொடுத்த வங்கிகளும், ஸ்டேட் பாங்க் தலைமையிலான சொத்து மறுசீரமைப்பு நிறுவனமும் தங்களுக்கு 1பில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 9,662 கோடி) கடனை வட்டியுடன் சேர்த்து, கட்ட வேண்டும்…

  • IPO பொதுப் பங்குகள் மூலம் திரட்டப்பட்ட ரூ.40,311 கோடி

    இந்த காலண்டர் ஆண்டில் மே மாதம் வரை 16 நிறுவனங்களால் ஆரம்ப பொதுப் பங்குகள் மூலம் ரூ.40,311 கோடி திரட்டப்பட்டுள்ளது என்று ப்ரைம் டேட்டாபேஸ் தரவுகளின்படி தெரிய வந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் திரட்டப்பட்ட ரூ.17,496 கோடியை விட 43 சதவீதம் அதிகம். இந்த ஆண்டு இதுவரை 52 நிறுவனங்கள் தங்கள் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸை (DHRP) சந்தைக் கட்டுப்பாட்டாளரிடம் தாக்கல் செய்துள்ளன. 2007-க்குப் பிறகு இதுவே அதிகபட்சமாகும் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.…

  • இன்னும் முகேஷ் அம்பானி தான் ராஜா

    இன்னும் முகேஷ் அம்பானி தான் ராஜா அரியாசனத்தை விட்டு கொடுக்காத முகேஷ்… திருபாய் செய்த தவறில் இருந்து முகேஷ் கற்ற பாடம்… முகேஷ் அம்பானி தனது சாம்ராஜியத்தின் முக்கிய பகுதியான ஜியோவின் தலைவராக, தனது மகன் ஆகாஷ் அம்பானியை அறிவித்துள்ளார். இது முகேஷ் அம்பானியின் மகன்கள் மற்றும் மகள் இடையே எந்த பிரச்சனையும் வந்து விடாமல் பார்த்து கொள்ளும் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு தன் வாரிசுகளுக்கு மாற்றப்படும் என்ற பேச்சு…

  • இன்றைய(28.6.22) தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்

    கடந்த சில நாட்களாகவே, தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 10 ரூபாய் அதிகரித்தோ, அல்லது குறைந்தோ வர்த்தகம் ஆகி வந்த நிலையில், இன்றும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து, 5 ஆயிரத்து 164 ரூபாய் என்ற அளவிலும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து, 41 ஆயிரத்து 312 ரூபாய் என்ற நிலையிலும் உள்ளது. அதே போல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ஆயிரத்து…

  • இந்திய பங்குச்சந்தை நிலவரம்

    இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தில் சரிவுடன் இருந்த நிலையில், வர்த்தகத்தை நிறைவு செய்யும் போது, சற்று உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. காலையில் சரிவுடன் இருந்த சந்தை, ஐரோப்பிய சந்தைகளும், ஆசிய சந்தைகளும் சற்று அதிகரித்து வர்த்தகம் ஆனதால், மாலையில் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போதைய நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து, 53 ஆயிரத்து 177 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி, 18…