-
ஆச்சி மசாலாவை வாங்குகிறதா ரிலையன்ஸ்?
ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் FMCG எனப்படும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சந்தையில் அதிகம் விற்கப்படும் பொருட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரீட்டெய்ல் பிரிவை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி கவனித்து வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்கள் ரீட்டெயில் நிறுவனத்தில் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் பணியாற்றி வருவதாக ஈஷா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மசாலா பொருட்கள் விற்பனையில் ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனம் தனது பார்வையை திருப்பியுள்ளது. இது வரை…
-
வோடபோனுக்கு அடிக்கும் ஜாக்பாட்…
மத்திய வரைவு தொலைத்தொடர்பு சட்ட மசோதா டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அதீத கடனில் மூழ்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுநாட்டில் உள்ள 3 பிரதான செல்போன் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 3ம் கடன் பெற்று தொலைதொடர்பு சேவைகளை அளித்து வருகின்றன. எனினும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வரும் நிலையில் அதீத கடனில் தள்ளாடும் வோடபோன் ஐடியாவுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை…
-
மகேந்திரா பைனான்சின் வாராக்கடன் அதிகரிக்க வாய்ப்பு….
வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் வாங்க நிதி அளித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று மகேந்திரா அன்ட் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கடன் மீட்புப் பிரதிநிதியாக செயல்பட்ட நபர் ஒருவர் ஜார்க்கண்டில் பெண் விவாசாயியை டிராக்டர் ஏற்றி கொன்றுவிட்டதாகவும், அவர் 3 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து களமிறங்கிய ரிசர்வ் வங்கி, கடந்த வியாழக்கிழமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 3-ம் நபரை வைத்து பணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை…
-
டிசிஎஸ் ஊழியர்களுக்கு எச்சரிக்கை …
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் எல்லா பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தனர். இதன் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி நிறுவனமும் இதனை வலியுறுத்தினர். இந்த நிலையில் அண்மையில் டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களை மீண்டும் அலுவலகம் வர அழைத்துள்ளனர். பல முறை வலியுறுத்தியும் டிசிஎஸ் நிறுவன ஊழியர்கள் அலுவலகம் வர மறுத்து அடம்பிடித்துள்ளனர். இந்த சூழலில் அண்மையில் டிசிஎஸ் தனது பணியாளர்களுக்கு கடினமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், வாரத்தில்…
-
2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அந்நிய பண கையிருப்பு
இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மிக அதிகபட்சமாக குறைந்திருந்தது. அதன் பிறகு ஒரு அளவுக்கு நிலைமை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து 7வது வாரமாக இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு சரிந்து வருகிறது. செப்டம்ர் 16ம் தேதி வரை நாட்டின் மொத்த வெளிநாட்டு பண கையிருப்பின் அளவு 545 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த வாரம், அதாவது செப்டம்பர் 9ம் தேதி வரை 550 பில்லியன்…
-
சீனக்கடன் செயலிகள் இந்திய பணத்தை சுருட்டுவது எப்படி?
அண்மையில் இந்தியாவின் பிரபல தனியார் வங்கி ஒன்று வெளிநாட்டில் வணிகர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் இணைந்து. வர்த்தகம் மேற்கொள்ளவும் ஒரு பேமெண்ட் கேட்வே உடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் சந்தேகம் அடைந்த வங்கி பேமண்ட கேட்வேவின் தொடர்புகளையும், மென்பொருளையும் பார்த்தால் அது போலியானவை என்பது தெரியவந்தது. சீனாவில் இருந்து இயங்கும் மோசடி செயலிகள், முதலில் இத்தகைய போலி கேட்வேகளை அமைத்து அதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை திருடுவது தெரியவந்துள்ளது. போலி நிறுவனங்கள் மூலம் இப்படி பாதுகாப்பு இல்லாமல்…
-
வடமாநிலங்களை விட தென் மாநிலங்கள் ஏன் சிறந்தவை…
உலகப்புகழ் பெற்ற பிபிசி நிறுவனம் இந்தியாவின் வடமாநிலங்களைவிட தென்மாநிலங்கள் ஏன் சிறந்தவை என புள்ளிவிவரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தென் மாநிலங்களில் தமிழகம்,ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு என முதலில் பட்டியலிடுகிறது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பு தென் மாநிலங்களில் மிகவும் குறைவு என்றும் வடமாநிலங்களில் குழந்தைகள் இறப்பு அதிகம் என்ற போதிலும் மக்கள் தொகை உயர்வு மிக அதிகமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம்,கேரளா…
-
கடினமான தருணத்துக்கு தயாராகும் அமெரிக்க பங்குச்சந்தைகள்….
அமெரிக்காவில் விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிரடி கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து வகையான கடன்களின் விகிதங்களும் கடுமையாக உயர இருக்கிறது. இந்த சூழலில் மக்களையும், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார். நூறு அடிப்படை புள்ளிகளை உயர்த்துவதற்கு பதிலாக 75 புள்ளிகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் விலைவாசி…
-
வாட்ஸ்ஆப்,சிக்னல் செயலிகளுக்கு கட்டுப்பாடு…
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தொலைதொடர்பு சட்டங்களில் மத்திய அரசு விரைவில் மாற்றங்களை கொண்டுவர உள்ளது. இதற்கான பிரத்யேக சட்ட முன்வடிவையும் மத்திய அரசு வடிவமைத்து வருகிறது. அதன்படி வாட்ஸ் ஆப்,சிக்னல் மற்றும் பிற ஓடிடி தளங்களின் தரவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வர உள்ளன. குரல்,வீடியோ,இணையதள தகவல் பரிமாற்றத்தையும் இந்த புதிய சட்டம் கண்காணிக்க அதிக வாய்ப்புள்ளது. தேவை ஏற்பட்டால் பிற செயலிகளையும் இந்த வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக…
-
இனி எல்லாம் 1 மணி நேரத்தில் ….
வரும் 2047ம் ஆண்டு உலகளவில் சரக்கு கையாள்வதில் இந்தியா 10% என்ற அளவை எட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. இதையொட்டி துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வரும் சரக்குகளை , வந்த ஒரு மணி நேரத்துக்குள் வெளியேற்றும் முறைக்கான பணிகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.இந்த திட்டத்துக்கு கஸ்டம்ஸ் ஒன் என்று பெயரிடப்பட்டுள்ளது 2047ம் ஆண்டு இந்தியா நூறாம் ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாட உள்ள நேரத்தில் இந்தியா வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்ட வேண்டும் என்ற நோக்குடன்…