Category: தொழில்நுட்பம்

  • கிரிப்டோகரன்சி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

    கிரிப்டோகரன்சி பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது குறித்து இந்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோ விவகாரத்தை வரைவாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளது. மேலும் கிரிப்டோ கரன்சி தொடர்பாக இந்திய அரசு நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கிரிப்டோகரன்சியில் இந்தியர்கள் அதிகமான அளவில் முதலீடு செய்து இருப்பதால் இன்றைய நிலையில் கிரிப்டோகரன்சியை இந்திய அரசால் தடை செய்ய இயலாது என்றும், இதனால் குறிப்பிட்ட சந்தை…

  • 08/11/2021 – ஏற்றத்துடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 318 புள்ளிகள் அதிகரித்து 60,385 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 123 புள்ளிகள் அதிகரித்து 18,040 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 100 புள்ளிகள் ஏற்றத்துடன்  39,674 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE SENSEX 60,385.76 60,067.62      (+) 318.14 + 0.52 NIFTY 50 18,040.20 17,916.80 (+) 123.40 + 0.68 NIFTY BANK…

  • இரண்டாம் காலாண்டில் 300 % லாபமீட்டிய ஏர்டெல் !

    மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செப்டம்பர் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 300 சதவீதம் அதிகரித்து ₹ 1734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹ 28,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் 5.4 சதவீதம் ஆகும். கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் இதன் வருவாய் ₹26,853 கோடி ரூபாயாக இருந்தது கடந்த ஆண்டில் ₹ 20,060 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது, இது அதன்…

  • துறைமுகங்களில் காத்திருக்கும் கப்பல்கள்! முடங்கும் விநியோகம்!

    கண்ட்டெயினர் தட்டுப்பாடு ஓரளவு சீரடைந்து வரும் வேளையில் உலக அரங்கில் புதிய சிக்கல் ஒன்று தலையெடுத்து வருவது பொருளாதார நிபுணர்களைக் கவலையடைய வைத்துள்ளது, உலகின் பரபரப்பான துறைமுகங்களில் நுழைவதற்காகக் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பெருந்தொற்றுக் கால நீண்ட முடக்கம் முடிவடைந்து கணினி முதல் கார்கள் வரை நுகர்வோர் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதால் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்பானது இந்தக் காத்திருப்பின் மூலமாக மேலும் சிக்கலை…

  • ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் முடக்கம் ! – 52 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பெர்க் !

    ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று தளங்களின் சேவைகளும் திங்களன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டது. குறிப்பாக இரவு ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக சேவையில் பாதிப்பு இருந்ததால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் முடங்கியதற்கு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பயனர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக மார்க் ஜுக்கர்பெர்க் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் மற்றும்…

  • பங்குச் சந்தை வணிகத்தில் “ஆல்கோஸ்” ஆப்களால் வரும் ஆபத்து !

    ஜூன் 2020 துவக்கத்தில் இருந்து பங்குச் சந்தை ஏற்றத்துடன் காளை ஓட்டத்தில் இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் எப்போதுமில்லாத அளவு சில்லறை முதலீட்டாளர்களை சந்தை ஈர்த்திருக்கிறது, அவர்கள் தங்கள் நேரம் மற்றும் பணத்தை மட்டும் செலவிடவில்லை, மாறாக பங்குச் சந்தை வணிகத்தில் பங்குபெறும் ஒரு நல்ல வாய்ப்பையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். ஒரு நாளில் 60,000 கோடி புழங்கும் பங்குச் சந்தையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு பல சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு குழுவாக இருந்து ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்க முடிகிறது.…

  • சிரிஞ்ச் தேவையை அதிகரித்த கோவிட் தடுப்பூசி!

  • ரிலையன்ஸ் “சூப்பர்-ஆப்” சவால்கள் நிறைந்தது – ஜெஃப்ரிஸ்

    “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் பல வாடிக்கையாளர் சேவைப் பிரிவுகளை ஒரு சூப்பர்-ஆப் மூலமாக ஒருங்கிணைக்க நினைக்கிறது, ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல” என்று அமெரிக்க முதலீட்டு வங்கியும், நிதி நிறுவனமுமான ஜெஃப்ரிஸ் கருதுகிறது. இந்த நிறுவனம் நிதி சார்ந்த சேவைகள் தவிர அது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்கிறது, “வீ சேட்” (WeChat) மூலம் வணிகத்தை ஒருங்கிணைப்பதில் சீனா பெரிய வெற்றி அடைந்துள்ளது, “ரிலையன்ஸ் ரீடெய்ல்” அந்த மாதிரியைப் பின்பற்ற முயற்சி செய்கிறது,” என்று ஜெஃப்ரிஸ்…

  • ரயில்வே தடங்களில் ‘சோலார்’ பயன்பாடு ! ஆண்டுக்கு 7 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்கும் ! – ஆய்வு

    இந்திய அரசு சாரா நிறுவனமான ‘க்ளைமேட் டிரெண்ட்ஸ்’ மற்றும் இங்கிலாந்தை மையமாகக் கொண்ட பசுமை தொழில்நுட்ப துவக்க நிறுவனமான ‘ரைடிங் சன்பீம்ஸ்’ இணைந்து ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டன. இந்த ஆய்வின்படி, இந்திய ரயில்வே பாதைகளில் சூரிய ஒளி ஆற்றலை நேரடியாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 7 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்க முடியும் என்றும், அதே வேளையில், போட்டி அடிப்படையில் தேசிய நெட்வொர்க்கில் இயங்கும் நான்கு ரயில்களில் ஒரு ரயிலின் உமிழ்வையாவது…