-
வருமான வரி செலுத்துபவரா நீங்கள் ! நல்ல செய்தி உங்களுக்கு !
வருமான வரி தாக்கலின் போது எந்த பிழையும் ஏற்படாதவாறு நாம் கவனமாக இருப்போம். வங்கி எண்ணை தவறாக குறிப்பது, இதர வருமானங்களிருந்து இருந்து வரும் வட்டியைக் குறிப்பிட மறப்பது மற்றும் தவறான தள்ளுபடி மதிப்புகளைக் குறிப்பிடுவது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வோம். ஆனால் ஒருவேளை அப்படி நடந்தால்? கவலைப்பட வேண்டாம், இப்போது அப்படியான தவறுகளை நிவர்த்தி செய்யலாம். வருமான வரி சட்டம் அதை அனுமதிக்கிறது. ஒருவேளை நீங்கள் வருமான வரி தாக்கல் செய்த பின்பு, அதில்…
-
03/11/2021 – தொடர்ந்து ஏறுமுகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 246 புள்ளிகள் அதிகரித்து 60,275 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 59 புள்ளிகள் அதிகரித்து 17,947 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 102 புள்ளிகள் ஏற்றத்துடன் 40,040 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE. CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 60,275.21 60,029.06 (+) 246.15 + 0.41 NIFTY 50 17,947.95 17,888.95 (+) 59.00 + 0.32 NIFTY BANK…
-
“ஓயோ” வின் ஐபிஓ வைத் தடை செய்யுமா செபி?
ஹோட்டல்களுக்கான நெறிமுறைகளை வகுக்கும், இந்திய விருந்தோம்பல் துறையின் தலைமை அமைப்பான எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ (FHRAI) தவறான தகவல்களை முன்வைத்ததற்காக ஓயோவின் (OYO) முன் மொழியப்பட்ட ஐபிஓவை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியைக் (SEBI) கேட்டுக் கொண்டுள்ளது. செபிக்கு, எஃப்.எச்.ஆர்.ஏ.ஐ (FHRAI) அனுப்பியுள்ள எட்டு பக்க அறிக்கையில், ஓயோ (OYO) ஹோட்டல் யூனிகார்னின் தாய் நிறுவனமான ஓரவெல் ஸ்டேஸ் ($1 பில்லியனுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டது), போட்டி-எதிர்ப்பு வணிக நடைமுறைகள் மீறல், நீதிமன்ற வழக்குகளின் விவரங்களை வெளியிடாமல்…
-
26/10/2021 – பெரிய மாற்றம் இல்லாத சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 30 புள்ளிகள் ஏற்றத்துடன் 60,997.90 ஆக இருந்தது, நிஃப்டி 50 குறியீடு 29 புள்ளிகள் ஏற்றத்துடன் 18,154.50 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 134 புள்ளிகள் அதிகரித்து 41,057.75 ஆக இருந்தது. INDEX OPEN CLOSE CHANGE CHANGE % SENSEX 60,997.90 60,967.05 + 30.85 + 0.05 NIFTY 50 18,154.50 18,125.40 + 29.10 + 0.16 NIFTY BANK 41,057.75 41,192.40…
-
₹5,511 கோடி நிகர லாபமீட்டிய ஐசிஐசிஐ வங்கி !
ஐசிஐசிஐ வங்கி தனது இரண்டாம் காலாண்டில் ஏறத்தாழ 25 % அளவு லாபம் ஈட்டியிருக்கிறது, வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6,092 கோடியாக உயர்ந்துள்ளது, முந்தைய காலாண்டில் வங்கியின் நிகர லாபமானது 4,882 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மொத்த வருமானம் ரூ.39,289.60 கோடியாக இருந்தது, தற்போது ரூ.39,484.50 கோடியாக உயர்ந்து ஓரளவு அதிகரித்துள்ளது என்று ஐசிஐசிஐ வங்கியின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டில் தனிப்பட்ட வங்கி செயல்பாடுகளின்…
-
இந்திய யூனிகார்ன்களுக்கு உண்மையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை – விவேக் கவுல்
நான் என் வாழ்க்கையில் 22 மாதங்களை வணிகப் பள்ளிகளில் வீணடித்திருக்கிறேன், குறைந்த அளவில் தான் அங்கே நிரந்தர ஆசிரியர்கள் இருந்தார்கள், புனே நகரின் எல்லா வணிகப் பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர்கள் தான் இருந்தார்கள், அவர்கள் ஃபிரீலான்ஸ் முறையில் வேலை செய்தார்கள், வணிகப் பள்ளிகளின் செலவுகளைக் குறைக்க இது பெருமளவில் உதவியது. வணிக மாதிரிகளைப் பொறுத்தவரை, இது பரிதாபகரமானது, வணிகப் பள்ளியைத் துவங்கியவர்களுக்கு அவர்கள் செய்த மூலதனத்தை ஒப்பிட்டால் மிக உயர்ந்த வருமானம் இருந்தது, இத்தகைய கற்பித்தல் முறை…
-
சேமிப்புக் கணக்குக்கும் (Savings A/C), நடப்புக் கணக்குக்கும் (Current A/C) என்ன வேறுபாடு?
வங்கிக் கணக்குகளில் பல்வேறு வகைகள் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தவரை சேமிப்புக் கணக்கும், நடப்புக் கணக்கும் அதிகப் பயன்பாட்டில் இருக்கும் கணக்குகளாகும்.இதை வைத்து ரிசர்வ் வங்கி (CASA RATIO) என்பதை கணக்கிடுகிறது. இந்த இரண்டு கணக்குகளைப் பற்றிய சில அடிப்படை விஷயங்களை நாம் தெரிந்து கொள்வோம். சேமிப்புக் கணக்கு (Savings A/C) : சேமிப்புக் கணக்கு (Savings A/C) என்பது ஒரு தனி மனிதரால் ஒரு வங்கியில் அவர்மட்டுமோ அல்லது வேறு ஒருவருடன் சேர்ந்தோ (Joint Account) ஆரம்பிக்கப்படும்…
-
GST தொடர்பாக அரசாங்கத்தை வறுத்தெடுத்த ஆர் சி பார்கவா, வேணு ஸ்ரீனிவாசன்; அரசின் பதில் என்ன?
அரசாங்கம் தான் சொன்னதைச் செய்யவில்லை என்று வாகன தொழில் உற்பத்தியின் ஜாம்பவான்கள் குற்றம் சாடியுள்ளனர். தில்லியில் நடந்த ஒரு தொழில்துறை நிகழ்ச்சியில் மாருதி சுஸுகியின் தலைவரான ஆர் சி பார்கவாவும் டிவிஎஸ் மோட்டார்ஸின் தலைவரான வேணு ஸ்ரீனிவாசனும் அரசாங்கம் ஆட்டோ துறைக்கு ஆதரவு தரும் நோக்கத்துடன்தான் செயல்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினர். இந்த உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்; பின்னர் அவரது முறை வந்தபோது பதில் அளித்தார். வரிகள்…