-
மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் பங்குகள் சரமாரியாக விற்கப்படுகின்றனவா?
-
8% க்கும் மேல் வீழ்ச்சியடைந்த சோமாட்டோ-வின் பங்கு – என்ன காரணம்?
சோமாடோ ஐபிஓ-வில் ஆன்கர் முதலீட்டாளர்களுக்கான 30 நாட்கள் வரையறுத்த காலப்பகுதி திங்கட்கிழமை முடிவடைந்த நிலையில் அதன் பங்கு விலை 10% வரை வீழ்ச்சியடைந்தது. ஆன்க்கர் முதலீட்டாளர் என்பவர் யார்? அமைப்புசார் முதலீட்டாளர்களுக்கு துவக்கநிலை பொதுவெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாகவே ஒதுக்கீடு அடிப்படையில், குறைந்தபட்ச முதலீடாக ரூ.10 கோடிக்கு செபியால் வரையறுக்கப்பட்ட சட்டதிட்டத்துக்குட்பட்டு பங்குகள் வழங்கப்படுகிறது, அவர்களுக்கு அந்த பங்குகளை மறு விற்பனை செய்வதற்கான கால கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. பங்கு பொது வெளியில் வர்த்தகத்திற்கு வந்து 30 நாட்கள்…
-
“ஒழுங்குமுறைப்படுத்தப்படாத “டெரிவேட்டிவ்” நிதித்திட்டங்களில் வர்த்தகம் செய்ய வேண்டாம்” – பங்குச் சந்தை வணிகர்களுக்கு, இந்திய பங்குச் சந்தைகள் விடுக்கும் எச்சரிக்கை
“டெரிவேட்டிவ்” என்பது சொத்து, குறியீடு, பொருள் அல்லது வட்டி போன்றவற்றின் அடிப்படையிலான சந்தை செயல்திறனில் இருந்து அதன் மதிப்பைப் பெறும் ஒரு ஒப்பந்தமாகும். இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளான தேசிய பங்குச் சந்தையும், மும்பை பங்குச் சந்தையும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத டெரிவேட்டிவ் நிதித்திட்டங்களில் வர்த்தகம் செய்ய வேண்டாம் என எச்சரித்திருக்கிறது, குறிப்பாக “பைனரி ஆப்ஷன்ஸ்” மற்றும் “காண்ட்ராக்ட்ஸ் ஃபார் டிஃபரென்ஸ்” (CFD) போன்ற திட்டங்களை குறித்து பங்குச் சந்தைகள் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன. வழக்கமான பங்குச் சந்தையில் பரிவர்த்தனை…
-
₹40,000 கோடியை திரட்ட ஒப்புதல் கோரும் டாடா சன்ஸ்! ஏன்?
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின் படி, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் உட்பட பத்திரங்கள் மூலம் ரூ 40,000 கோடி வரை நிதி திரட்ட பங்குதாரர்களின் ஒப்புதலை கோரியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இணையவழி நடைபெறும் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் செப்டம்பர் 14 அன்று பங்குதாரர்கள் இந்த முன்மொழிவுக்கு வாக்களிக்கயிருக்கிறார்கள். இந்த தீர்மானம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், நிறுவனம் அதன் வளர்ச்சித்திட்டங்களுக்கு தேவைப்படும்போது சந்தையின் வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொள்ள இந்த தொகை…
-
அதானி வில்மரின் ₹4,500 கோடி IPO-வை தற்காலிகமாக நிறுத்தி வைத்த SEBI!
-
வங்கிக் கடன் மோசடி: “கார்வி” நிறுவனத் தலைவர் கைது!
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான “கார்வி ஸ்டாக் ப்ரோக்கிங் லிமிடெட்” நிறுவனத் தலைவர் சி பார்த்தசாரதி வங்கிக் கடன் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். பார்த்தசாரதி, “இண்டஸ்இண்ட்” வங்கியின் மூலம் வாங்கிய கடன் தொகையை தன்னுடைய வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மடை மாற்றி இருப்பதாக காவல்துறை இணை ஆணையர் (புலனாய்வுத் துறை) அவினாஷ் மொஹந்தி தெரிவித்தார். “இண்டஸ்இண்ட்” வங்கி அளித்திருக்கும் புகாரில், கார்வி நிறுவனமானது, வாடிக்கையாளர்களின் பிணைகள் மற்றும் பங்குகளை உரியவர்களின்…
-
சந்தை மூலதனத்தில் ₹ 13 ட்ரில்லியன் அளவைக் கடந்த TCS !
“டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்” (TCS) நிறுவனம், ₹ 13 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பைக் கடந்த, முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இரண்டாவதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (17-08-2021) அன்று பங்குச் சந்தைகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது புதிய உச்சத்தை எட்டியதற்குப் பிறகு இந்த வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. டாடா குழுமங்களின் ஒரு அங்கமான TCS நிறுவனத்தின் பங்கு, கடந்த 9 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து, சென்ற செவ்வாய்க்கிழமை சந்தை முடிவுறும்…
-
சந்தையின் புதிய ஏற்றங்களில் இன்சைட் டிரேடர்ஸின் பங்கு விற்பனை சூடு பிடிப்பது ஏன்?
“இன்சைட் ட்ரேடர்ஸ்” என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விற்பனை ஜூன் மற்றும் மே மாதங்களில் தலா ₹7000 கோடியாக இருந்தது. கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலைத் தாக்குதல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை திருத்தங்களுக்கு உட்பட்டது, இதன் காரணமாக “இன்சைட் ட்ரேடர்ஸ்” களின் விற்பனை ஓரளவு…
-
முதலீட்டாளர்களுக்குத் திருப்பியளிக்க 1981 கோடி தயார் – “பிராங்க்ளின் டெம்பிள்டன்” அறிவிப்பு
“பிராங்க்ளின் டெம்பிள்டன்” நிறுவனத்தின் பரஸ்பர நிதித் திட்டத்தின் கீழ் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட ஆறு கடன் திட்டங்களில் பரஸ்பர நிதி அலகுகள் வைத்திருந்தவர்களுக்கு 1981.02 கோடி பணம் திருப்பியளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது, ஏற்கனவே இந்த 6 திட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்பு, 23 ஏப்ரல் 2020-ல் முதலீட்டாளர்களுக்கு சந்தை மதிப்பின் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்திருந்த வாடிக்கையாளரின் முதலீட்டில் (AUM) 84% தொகையான ₹21,080.34 திருப்பி அளிக்கப்பட்டது. உபரியாக நிறுவனத்திடம் இருக்கும்…
-
IPO மூலம் ₹1,250 கோடியை திரட்ட முற்படும் வேதாந்தாவின் “ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன்”! எதிர்காலத் திட்டம் என்ன?
வேதாந்தா குழுமத்தின் நிறுவனர் அனில் அகர்வால் அவர்களின் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமான “ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன்”, IPO மூலம் ₹1,250 கோடி வரை திரட்டும் நோக்கில் தனது வரைவு தகவல் தொகுப்பான “ரெட் ஹெர்ரிங் ப்ரொஸ்பெக்ட்ஸ்” தொகுப்பினை சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் தாக்கல் செய்துள்ளது. இந்த வரைவு தகவலின்படி முதற்கட்ட பங்கு வெளியீட்டில் ரூ. 1250 கோடிகள் வரையிலான ஈக்விட்டி பங்குகளை விற்பனைசெய்யும், இதில் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பங்கு ஒதுக்கீடும் உள்ளடக்கியது. IPO மூலம்…