-
3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு ! பரபரப்பான பிரதமர் உரை !
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் நீக்கப்படும் என்று அறிவித்தார். “அனைத்து விவசாய சங்கங்களுடன் கலந்து ஆலோசித்துத்தான் விவசாய சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டம் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டது. இதுகுறித்து புரிய வைக்க நாங்கள் பல முயற்சிகள் செய்தோம். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஆகையால் வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த 3 மசோதாக்கள் திரும்பப் பெறப்படும்.…
-
இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்குத் தடை வருமா? அங்கீகாரம் கிடைக்குமா? திங்களன்று உயர் மட்டக் கூட்டம் !
கிரிப்டோகரன்சி குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கிரிப்டோகரன்சி குறித்த கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கினார், பல்வேறு பங்குதாரர்களிடையே விரிவான விவாதங்களை ஆய்வு செய்தார்.இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை கிரிப்டோகரன்சி குறித்த தொடர் விவாதங்களை நடத்தி வருகின்றன. கிரிப்டோகரன்சி இந்தியாவில் பெரிய அளவில் முதலீட்டு வழிமுறையாக விரைவாக வளர்ந்து வருகிறது. வருமானத்தை அதிகப்படுத்த விளம்பரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள்…
-
பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கை – 5 ஆண்டுகள் முடிந்து சாதித்தது என்ன?
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எட்டாம் தேதி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இது எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அறிவிக்கப்பட்டது, இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். இது நிகழ்ந்து நேற்றோடு ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தினை அரசு எடுத்தது என்று கூறப்பட்டது, ஆனால் கருப்பு பணம் எவ்வளவு சிக்கியது என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும்…
-
பிரதமர் மோடியை சந்திக்கிறார் எலான் மஸ்க் !
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க இருக்கிறார் என்றும், இந்த சந்திப்பின்போது டெஸ்லா கார் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மின்சார கார்களை தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமான டெஸ்லா தனது கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது, ஆனால், இந்தியாவில் மின்சாரக் கார்களின் இறக்குமதி வரி…
-
LIC – IPO வில் சீன முதலீட்டுக்குத் தடை வருமா?
எல்.ஐ.சி யின் $ 12.2 பில்லியன் மதிப்பிலான நாட்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிக்கலாம் என்று இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால், சீன முதலீட்டாளர்கள், எல்.ஐ.சியின் பங்குகளை வாங்குவதைத் தடுக்க அரசு விரும்புகிறது என்ற தகவலை இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் சிலரும், வங்கியாளர்களும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த முடிவானது இரு நாடுகளுக்கும் இடையில் தொடரும் பதட்ட நிலையை…
-
“நம்பமுடியாத உறுதிப்பாடு” – இந்தியாவின் சொத்து பணமாக்கல் திட்டம் !
இந்தியாவின் மிகப் பெரிய லட்சிய சொத்துப் பணமாக்கல் (NMP) இலக்குகளின் மூலம் பணம் திரட்டும் யதார்த்தவாதம் நமக்கு எந்தத் தீங்கும் செய்திடாது. ஆனால்? 1969 இல் வெளியான ‘பட்ச் கேஸிடி மற்றும் சன்டான்ஸ் கிட்’ திரைப்படத்தில், சன்டான்ஸ் கிட்டிடம் “சிறுவனே, எனக்கு பார்வை கிடைத்தது, உலகின் மற்ற அனைவரும் பை-ஃபோக்கல் (இரட்டை குவியக் கண்ணாடி) அணிந்துள்ளனர்”, என்று பட்ச் கேஸிடி கூறும் ஒரு வசனம் வரும். அரசாங்கத்தின் சொத்துக்களை தனியார் துறை நிறுவனங்களுக்கு முன்தொகை பெற்றுக்கொண்டு அல்லது…
-
அமைப்பு சாராத தொழிலாளர்களின் துயரங்களும், “இ -ஷ்ரம்” போர்ட்டல் அறிமுகமும்
இந்தியாவின் “தி எக்கனாமிக் சர்வே” ஜூலை 19, 2019 அன்று வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் அமைப்புசாராத தொழிலாளர்கள் 93%, இவர்களின் வேலைவாய்ப்புக்கும், எதிர்காலத்துக்கும் எந்த உத்திரவாதமும் இல்லை. கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த கூலித்தொழிலாளிகள், பல்வேறு தொழிற்சாலைகளில் அன்றாடக் கூலிக்காக வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சாலையோரங்களில் விற்பனை செய்யும் தொழிலாளர்கள் என பொருளாதாரத்தின் மிகப்பெரிய அங்கமாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்க்காக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான புதிய போர்ட்டல் சேவை ஒன்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. “இ-ஷ்ரம்”…
-
அதிக ஊக்கத்தொகை கோரும் ” IT ஹார்ட்வேர்” உற்பத்தியாளர்கள் ! மேட்-இன்-இந்தியா” திட்டம் புத்துணர்வு பெறுமா?
அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தகுதியான தகவல் தொழில்நுட்பத்துறை வன்பொருள் (ஹார்ட்வேர்) உற்பத்தியாளர்கள், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம், ஒப்பந்த அடிப்படையிலான அயல்நாட்டு மடிக்கணினி மற்றும் கைக்கணினி பிராண்டுகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால் கணிசமான ஊக்கத்தொகை அதிகரிப்பும், திட்டத்திற்கான கால நீட்டிப்பையும் கோரியுள்ளனர். சீனா மற்றும் தைவானில் இருக்கும் தங்கள் உற்பத்தி மையங்களில் இருந்து லேப்டாப் மற்றும் டேப்லட்டுகளை வரியேதும் இல்லாமல் இறக்குமதி செய்வது மலிவானது என்று பன்னாட்டு லேப்டாப்…
-
“சொத்து பணமாக்கல்” – ஆஸ்திரேலியாவிடம் இருந்து இந்தியா கற்க வேண்டிய பாடங்கள்
சிட்னிக்கு அருகிலுள்ள “போர்ட் கெம்ப்லா” மற்றும் “போர்ட் பாட்டணி” ஆகியவற்றை 2013 ஆம் ஆண்டு குத்தகைக்கு விடுத்ததன் மூலம் ஆஸ்திரேலியாவில் நடந்து வந்த சொத்து பணமாக்கல் மோகம் இப்போது இந்தியாவை வந்தடைந்திருக்கிறது. பொதுப் பயன்பாடுகளின் கட்டுப்பாட்டை ஒரு சிறிய தனியார் துறையிடம் ஒப்படைப்பது நுகர்வோரை பாதிக்கும் என்ற அச்சமும் இன்னும் மாறாமல் இருக்கிறது. பணப்பற்றாக்குறையில் உள்ள இந்திய அரசாங்கம், தற்போதுள்ள வருவாய் ஈட்டும் சொத்துக்களில் இருந்து 6 டிரில்லியன் ரூபாய்களை (81 பில்லியன் டாலர்கள்) அடையாளம் கண்டுள்ளது,…