Tag: 3rd Qtr Results

  • ஐசிஐசிஐ வங்கி – மூன்றாம் காலாண்டு முடிவுகள் !

    தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ, டிசம்பர் காலாண்டில் (Q3FY22) நிகர லாபத்தில் 25 சதவீதம் உயர்ந்து, ரூ. 6,194 கோடியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது, இதுவரை இல்லாத காலாண்டு லாபமாகும். இதன் மூலமாக 5,800 கோடி நிகர லாபம் கிடைக்கும் என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் நிகர வட்டி வருமானம் கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.9,912 கோடியாக இருந்த நிலையில், 22ஆம் காலாண்டில் 23 சதவீதம் அதிகரித்து ரூ.12,236 கோடியாக உள்ளது.

  • அதிகரிக்கும் வோடபோன்-ஐடியா நஷ்டம் – மூன்றாம் காலாண்டு முடிவுகள் !

    வோடபோன் ஐடியா லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹7,230 கோடி நிகர நஷ்டத்தை வெள்ளிக்கிழமை அறிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ₹4,532 கோடியாக இருந்த நஷ்டம், இந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ₹7,132 கோடியாக அதிகரித்துள்ளது.

  • ரிலையன்ஸ் மூன்றாம் காலாண்டில் ரூ. 20,539 கோடி (37.90%) லாபம் !

    ஆயில்-டு-டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) டிசம்பர் 2021 முடிவடைந்த காலாண்டில் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 37.90 சதவீதம் உயர்ந்து யாக அறிவித்துள்ளது, முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.14,894 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ரிலையன்ஸின் சில்லறை விற்பனைப் பிரிவு ஆண்டு லாபத்தில் 23 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் டெலிகாம் பிரிவு மூன்றாம் காலாண்டு லாபத்தில் 8.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

  • ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட்டின் காலாண்டு முடிவுகள் – வியாழக்கிழமை வெளியாகிறது

    ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL) நிறுவனம் தனது இரண்டாவது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும்போது, தொழில்துறையின் போக்குகள் கிராமப்புறங்களின் தேவை குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கான காரணங்கள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். மூன்றாவது காலாண்டை பொறுத்தவரை, அதன் வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து குறைவாக உள்ளன. ஆனால், பொருட்களின் தயாரிப்பு விலை அதிகரிப்பால் வருவாய் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

  • YES வங்கியின் நிகர முன்பணம் 4 % அதிகரிப்பு !

    YES வங்கியானது டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, நிகர முன்பணம் (Net Advance) கிட்டத்தட்ட 4 சதவீதம் அதிகரித்து, தற்காலிக அடிப்படையில் ரூ.1,76,422 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. டிசம்பர் 31, 2020 நிலவரப்படி நிகர முன்பணம் ரூ. 1,69,721 கோடியாக இருந்தது.

  • பஞ்சாப் நேஷனல் வங்கி Q3 நிகர லாபம் 111.3% வரை இருக்கும் – மோதிலால் ஓஸ்வால்

    பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் ரூ.1,069.4 கோடி. ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டின் அடிப்படையில் இது 111.3 % வளர்ச்சி. சென்ற காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.2 % குறைவு. நிகர ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் வட்டி வருமானம் ரூ.7,240.30 அதாவது 12.9 % குறையக்கூடும், ப்ரீ ப்ரொவிஷன் ஆப்பரேட்டிங் லாபமானது 20.1 % குறைந்து Rs.5,106.50 கோடியாக இருக்கும்.

  • எதிர்பார்ப்பைத் தூண்டும் விப்ரோ மற்றும் அக்செஞ்சர் நிறுவன காலாண்டு முடிவுகள்? கிடைக்குமா டிவிடெண்ட்?

    ஐடி துறையில் முன்னணி நிறுவனமான அக்சென்சர் இன்னும் சில நாட்களில் டிசம்பருடன் முடிந்த காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது, எனவே சந்தையில் அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விப்ரோவின் நிர்வாகக் குழு கூட்டமானது ஜனவரி 11,12ல் நடக்கிறது. அப்போது அது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. அத்துடன் நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால டிவிடெண்டையும் அறிவிக்க உள்ளது. பங்குச் சந்தையில் தனது சேவையை டிசம்பர் 16ம் தேதியில் இருந்து ஜனவரி 14ம் தேதிவரை நிறுத்தி வைப்பதாக செபியிடம் தெரிவித்துள்ளது,…