-
ஏர்டெல் 5ஜி பிளான் கட்டணம் எவ்வளவு..?
பார்த்தி ஏர்டெல் நிறுவனம் 5ஜிசேவையை கடந்த 1ம் தேதி முதல் 8 நகரங்களில் சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் வாடிக்கையாளர்களில் 8முதல் 9% பேரிடம் மட்டுமே 5ஜி வசதியுள்ள போன் உள்ளது. அவர்களிடம் தற்போது 5ஜிக்கான பிரீமியம் வசூலிக்க இயலாத சூழலில் ஏர்டெல் உள்ளது. அந்த நிறுவனம் தற்போது ஒரு வாடிக்கையாளரிடம் சராசரியாக 200 ரூபாய் வசூலிக்கிறது எனில் இது வரும் நாட்களில் 300 ஆக உயர வாய்ப்புள்ளது. வரும் டிசம்பரில் பெரிய…
-
இதோ வந்திருச்சு 5 ஜி..
5வது தலைமுறை தொலை தொடர்பு சேவை எனப்படும் 5ஜி செல்போன் சேவையை பிரதமர் மோடி வரும் 1ம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றையதினம் பிரகதி மைதானதில் இந்திய மொபைல் காங்கிரஸ் எனும் தொழில்நுட்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், வோடபோன் நிறுவனத்தின் ரவீந்திர டக்கர் உள்ளிட்டோர் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தகவல்…
-
விரைவில் வருகிறது ஜியோ 5 ஜி போன்
ரிலையன்ஸ் குழுமம் தனது 45வது ஆண்டு பொதுக்குழுவை நேற்று கூட்டியது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அந்த குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். அதிலும் முக்கியமாக சென்னை உள்ளிட்ட 4நகரங்களில் 5ஜி சேவை வரும் தீபாவளி முதல் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும் கூகுள் உடன் இணைந்து அதிநவீன 5 ஜி போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறினார். எனினும் அவர் அந்த செல்போனின் பெயர் வெளியிடவில்லை. அந்த போனுக்கு ஜியோ போன் 5g ஆக…
-
விரைவில் அமலாகிறது 5ஜி சேவை…
அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 5ஜி ஏலம் எடுத்த ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் மற்றும் அதானி நிறுவனங்கள் 17…
-
ஜாக்பாட் மழையில் TCS.. – BSNL-ன் ரூ.550 கோடி ஆர்டர்..!!
நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் உள்நாட்டு 4ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
-
வட்டி செலவை குறைக்க திட்டம்.. நிலுவை தொகையை செலுத்திய Airtel..!!
2014-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் வாங்கிய அலைக்கற்றைக்காக, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.15,519 கோடியை முன்னதாக செலுத்தியது.
-
விரைவில் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் – TRAI பரிந்துரைக்காக Waiting..!!
5G ஏலத்துக்கான பரிந்துரைகளை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாக டிராய் தெரிவித்துள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஏலத்தை விரைவில் நடத்துவதற்கான பிற செயல்முறைகளை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தி வருவதாகவும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
Tech Mahindra காலாண்டு நிகர லாபம் – ரூ.1.378 கோடியாக பதிவு..!!
2021 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3-வது காலாண்டில், 11.450.80 கோடி உயர்ந்து, தற்போது உள்ள Tech Mahindra-வின் நிகர லாபம் 1.378.20 கோடியாக பதிவாகியுள்ளது. அந்த காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 9.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.886.40 கோடியாக இருந்தது. அந்நிறுவனத்தின் EBITDA 2021 டிசம்பர் 3 ஆம் காலாண்டில் 8.7% அதிகரித்து 2,060 கோடி ரூபாயாக உயர்ந்தது. EBITDA 2021 ஆம் ஆண்டின் Q2 இல் 18.3% ஆக இருந்தது.