-
அடுத்து அரசு சலுகைக்கு கட்டாயமாகிறது ஆதார் எண்
இப்போது அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கு பதிவுச் சீட்டில் ஆதார் எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையை UIDAI சுற்றறிக்கையில் அறிவித்தது. சுற்றறிக்கையின்படி, மானியங்கள் மற்றும் பலன்களைப் பெற, ஆதார் எண் வைத்திருப்பவர் அங்கீகாரம் பெற வேண்டும் அல்லது ஆதார் எண் வைத்திருப்பதற்கான சான்றை வழங்க வேண்டும்.
-
வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு, ஆதாரை இணைப்பது கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு
வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு என்று வரிசையாக ஆதாரை இணைத்ததன் தொடர்ச்சியாக இப்போது வருங்கால வைப்பு நிதிக் கணக்கோடு (Provident Fund Account) ஆதார் இணைக்கப்பட வேண்டும், சமூகப் பாதுகாப்பு சட்டப்பிரிவு 142 இன் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கணக்கு வைத்திருப்பவர்கள், இனி வரும் காலங்களில் பணம் எடுப்பது, ஓய்வூதியம் பெறுவது மற்றும் காப்பீட்டுப் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் விவரங்களை உங்கள் கணக்குடன் இணைப்பது அவசியம். நிறுவனங்கள் அல்லது முதலாளிகள், தங்கள் பணியாளர்களின் ஆதார் எண்ணை…