-
விமான நிலையங்களை கைப்பற்ற அதானி குழுமத்திற்கு 3 மாத கால நீட்டிப்பு அளித்த அரசு!
அதானி குழுமத்திற்கு ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை கையகப்படுத்த மூன்று மாத கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மக்களவையில் (Lok Sabha) வியாழக்கிழமை தெரிவித்தார். கோவிட் பெருந்தொற்றைக் காரணமாகக் காட்டி ஏர்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆஃப் இந்தியாவிடமிருந்து (Airports Authority of India-AAI) 6 மாச கால அவகாசம் கேட்டிருக்கிறது அதானி குழுமம். ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படாத நிலையில்,…