-
புகழ்பெற்ற சின்டெக்ஸ் நிறுவனத்தை வாங்குகிறார் முகேஷ் அம்பானி !
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அசெட்ஸ் கேர் அண்ட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் எண்டர்பிரைசஸ் உடன் இணைந்து, திவாலாகிவிட்ட இந்திய ஜவுளி நிறுவனமான சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் சின்டெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட திவால்நிலைத் தீர்மான செயல்முறையின் கீழ் நிறுவனத்தை ஏலம் எடுக்க உள்ளது என்றும் சின்டெக்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. சின்டெக்ஸ் நிறுவனம், அர்மானி, ஹ்யூகோ பாஸ், டீசல் மற்றும் பர்பெர்ரி உள்ளிட்ட உலகளாவிய…