-
2 கட்டங்களாக தனியார் மயமாகிறது ஐடிபிஐ வங்கி…
ஐடிபிஐ வங்கி நிறுவனத்தின் 60.72% பங்குகளை விற்க அண்மையில் மத்திய அரசும், எல்ஐசியும் அறிவிப்பாணைகளை வெளியிட்டன. இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியை பொதுத்துறையில் இருந்து தனியார் வசம் மாற்ற 2 கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் முறைக்கு fit and proper என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பின்னர் இதில் தேர்வு செய்யப்படும் ஏலதாரர்களை ரிசர்வ் வங்கியும் மத்திய உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகமும் கண்காணிக்க இருக்கிறது. இரண்டாம் கட்டத்தில் நம்பகத்தன்மை முக்கிய பங்கு வகிக்க உள்ளது. ஐடிபிஐ…
-
இந்தியாவின் மெகா திட்டம்!!! என்ன தெரியுமா??
இந்தியாவில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் துவங்கப்பட்டு பாதி அளவே முடிந்துள்ளன, இதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக 100கோடி ரூபாய் செலவில் கதி சக்தி என்ற திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி 16 அமைச்சகங்கள் ஒன்றாக இணைக்கப்படும். டிஜிட்டல் தளமாக இந்த ஒருங்கிணைந்த தளம் அமைய இருக்கிறது. இந்த டிஜிட்டல் தளத்தில் முதலீட்டாளர்கள் முதல் நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்க வழிவகுக்கப்படுகிறது.…
-
போலி ஆவணங்களில் சிம்கார்டு வாங்கினால் 1 ஆண்டு சிறைதண்டனை…
மத்திய அரசு அண்மையில் தொலைதொடர்பு வரைவு சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்துள்ளது. அதன்படி சிம்கார்டு வாங்க போலி ஆவணங்கள், சமூக வலைதலங்களான ஓடிடி நிறுவனங்களில் போலி பெயர்களை குறிப்பிட்டால் அதிகபட்ச தண்டனையாக ஒரு வருட சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது சைபர் குற்றங்களை குறைக்கும் வகையில் இந்த புதிய வரைவு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதலங்கள் மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் கேஒய்சி, பதிவேற்றுவதை கட்டாயமாக்கவும் மத்திய அரசு…
-
வாட்ஸ்ஆப்,சிக்னல் செயலிகளுக்கு கட்டுப்பாடு…
இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள தொலைதொடர்பு சட்டங்களில் மத்திய அரசு விரைவில் மாற்றங்களை கொண்டுவர உள்ளது. இதற்கான பிரத்யேக சட்ட முன்வடிவையும் மத்திய அரசு வடிவமைத்து வருகிறது. அதன்படி வாட்ஸ் ஆப்,சிக்னல் மற்றும் பிற ஓடிடி தளங்களின் தரவுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் வர உள்ளன. குரல்,வீடியோ,இணையதள தகவல் பரிமாற்றத்தையும் இந்த புதிய சட்டம் கண்காணிக்க அதிக வாய்ப்புள்ளது. தேவை ஏற்பட்டால் பிற செயலிகளையும் இந்த வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக…
-
இனி எல்லாம் 1 மணி நேரத்தில் ….
வரும் 2047ம் ஆண்டு உலகளவில் சரக்கு கையாள்வதில் இந்தியா 10% என்ற அளவை எட்ட இலக்கை நிர்ணயித்துள்ளது. இதையொட்டி துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு வரும் சரக்குகளை , வந்த ஒரு மணி நேரத்துக்குள் வெளியேற்றும் முறைக்கான பணிகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.இந்த திட்டத்துக்கு கஸ்டம்ஸ் ஒன் என்று பெயரிடப்பட்டுள்ளது 2047ம் ஆண்டு இந்தியா நூறாம் ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாட உள்ள நேரத்தில் இந்தியா வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்ட வேண்டும் என்ற நோக்குடன்…
-
19 ஆயிரம் கோடி ரூபாய் தருகிறதா மத்திய அரசு …. ???
இந்திய அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித்தவித்து வருகின்றன. இரு நிறுவனங்களும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளன. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் 33 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்த கடனை அடைக்க மத்திய அரசு உதவி செய்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு பிஎஸ்என் எல் நிறுவனத்துக்கு மத்திய அரசு 70 ஆயிரம் கோடி ரூபாய் அளித்தது.பிஎஸ்என்எல் நிறுவனத்தை…
-
தீவிரமாகும் கட்டுப்பாடுகள்…
இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களை 2024ம் ஆண்டுக்குள் பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கார் உற்பத்தியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது அதன்படி, எம் மற்றும் என் வகையிலான வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் உள்ள மோட்டார் வாகன சட்டத்தின்படி காரின் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரும் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பது விதி.ஆனால் அதனை பெரும்பாலானோர் மதிப்பதே இல்லை. அண்மையில் மெர்சிடீஸ் காரில் பின் இருக்கையில் அமர்ந்து…
-
கூகுளுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு…
கொரோனா காலகட்டத்தில் செல்போன் செயலிகள் மூலம் கடன்பெறும் வசதி மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் வகை தொகை இல்லாமலும் எந்த விதிகளையும் பின்பற்றாமலும் சில கடன் செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பிடித்திருந்தன. இந்த சூழலில் மோசடி ஆப்கள் மூலம் பணத்தை இழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசு பலமுறை அழைத்து எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூகுள் இல்லை என்றாலும்…
-
இதையும் விற்கலாம்னு இருக்கோம்.. யாருக்காவது வேணுமா?
கடன் சுமையில் சிக்கித்தவித்த ஐடிபிஐ வங்கியை தனியாருக்கு விற்க கடந்த 2016ம் ஆண்டே மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. இந்த வங்கியின் பங்குகளை விற்பதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. அண்மையில் எல்ஐசியின் பங்குகள் விற்கப்பட்டதை போல அடுத்தபடியாக ஐடிபிஐ பங்குகள் விற்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் ஐசிஐசிஐ வங்கியும், ஐடிபிஐ வங்கியும் ஒப்பீட்டு அளவில் பார்த்தால், ஐசிஐசிஐ வங்கி பின்பற்றிய உத்திகள் சிறப்பாக இருந்துள்ளது. இந்நிலையில் ஐடிபிஐ வங்கிகளின் உரிமை தற்போது எல்ஐசி…
-
“டிசம்பர் வரை 15% ஏற்றுமதி வரி இருக்கும்”
தயார் நிலையில் உள்ள ஸ்டீல் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் மத்திய அரசு 15 விழுக்காடு ஏற்றுமதி வரி விதித்தது. இந்த வரி விகிதம் வரும் டிசம்பர் மாதம் வரை தொடர வேண்டும் என்று மத்திய அரசின் ஸ்டீல் பொருட்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. திடீரென வரியை குறைத்தால் உள்நாட்டு சந்தையில் விற்பனை வீழ்ச்சியடைந்து ஏற்றுமதியில் அதிக கவனம் செல்லும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது நடப்பாண்டு மழைக்காலத்திற்கு பிறகு உள்நாட்டு…