-
சந்தையின் புதிய ஏற்றங்களில் இன்சைட் டிரேடர்ஸின் பங்கு விற்பனை சூடு பிடிப்பது ஏன்?
“இன்சைட் ட்ரேடர்ஸ்” என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விற்பனை ஜூன் மற்றும் மே மாதங்களில் தலா ₹7000 கோடியாக இருந்தது. கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலைத் தாக்குதல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை திருத்தங்களுக்கு உட்பட்டது, இதன் காரணமாக “இன்சைட் ட்ரேடர்ஸ்” களின் விற்பனை ஓரளவு…