விடுதலை பெற்ற இந்தியாவில் 1947 க்குப் பிறகு 10க்கு மேற்பட்டவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறதா? அர்த்தமற்ற கேள்வியாக இருக்கலாம், கேள்விக்கு விடை “ஆம்” என்பதுதான். 2013-14 க்குப் பிறகு என்று எடுத்துக்கொண்டாலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. போர், பஞ்சம் அல்லது இயற்கைப் பேரழிவுகளால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டால் ஒழிய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை, இயல்பான சூழலில் ஒரு கடற்பயணம் மேற்கொள்ளும் கப்பலில் உறுதியான பற்சக்கரங்கள் இல்லையென்றாலும் அது முன்னோக்கி நகரும் என்பதுதான் உண்மை. உண்மையான கேள்வி…