-
ஓபெக் நாடுகளின் முடிவால் இந்தியாவுக்கு பாதிப்பு?
எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அண்மையில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மட்டும் உற்பத்தி செய்ய முடிவெடுத்தன. இந்த நிலையில் இதன் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக சரிந்து வந்ததால் இந்தியாவில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலை உயராமல் உள்ளது. தற்போது ஓபெக் நாடுகளின் முடிவால் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை…
-
பெட்ரோல், டீசல் விலை உயருமா?
ஓபெக் என்பது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு எடுக்கும் முடிவின்படிதான் உலகம் முழுக்கவும் எண்ணெய் வளங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குழுவினரின் அமைச்சர்கள் குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் என்ற அளவாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிலையில் தொடங்கியிருக்கும் பொருளாதார மந்தநிலை, ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட காரணிகளால் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள…
-
வரியை குறைத்தது அரசு….
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை லிட்டருக்கு 10 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த புதிய விலை அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. கச்சா எண்ணெய்க்கான விலையும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் கச்சா எண்ணெய்க்கான விலையாக 10ஆயிரத்து 500 ரூபாயாக உள்ளது இது இனி 8 ஆயிரம் ரூபாயாக குறையும். சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதை அடுத்து இந்த வரியை மத்திய…
-
ரூ.28000 கோடி எல்லாம் முடியாது!!! ரூ.20000 கோடி தருகிறோம்!!!!
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் இயங்கி வருகின்றன. மாறி வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை காரணமாக இந்த நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக பெரிய அளவு இழப்புகளை சந்தித்து வருகின்றன. இந்த சூழலில் இழப்பை சரி செய்ய 28 ஆயிரம் கோடி ரூபாயை இந்த 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகம் கோரியிருந்தது. ஆனால் நிதியமைச்சகம் 200 பில்லியன்…
-
இனியாவது விலை குறையுமா?
ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 2 விழுக்காட்டில் இருந்து 13 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போது, இந்தியா சாதுர்யமாக செயல்பட்டு ரஷ்யாவில் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியது. இந்த முயற்சி பலராலும் பாராட்டப்பட்டது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.2 விழுக்காடாக இருந்த ரஷ்யா கச்சா எண்ணெய்…
-
கச்சா எண்ணெய் மீது காற்றழுத்த வரி விதிக்கும் மையம், தங்கத்தின் மீதான வரியை உயர்த்தியது
இறக்குமதியைக் கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான வரியை இந்தியா உயர்த்தியது. கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் எண்ணெய் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்கவும் வரியை விதித்தது. வெள்ளியன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 79 என்று இருந்தது. தங்கத்தை பொறுத்தவரை இந்தியா, தனது தேவையைக் குறைக்க தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10.75% இலிருந்து 15% ஆக உயர்த்தியது. இது தங்கத்தின் தேவையைக் குறைக்கும் என்று இந்தியா நம்புகிறது.…
-
இது அசாதாரண காலங்கள்’: எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீதான காற்றழுத்த வரி, எரிபொருள் ஏற்றுமதி குறித்து நிதியமைச்சர் சீதாராமன்
எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது தற்போதைய நிலைமை “அசாதாரணமானது” எனக் கூறி, ’விண்ட்ஃபால்’ வரியை விதித்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆட்சி அமல்படுத்தப்பட்ட ஐந்தாவது ஆண்டு நிறைவில் சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக , கச்சா எண்ணெய் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியாக டன்னுக்கு ரூ.23,250 செஸ் விதிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. மேலும், அவற்றின் ஏற்றுமதியில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.6 மற்றும் டீசல் மீது ரூ.13…
-
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் கச்சா எண்ணெய், வாகன எரிபொருள் மீதான புதிய வரிகளை மறுஆய்வு செய்யும் மையம்: தருண் பஜாஜ்
பெட்ரோலியத்தின் மீதான வரி மற்றும் வாகன எரிபொருள் ஏற்றுமதி மீதான வரியை, மறுசீரமைப்பிற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை, அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும் என்று வருவாய்த்துறை செயலர் தருண் பஜாஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “சமீபத்திய மாதங்களில் கச்சா விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் சர்வதேச விலையில் உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விற்கிறார்கள். இதன் காரணமாக, செஸ் வரியாக கச்சா எண்ணெய்க்கு டன்னுக்கு ரூ. 23250 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்த செஸ்…
-
அதிகரிக்கும் பணவீக்கம்.. நிதிக்கொள்கை நடவடிக்கை அவசியம்..!!
உள்நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், பணவீக்க அழுத்தங்கள் பணவியல் கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகின்றன என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
-
சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை.. இந்தியாவில் தட்டுப்பாடு.!?
சமையல் எண்ணெய்க்கு, உள்நாட்டில் உள்ள தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக அனைத்து சமையல் எண்ணெய் மூலப்பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது.