-
அமெரிக்காவில் கடன் விகிதம் உயர்வால் தொடரும் சிக்கல்
அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலையை சமாளிக்கவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும் அமெரிக்க பெடரல் ரசிர்வ் அனைத்து வகையான கடன்களின் மீதான வட்டிகளையும் கடுமையாக உயர்த்தி வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டில் வேலைவாய்ப்புகள் உருவாக்கமும் குறைந்துள்ளது. சொந்த நாட்டிலேயே பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாக அந்த நாட்டில் சர்ச்சை எழுந்தது. ஆகஸ்ட் மாதம் 3 லட்சத்து 15 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு எடுத்த நிறுவனங்கள், கடந்த செப்டம்பர் மாதம் வெறும் 2 லட்சத்து 63 ஆயிரம் பேரைத்…
-
சிக்கன நடவடிக்கை சூப்பர்..
உலகளவில் பொருளாதார மந்தநிலை உள்ள சூழலில் பல நாடுகளும் தங்கள் ரிசர்வ் வங்கிளின் மூலம் சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் விலைவாசி,வேலைவாய்ப்பின்மை உயர்ந்து வரும் சூழலிலும் கூட வட்டி விகிதங்களை சில நாடுகள் எடுத்து வருவது நல்ல வியூகம் என்று பாராட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் அண்மையில் வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதால் நல்ல முன்னேற்றம் காணப்பட்ள்ளதாகவும், இதேபோல் இந்தியாவில் ரிசர்வ்…
-
அமெரிக்க பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி
அமெரிக்க பெடரல் ரிசர்வ், தங்கள் நாட்டு கடன் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக அறிவிக்க உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. நேற்று அமெரிக்க பங்குச்சந்தைகளில் 0.35% சரிவு ஏற்பட்டது. S&P 500 துறை பங்குகளில் பிரதான 11 பங்குகளில் 5 பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. சுகாதாரத்துறை பங்குகள் ஒன்றரை விழுக்காடு சரிந்துள்ளது. ஆற்றல் துறையில் 1 விழுக்காடு விலை வீழ்ச்சியும் காண முடிந்தது.பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் கடன் வட்டி விகிதத்தை நூறு…
-
பணவீக்கத்தை எதிர்த்து ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துகிறது!!!
பணவீக்கத்தை எதிர்த்து ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதால், மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலையின்மை அதிகரிக்கும் என்று அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார். வயோமிங்கில் மத்திய வங்கி மாநாட்டை ஆரம்பித்து வைத்து பவல் ஆற்றிய உரையில், பெடரல் வங்கியானது வளர்ச்சியைக் கட்டுப்படுத்த தேவையான அளவுக்கு அதிக விகிதங்களை உயர்த்தும், மேலும் மூன்றுக்கும் மேல் இயங்கும் பணவீக்கத்தைக் குறைக்க “சில காலத்திற்கு” அவற்றை அங்கேயே வைத்திருக்கும் என்று பவல் கூறினார். பணவீக்க பிரச்சனை…
-
எதிர்பார்த்ததை விட பணவீக்கம் குறைந்துள்ளது – அமெரிக்கா
அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்த்ததை விட ஜூலையில் குறைந்துள்ளது. இதன்காரணமாக வட்டி விகிதங்களை தீவிரமாக உயர்த்துவதற்கு பெடரல் ரிசர்வ் சில முடிவுகளை எடுக்கலாம். நுகர்வோர் விலைக் குறியீடு ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 8. 5% அதிகரித்துள்ளது, இது நான்கு தசாப்தங்களில் மிகப்பெரியது. வருடாந்திர பணவீக்கம் 8% க்கும் அதிகமாக உள்ளது மற்றும் உணவு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, விலைகள் குறைவதற்கான அறிகுறிகளைக் காட்டும் அதே வேளையில், வீட்டுச் செலவுகள் பெரியவை, ஒரு அறிக்கையின்படி உண்மையான…
-
வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள பெடரல் ரிசர்வ்
பெடரல் ரிசர்வ் தொடர்ந்து இரண்டாவது மாதமாக 75 அடிப்படை புள்ளிகளால் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இது பொருளாதாரத்திற்கு கடுமையான அடி என்று நிபுணர்கள் கருதுகின்றனர். பொருளாதாரத்தை மந்தநிலையில் தள்ளினாலும் கூட, அதிகாரிகள் இப்போது பொருளாதாரத்தை குளிர்விப்பதற்காக வட்டி விகிதங்களை வலுக்கட்டாயமாக உயர்த்துகிறார்கள். இருப்பினும் உயர் விகிதங்கள் ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவுகள் குறிப்பாக வீட்டுச் சந்தையில் தெளிவாகத் தெரியும், அங்கு விற்பனை குறைந்துள்ளது. அமெரிக்க நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 9.1%…
-
பொருளாதாரத்தில் அதிக சுமை வரும் – ஃபெடரல் ரிசர்வ்
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வரும் வியாழன்று ஜிடிபி தரவை வெளியிட உள்ளதால் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, பொருளாதாரத்தில் அதிக சுமையை ஏற்படுத்த வேண்டியிருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த மாதம் ப்ளூம்பெர்க் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கணிப்பு, அடுத்த 12 மாதங்களில் வீழ்ச்சியின் நிகழ்வை 47.5% ஆகக் காட்டியது, இது ஜூன் மாதத்தில் 30% ஆக இருந்தது. மத்திய வங்கியின் தொடர்ச்சியான வட்டி விகித அதிகரிப்புக்கு பதிலளிக்கும் வகையில், வளர்ச்சி ஏற்கனவே குறைந்து வருகிறது. 1994க்குப் பிறகு ஜூன்…
-
மந்தநிலை ஏற்பட 40 சதவீத சாத்தியக்கூறுகள்
அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, மற்றொரு 75 அடிப்படை புள்ளி விகித உயர்வைத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும், அடுத்த ஆண்டில் மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 40 சதவீதமாக இருக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது. மந்தநிலை, மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவைகள் மத்திய வங்கியை கட்டாயப்படுத்தக்கூடும் என்றும் கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது. செப்டம்பரில் மத்திய வங்கி 50 அடிப்படைப் புள்ளிகளைக் குறைத்து, நவம்பர் மற்றும் டிசம்பர் கூட்டங்களில் 25 அடிப்படைப் புள்ளிகள்…
-
பெடரல் ரிசர்வ் வங்கி வளர்ச்சி கணிப்புகளை குறைத்திருக்கிறது
சமீபத்திய மாதங்களில், பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறுவதற்கும், இப்போது விரைவான விகித உயர்வுகளுடன் மந்தநிலையை தவிர்ப்பதற்கும் பெடரல் ரிசர்வ் வங்கி எடுத்த பல முயற்சிகள் பங்குசந்தையில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி அவர்கள் கோபப்பட, நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவில் நுகர்வோர் பணவீக்கம் உயர்ந்துள்ளது ஒரு காரணமாக இருந்தாலும் சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டு அமெரிக்க பொருளாதாரத்திற்கான அதன் வளர்ச்சி கணிப்புகளை குறைத்திருக்கிறது என்பதும் மற்றொரு காரணம். S&P 500 மற்றும் Treasuries…