-
இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு – உலக தங்க கவுன்சில் அறிக்கை !
2020 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று நோய் தாக்குதலால் குறைந்திருந்த தங்கத்தின் தேவை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது, செப்டம்பர் 2001 காலாண்டின் முடிவில் இந்தியாவில் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 47 சதவீதம் உயர்ந்து 139 டன்னாக இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டின் 94.6 டன்களுடன் மற்றும் தொற்று நோய்க்கு முந்தைய செப்டம்பர் 2019 காலாண்டில் பதிவான 123.9 டன்களை விட இது அதிகமாகும் என்று உலக தங்க கவுன்சில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை…
-
இருமடங்காகிய தங்க இறக்குமதி! ரூபாய் மதிப்பிற்கு அழுத்தம் ஏற்படுமா?
ஆகஸ்ட் மாதத்தில் தங்க இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், கடந்த ஐந்து மாதங்களின் ஒப்பீட்டில் உச்ச அளவிலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய விலைகளை ஒப்பிடும்போது தற்போது குறைந்திருப்பதும், தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதும் தங்க நகை வர்த்தகர்களின் பண்டிகைக் காலத்துக்கான கொள்முதலை அதிகரிக்கத் தூண்டியதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. உலகின் தங்க நுகர்வு வரிசையில் இரண்டாம் இடத்தில உள்ள நமது இறக்குமதியின் உயர்வு, தற்போதய விலை அளவை ஆதரிப்பதாக இருக்கலாம். இப்போதைய…