-
இனி சாப்பாடு, மளிகைப் பொருட்கள் பறந்து வரும்…
இந்தியாவில் டிரோன்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டம் விரைவில் குருகிராம் அல்லது பெங்களூருவில் துவங்கப்படும் என்று ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேல் வாஸ் சென்னையில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டத்தில் பேசிய அவர், அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு இந்த சேவையை செய்ய உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் இந்தமுயற்சிக்காக பல்வேறு டிரோன் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கருடா நிறுவனம் ஸ்விக்கியுடன் கைகோர்த்து முதல் டிரோன் சேவையை செய்யும்…