Tag: India

  • ஏர்டெல் 5ஜி பிளான் கட்டணம் எவ்வளவு..?

    பார்த்தி ஏர்டெல் நிறுவனம் 5ஜிசேவையை கடந்த 1ம் தேதி முதல் 8 நகரங்களில் சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் வாடிக்கையாளர்களில் 8முதல் 9% பேரிடம் மட்டுமே 5ஜி வசதியுள்ள போன் உள்ளது. அவர்களிடம் தற்போது 5ஜிக்கான பிரீமியம் வசூலிக்க இயலாத சூழலில் ஏர்டெல் உள்ளது. அந்த நிறுவனம் தற்போது ஒரு வாடிக்கையாளரிடம் சராசரியாக 200 ரூபாய் வசூலிக்கிறது எனில் இது வரும் நாட்களில் 300 ஆக உயர வாய்ப்புள்ளது. வரும் டிசம்பரில் பெரிய…

  • சிங்கப்பூருக்கு Bye!!! இந்தியாவுக்கு Haii!!!

    வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியான போன்பே நிறுவனம் IPO வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றுகட்டங்களாக இந்த மாற்றத்தை அந்நிறுவனம் செய்துள்ளது. முதலில் போன்பே டிஜிட்டல் பரிவர்த்தனை வணிகம், போன்பேவின் காப்பீட்டு திட்டம் மற்றும் வெல்த் புரோக்கிங் நிறுவனம் ஆகிய மூன்றின் செயல்பாடுகளையும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தநிறுவன பணியாளர்களே நிறுவன பங்குகளை வாங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு…

  • இந்தியாவின் மெகா திட்டம்!!! என்ன தெரியுமா??

    இந்தியாவில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் துவங்கப்பட்டு பாதி அளவே முடிந்துள்ளன, இதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்ய மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக 100கோடி ரூபாய் செலவில் கதி சக்தி என்ற திட்டத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி 16 அமைச்சகங்கள் ஒன்றாக இணைக்கப்படும். டிஜிட்டல் தளமாக இந்த ஒருங்கிணைந்த தளம் அமைய இருக்கிறது. இந்த டிஜிட்டல் தளத்தில் முதலீட்டாளர்கள் முதல் நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்க வழிவகுக்கப்படுகிறது.…

  • உலக நாடுகளுக்கு சவால் விடும் இந்தியா:

    உலகளவில் அமெரிக்கா,சீனாவுக்கு அடுத்தபடியாக தைவானில்தான் அதிக சிப்கள் தயாரிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் சீனாவுக்கு போட்டியாக இந்தியா சிப் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் படையெடுப்பு காரணமாக தைவானில் உள்ள தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் தற்போது நிலவி வருகிறது. இந்த சூழலில் தைவானில் இருந்து சில ஆலைகள் குஜராத் மாநிலத்துக்கு வருவது இந்தியாவில் சிப் உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளது. உலகளவில் அதிக செமிகண்டக்டர்களை ஏற்றுமதி செய்யும் டிஎஸ்எம்சி நிறுவனம் மட்டும்…

  • இந்தியாவுக்கு உள்ள பொருளாதார சவால்கள்…

    இந்தியாவின் தனிநபர் வருவாயை விட வங்கதேசத்தின் வருவாய் அதிகரித்தது, அதேபோல் பிரிட்டனின் பொருளாதாரத்தை இந்தியா மிஞ்சியது. மேலும் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியது. இந்தியாவை விட வங்கதேசம் ஏழை நாடாக இருந்தாலும் அங்கு அவர்களின் தனிநபர் வருவாய் உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா பெரிய நாடாக இருந்தாலும் ஜி20 நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் ஜி20 நாடுகளில் இந்தியர்கள்தான் ஏழைகளாவர். இந்தோனேசியா, பிரிட்டன் நாடுகளை விட இந்தியர்கள் குறைவாகத்தான் பொருட்களை வாங்குகின்றனர். உத்தரபிரதேசத்தில் GDSP…

  • காப்புரிமை விதிகளை மாற்றுகிறது ஐஆர்டிஏஐ…

    இந்தியாவில் காப்புரிமை ஒழுங்குமுறை அமைப்பாக உள்ளது IRDAI. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள காப்புரிமை நிறுவனங்களில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுகிறது. புதிய இன்சூரன்ஸ் பாலிசிகளை டிஜிட்டல் மயப்படுத்த அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து 20ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது E-proposal படிவம் முக்கியம் என்பதை இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது மின்னணு காப்புரிமை திட்டங்களில் சலுகை வழங்க வேண்டும் என்றும்,ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு சலுகைகள் அளிப்பது குறித்தும் கருத்துகள்…

  • இந்திய நிறுவனத்துக்கு தடை விதித்த அமெரிக்கா

    மும்பையை சேர்ந்த தி பாலாஜி பெட்ரோ கெம் பிரைவேட் என்ற நிறுவனம் ஈரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல்கள், மெத்தனால் மற்றும் பேஸ் ஆயில் ஆகியவற்றை ஈரானில் இருந்து வாங்கியுள்ளதாகவும்,சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட டிர்ல்லியன்ஸ் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தின் மூலமாக திபாலாஜி நிறுவனம் இந்த எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது இந்திய நிறுவனம் மட்டுமின்றி மொத்தம் 8 நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அவை, ஐக்கிய அரபு அமீரகம்,ஹாங்காங் மற்றும்…

  • விரைவில் H,L பிரிவு விசாக்களுக்காக 1 லட்சம் அப்பாய்ண்ட்மெண்ட்கள்..

    இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கச் செல்ல மாணவர்கள் மத்தியில் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவுக்கு பணி நிமித்தம் மற்றும் வியாபார நோக்குடன் பயணிப்பவர்களுக்கு B1,B2 ரக விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு செல்வோருக்கான விசாக்களை பரிசீலித்து அங்கீகாரம் அளிக்கும் பணியாளர்கள் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக குறைக்கப்பட்டது.கொரோனா பெருந்தொற்றால் அமெரிக்க தூதரங்களில் இந்த சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா சூழல் கிட்டத்தட்ட நிறைவுற்ற நிலையில் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த…

  • 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அந்நிய பண கையிருப்பு

    இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மிக அதிகபட்சமாக குறைந்திருந்தது. அதன் பிறகு ஒரு அளவுக்கு நிலைமை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து 7வது வாரமாக இந்தியாவின் அந்நிய பண கையிருப்பு சரிந்து வருகிறது. செப்டம்ர் 16ம் தேதி வரை நாட்டின் மொத்த வெளிநாட்டு பண கையிருப்பின் அளவு 545 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த வாரம், அதாவது செப்டம்பர் 9ம் தேதி வரை 550 பில்லியன்…

  • சீனக்கடன் செயலிகள் இந்திய பணத்தை சுருட்டுவது எப்படி?

    அண்மையில் இந்தியாவின் பிரபல தனியார் வங்கி ஒன்று வெளிநாட்டில் வணிகர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் இணைந்து. வர்த்தகம் மேற்கொள்ளவும் ஒரு பேமெண்ட் கேட்வே உடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் சந்தேகம் அடைந்த வங்கி பேமண்ட கேட்வேவின் தொடர்புகளையும், மென்பொருளையும் பார்த்தால் அது போலியானவை என்பது தெரியவந்தது. சீனாவில் இருந்து இயங்கும் மோசடி செயலிகள், முதலில் இத்தகைய போலி கேட்வேகளை அமைத்து அதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை திருடுவது தெரியவந்துள்ளது. போலி நிறுவனங்கள் மூலம் இப்படி பாதுகாப்பு இல்லாமல்…