Tag: inflation

  • 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்த வெளிநாட்டு பண கையிருப்பு

    ஒரு நாட்டில் பிற நாடுகளின் கரன்சிகள் வைத்திருக்கும் அளவுக்கு ஃபாரக்ஸ் ரிசர்வ் என்று பெயர். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் வெளிநாட்டு பண கையிருப்பு தொடர்ந்து கரைந்து வருகிறது ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி செப்டம்பர் 30ம் தேதி வரை முடிந்த வாரத்தில் இந்தியாவின் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு மேலும் 4.85பில்லியன் அமெரிக்க டாலர் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு பணத்தின் அளவு 532.66பில்லியன் அமெரிக்க டாலராக தொடர்கிறது. இந்த அளவு இரண்டு ஆண்டுகளில்…

  • ஓபெக்+ நாடுகளின் முடிவை கடுமையாக சாடிய அமெரிக்கா….

    எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைச்சர்கள் அண்மையில் இணைந்து கூடி பேசி,உற்பத்தி அளவை குறைப்பதாக அறிவித்தனர். அதாவது தினசரி 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் உற்பத்தி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஓபெக் நாடுகளின் முடிவு அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, ஓபெக் அமைச்சர்கள் எடுத்த முடிவு குறுகிய கண்ணோட்டத்துடன் எடக்கப்பட்டது என்று…

  • மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரித்த ரிசர்வ் வங்கி…

    மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். ரெபோ விகிதம் எனப்படும் இந்த வரி உயர்வு காரணமாக வாகனம், வீட்டுக்கடன், தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தவே ரெபோ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது ரிசர்வ்…

  • கடினமான தருணத்துக்கு தயாராகும் அமெரிக்க பங்குச்சந்தைகள்….

    அமெரிக்காவில் விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிரடி கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து வகையான கடன்களின் விகிதங்களும் கடுமையாக உயர இருக்கிறது. இந்த சூழலில் மக்களையும், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார். நூறு அடிப்படை புள்ளிகளை உயர்த்துவதற்கு பதிலாக 75 புள்ளிகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் விலைவாசி…

  • அமெரிக்க பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி

    அமெரிக்க பெடரல் ரிசர்வ், தங்கள் நாட்டு கடன் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக அறிவிக்க உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. நேற்று அமெரிக்க பங்குச்சந்தைகளில் 0.35% சரிவு ஏற்பட்டது. S&P 500 துறை பங்குகளில் பிரதான 11 பங்குகளில் 5 பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. சுகாதாரத்துறை பங்குகள் ஒன்றரை விழுக்காடு சரிந்துள்ளது. ஆற்றல் துறையில் 1 விழுக்காடு விலை வீழ்ச்சியும் காண முடிந்தது.பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் கடன் வட்டி விகிதத்தை நூறு…

  • யாருக்கெல்லாம் பணவீக்கம், வேலையின்மை பிடிக்கும்:பட்டியலிடுகிறார் ப.சிதம்பரம்

    முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதியுள்ள கட்டுரை அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த துறைகள் ஏழ்மையை பயன்படுத்திக்கொள்கின்றன என பட்டியலிட்டுள்ளார். அதன்படி வியாபாரம் செய்வோருக்கும், அரசாங்கத்தில் இருப்போருக்கும் வேலையின்மை பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். வேலைவாயப்பின்மை அதிகம் இருந்தால்தான் வேலைகளை தருவோர் பேரம் பேச வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளார். 2021-2022-ல் விவசாயக்கூலித்தொழிலாளர்கள் வருவாய் வெறும் 3 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 2019ம் ஆண்டு நிலவரப்படி ஒரு விவசாயக்கூலித் தொழிலாளியின் குடும்பத்துக்கு சராசரி…

  • விலையை குறைப்பீங்களா? மாட்டீங்களா?

    உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த பெட்ரோல்,டீசல் தேவை 85 விழுக்காடு இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் ஒரு பேரல் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு முதன் முறையாக கடந்த வாரம் 90 டாலருக்கும் கீழ் குறைந்தது. எனினும் உயர்த்தப்பட்ட பெட்ரோல்,டீசல் விலை இன்று வரை இந்தியாவில் குறைக்கப்படவே இல்லை. இது குறித்து பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி,…

  • “இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மேலும் உயரும்”…

    இந்தியாவில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் உயர்வு குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு மற்றும் கருத்துக்கேட்டது. இதன்படி கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பணவீக்கம் மீண்டும் உயரும் என்று கூறப்பட்டுள்ளது.அரிசி, கோதுமை,மற்றும் பருப்பு வகைகள் விலையேற்றம் கண்டுள்ளதால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவின் ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி நிற்கின்றனர்.இந்த சூழலில் ஜூலை மாதம் 6.71 விழுக்காடாக இருந்த சில்லறை பணவீக்கம் கடந்தமாதம் 6 புள்ளி 9 ஆக இருக்கும் என்று…

  • பணவீக்கத்தை எதிர்த்து ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துகிறது!!!

    பணவீக்கத்தை எதிர்த்து ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதால், மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலையின்மை அதிகரிக்கும் என்று அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார். வயோமிங்கில் மத்திய வங்கி மாநாட்டை ஆரம்பித்து வைத்து பவல் ஆற்றிய உரையில், பெடரல் வங்கியானது வளர்ச்சியைக் கட்டுப்படுத்த தேவையான அளவுக்கு அதிக விகிதங்களை உயர்த்தும், மேலும் மூன்றுக்கும் மேல் இயங்கும் பணவீக்கத்தைக் குறைக்க “சில காலத்திற்கு” அவற்றை அங்கேயே வைத்திருக்கும் என்று பவல் கூறினார். பணவீக்க பிரச்சனை…

  • பணவீக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் மத்திய வங்கிகள் சிறப்பாக செயல்படும்: ரகுராம் ராஜன்!!!

    மத்திய வங்கிகள், பணவியல் கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தால், பணவீக்கத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்று அமெரிக்காவின் வயோமிங்கில் நடைபெற்ற மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார். ரகுராமைப் பொறுத்தவரை, காலநிலை மாற்றம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பிரச்சினைகளில் மத்திய வங்கிகளால் அதிகம் செய்ய முடியாது. மாறாக, நேரடிக் கொள்கைகள் இத்தகைய சிக்கல்களை மிகச் சிறந்த முறையில் கையாள முடியும். அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலான பணவியல் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்த்ததை…