-
மந்தமான நிலையில் பட்டியலான CMS Info Systems பங்குகள் !
இன்று இந்திய பங்குச் சந்தையில் சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் பங்குகள் அறிமுகமாகின. இந்த வருடத்தின் இறுதி ஐபிஓ வெளியீடான இந்த பங்குகளின் ஈக்விட்டி பங்குகள் ‘பி’ குரூப் செக்யூரிட்டிகளின் பட்டியலில் என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கும், ஒப்பந்தங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
-
பட்டியல் விலையை விட 20 % அதிகம் விலை போன HP Adhesives !
பங்குச் சந்தையில் HP Adhesives தனது ஐபிஓவை வெளியிட்டதன் மூலம் அதன் பங்குகள் பட்டியல் விலையை விட 20 % மடங்கு அதிகரித்துள்ளது, தேசிய பங்குச் சந்தையில் 274 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட ஐபிஓ 15 சதவீதம் ஏற்றம் கண்டு 315 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது, இறுதியில் அது 330.75 ரூபாய் என்ற அளவில் நிலை பெற்றது. இந்த நிறுவனமானது புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 113.44 கோடியும், ஆஃபர் பார் சேல்ஸ் முறையில் 12.53 கோடி ரூபாயும் திரட்டி…
-
IPO க்களின் மூலம் இந்த ஆண்டு 1.18 லட்சம் கோடி நிதி திரட்டல் !
இந்த ஆண்டில் இதுவரை 63 காரப்பரேட் நிறுவனங்கள், மெயின் போர்டு ஐபிஓக்களை வெளியிட்டு 1,18,704 கோடியை திரட்டியுள்ளன, இது 2020 ஆம் ஆண்டை (26,613 கோடி) விட 4.5 மடங்கு அதிகமாகும் என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இன்னொரு சிறப்பம்சமாக மொத்தம் ரூ 2,02,009 கோடியில் 51 சதவீதம் அல்லது 1,03,621 கோடி மட்டுமே புதிய மூலதன திரட்டல் மற்றும் ரூ 98,388 கோடி மட்டும் விற்பனைக்கான சலுகைகள் மூலம் வந்தவையாகும். பிரைம் டேட்டா பேஸின் அறிக்கையின்படி,…
-
IPO மதிப்பீடுகளில் செபி தலையிடாது-அஜய் தியாகி !
IPO – மதிப்பீடு தொடர்பான விஷயங்களில் ‘செபி’ தலையிடாது என்று அதன் தலைவர் அஜய் தியாகி கூறினார். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர்,” ஒரு சீர்செய்யும் நிறுவனமாக செபி IPO மதிப்பீட்டில் ஈடுபடாது, ஈடுபடக்கூடாது. உலக அளவில், IPO க்கள் (ஆரம்ப பொது வழங்கல்கள்) வெளிப்படுத்தல் அடிப்படையிலான முறையை பின்பற்றுகின்றன. ஸ்டார்ட்-அப் ஐபிஓக்கள் சமீபத்தில்தான் தொடங்கின. இது ஒரு புதிய வகை முதலீடு. முதலீட்டாளர்கள் இதற்குப் இப்போதுதான் பழகி வருகின்றனர். முன்னதாக, தொழில்நுட்ப நிறுவனங்களில் பல வெளிநாட்டு…