Tag: ITC

  • இந்த நிறுவன பங்குகள் வைத்துள்ளீர்களா?.. ஜாக்பாட் உங்களுக்குத்தான்:

    ஐடிசி நிறுவன பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம் வியாழக்கிழமை தொடங்கியதும். ஐடிசியின் ஒரு பங்கின் விலை 329 ரூபாய் 60 காசுகளாக இருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஐடிசி நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஐடிசி ஹோட்டல்களின் பங்குகள் தனியாக விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி தெரிவித்ததும், நாடு முழுக்க உணவு தானியங்களின் விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளதுமே ஐடிசி நிறுவன…

  • உச்சம் பெற்ற ஐடிசி பங்கு

    சிகிரெட் விற்பனை முதல் ஹோட்டல்கள் வரை நடத்தி வரும் பெரு நிறுவனம் ITC. இந்நிறுவன பங்கு வெள்ளி அன்று 2.1விழுக்காடு உயர்ந்துள்ளது. இதுவரை(கடந்த 52வாரங்களில்) இல்லாத புதிய உச்சமாக ஐ டி சி பங்கு விலை 320ரூபாய் 20காசுகள் ஆக உயர்ந்துள்ளது.. மேலும் இந்த பங்கு, சந்தை மதிப்பு அளவில் 4 லட்சம் கோடியாக ஏற்றம் பெற்றுள்ளது. ITC நிறுவன பங்குகள் கடந்தாண்டு மட்டும் 53.54%வளர்ச்சியும். இந்தாண்டு இதுவரை 47.58விழுக்காடும் விலை ஏற்றம் கண்டுள்ளது. நிப்டியில் சிறந்த…

  • சில்லறை வணிகத்திலிருந்து வெளியேறும் ஐடிசி லைஃப்ஸ்டைல்

    ஐடிசி லைஃப்ஸ்டைல் சில்லறை வணிகத்திலிருந்து ஆகஸ்ட் 2 அன்று வெளியேறிவிட்டது என்று தெரிவித்துள்ளது. ஐடிசியின் லைஃப்ஸ்டைல் ரீடெய்ல் பிராண்டான வில்ஸ் லைஃப்ஸ்டைல்(Wills Lifestyle) “டெஸ்கேலிங்” செயல்பாட்டில் உள்ளது என்று ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி பூரி கூறினார் ஜூன் 2022 (Q1FY23) முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர லாபம் 33.46 சதவீதம் அதிகரித்து ரூ. 4,462.25 கோடியாக ஐடிசி ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிவித்தது, இது முந்தைய ஆண்டின் காலாண்டில் ரூ.3,343.44 கோடியாக இருந்தது. செயல்பாடுகளின் வருவாய்…

  • இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும்

    இந்திய கோதுமையை துருக்கி நிராகரித்ததற்கான காரணத்தை இந்தியா விசாரிக்கும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். துருக்கிக்கு அனுப்பப்பட்ட தானியங்களில் ‘ருபெல்லா’ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலை நிராகரித்ததாகத் துருக்கி தெரிவித்தது, ஆனால் முதற்கட்ட விசாரணையில் ஐடிசி நிறுவனம் நெதர்லாந்துக்குத்தான் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது என்றும், அங்கிருந்து பின்னர் துருக்கிக்கு தானியங்களை நெதர்லாந்து ஏற்றுமதி செய்துள்ளது என்று தெரிய வந்ததாக பியூஷ் கோயல் கூறினார். கோதுமை ஏற்றுமதி நேரடியாக துருக்கிக்கு…

  • ஐடிசி நிறுவனம் ஒருங்கிணைந்த லாபம் 11.60 சதவீதம் அதிகரித்தது

    ஐடிசி நிறுவனம் மார்ச் காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 11.60 சதவீதம் அதிகரித்து, ரூ.4,259.68 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில், ரூ.3,816.84 கோடியாக இருந்தது. சிகரெட் அல்லாத எஃப்எம்சிஜி வணிகமானது, முக்கிய விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ள போதிலும், செலவு மேலாண்மை மூலம் சிறப்பாகச் செயல்பட்டதாக நிறுவனம் கூறியது. கூடுதலாக, கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது, கல்வி மற்றும் எழுதுபொருள் தயாரிப்பு வணிகத்தை மீட்டெடுக்க உதவியது, இந்த ஆண்டில், நிறுவனம் சுமார் 110 புதிய…

  • பல்வேறு துறைகளில் பங்கு வகிக்கும் ITC.. – 4% மேல் லாபம் அடைந்த ITC ..!!

    ITC லிமிடெட் சிகரெட் முதல் ஹோட்டல் வரையிலான பிரிவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சிகரெட்டுகளில் சுமார் 78% சந்தைப் பங்கையும், ஸ்டேபிள்ஸ், பிஸ்கட், நூடுல்ஸ், ஸ்நாக்ஸ், சாக்லேட், பால் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களிலும் உள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய FMCG நிறுவனமாகும்.

  • பெண்களுக்கு முக்கியத்துவம் .. Britannia அறிவிப்பு..!!

    பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி (CMO) அமித் தோஷி கூறுகையில், நிறுவனத்தின் பணியாளர்களில் 38 சதவீதம் பேர் பெண்கள். கவுகாத்தி தொழிற்சாலையில், பெண்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது, அது 65 சதவீதமாக உயர்த்தப்படும் என்றார்.

  • மூன்று நாட்களில் 8 லட்சம் கோடியா? முதலீட்டாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் !

    ஓமிக்ரான் மாறுபாட்டின் பொருளாதார தாக்கம் குறித்த கவலைகளைத் தணிக்கும் வகையில் உலகளாவிய பங்குகளுடன் இணைந்து உள்நாட்டு பங்குச் சந்தைகளில் விலைகள் ஏறியதன் மூலம், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 3 நாட்களில் ரூ.8,58,979.67 கோடியாக உயர்ந்துள்ளது. . 30-பங்குகளின் பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் வியாழக்கிழமை 384.72 புள்ளிகள் உயர்ந்து 57,315.28ல் நிறைவடைந்தது. பகலில், 559.96 புள்ளிகள் அதிகரித்து 57,490.52 ஆக இருந்தது. மூன்று நாட்களில், குறியீடு 1,493.27 புள்ளிகள் அதிகரித்தது.பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.8,58,979.67 கோடி…

  • ஐ.டி.சி யின் அடுத்த திட்டம் என்ன? நாளை தெரியும் !

    எஃப்எம்சிஜி மற்றும் ஹோட்டல் போன்ற வணிகங்களின் வளர்ச்சிக்கான அடுத்த கட்ட திட்டங்களை ஐடிசி நிர்வாகம் செவ்வாய்கிழமை வெளியிடும் என்று தெரிகிறது. ஹோட்டல்கள் அல்லது ஐடி வணிகத்தை பிரிப்பதை ஐடிசி அறிவிக்கலாம் என்று சந்தை ஊகங்கள் தெரிவித்தாலும், இந்த முன்மொழிவுகள் இன்னும் நிர்வாகக் குழுவுக்கு முன் வைக்கப்படவில்லை அல்லது அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்பதால் அது சாத்தியமில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி “இந்த வணிகங்களுக்கு “மாற்று கட்டமைப்புகளை” எவ்வாறு உருவாக்கலாம்…

  • பிஸ்கட் முதல் சோப்பு வரை தொடர்ந்து உயரும் விலைவாசி !

    மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் இந்தியாவின் இரு பெரும் நுகர்வோர் நிறுவனங்களான இந்துஸ்தான் யூனிலீவர்ஸ் லிமிடெட், ஐடிசி லிமிடெட்டின் சோப்பு மற்றும் தனிநபர் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவை இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக விலையேற்றம் கண்டன. தனிநபர் பயன்படுத்தும் பொருட்களில் இந்துஸ்தான் யூனிலீவர் பொருட்கள் 4 முதல் 22 சதவீதம் வரையிலும், ஐடிசியின் பொருட்கள் 8 முதல் 10 சதவீதம் வரையிலும் விலையேற்றம் கண்டன. பிஸ்கட் மற்றும் இனிப்பு தயாரிக்கும் பார்லே நிறுவனமும் 8 முதல் 10 சதவீதம்…