-
வங்கிக் கடன் மோசடி: “கார்வி” நிறுவனத் தலைவர் கைது!
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான “கார்வி ஸ்டாக் ப்ரோக்கிங் லிமிடெட்” நிறுவனத் தலைவர் சி பார்த்தசாரதி வங்கிக் கடன் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஹைதராபாத்தில் வியாழக்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். பார்த்தசாரதி, “இண்டஸ்இண்ட்” வங்கியின் மூலம் வாங்கிய கடன் தொகையை தன்னுடைய வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மடை மாற்றி இருப்பதாக காவல்துறை இணை ஆணையர் (புலனாய்வுத் துறை) அவினாஷ் மொஹந்தி தெரிவித்தார். “இண்டஸ்இண்ட்” வங்கி அளித்திருக்கும் புகாரில், கார்வி நிறுவனமானது, வாடிக்கையாளர்களின் பிணைகள் மற்றும் பங்குகளை உரியவர்களின்…