-
“டிசம்பர் வரை 15% ஏற்றுமதி வரி இருக்கும்”
தயார் நிலையில் உள்ள ஸ்டீல் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் மத்திய அரசு 15 விழுக்காடு ஏற்றுமதி வரி விதித்தது. இந்த வரி விகிதம் வரும் டிசம்பர் மாதம் வரை தொடர வேண்டும் என்று மத்திய அரசின் ஸ்டீல் பொருட்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது. திடீரென வரியை குறைத்தால் உள்நாட்டு சந்தையில் விற்பனை வீழ்ச்சியடைந்து ஏற்றுமதியில் அதிக கவனம் செல்லும் என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது நடப்பாண்டு மழைக்காலத்திற்கு பிறகு உள்நாட்டு…
-
சந்தை – இன்றைய நிலவரம்…
இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தின் முதல் நாளில், 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இதன் படி வர்த்தக நேர முடிவில், சந்தைகள் 300 பள்ளிகளுக்கு மேல் அதிகரித்து வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்து 60 ஆயிரத்து 115 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 103 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 936 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில்…
-
சந்தைக்கு இது புதுசோ புதுசு!!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐபோன் 14 சீரிஸ் வகை போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய நேரப்படி (7-9-2022) இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில், ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 புரோ மேக்ஸ், ஆப்பிள் அல்ட்ரா வாட்ச், ஆப்பிள் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது. ஐபோன் 14 சீரிஸில் 4 போன்களும், 2 ஆப்பிள் வாட்ச்களும், நெக்ஸ்ட் ஜெனரேஷன் AIRPODS PRO உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டன. இதே போன்று, ஏ16 பயோனிக் சிப் உள்ளிட்டவையும்…
-
எப்படி முடிந்தது சந்தை?
இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் நிறைவில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டின் நிஃப்டி 31 புள்ளிகள் சரிந்தும், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 160 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும், வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. வர்த்தகத்தின் முடிவில் டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தனர். அதேபோல் ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனங்கள் உயர்வுடன் இருந்தன. இன்றைய நிலவரம் படி நிஃப்டி 17,624 புள்ளிகள்…
-
பங்குதாரர்களுக்கு நூதனமாக நன்றி தெரிவித்த இந்திய நிறுவனம்
மெட்ரோ பிரான்ட்ஸ் என்ற நிறுவனம் காலணிகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்தாண்டு டிசம்பரில்தான் பங்குச்சந்தையில் அறிமுகமாகியது. இந்த நிறுவனம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த பங்குகளை விற்று முதலீடுகளை ஈட்டி காலணி வியாபாரத்தை ஜோராக செய்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் அந்த நிறுவனம், தங்கள் பங்குதார்ர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தங்கள் நிறுவனப் பொருட்களில் 15 விழுக்காடு தள்ளுபடி அளிப்பதாக கூறியுள்ளது. மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் காலணிகள், பெல்ட் உள்ளிட்டவற்றை பங்குதார ர்கள் வாங்கிக்கொள்ளலாம்,…
-
ஏசியன் பெயிண்ட்ஸின் நிகர லாபம் 18.7 சதவீதம் அதிகரித்தது !!!
ஏசியன் பெயிண்ட்ஸின் நிகர லாபம், 2021-22 நிதியாண்டின் (Q4FY22) மார்ச் காலாண்டில் ரூ. 850.4 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் போது ரூ.852.1 கோடியாக இருந்தது. இந்த காலாண்டில் வருவாய் 18.7 சதவீதம் அதிகரித்து ரூ.7,892.7 கோடியாக உள்ளது. காலாண்டில், அதன் லாபம் 19.4 சதவீதமாகக் குறைந்து, முந்தைய ஆண்டின் காலாண்டில் இருந்த 21.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், அதன் பிபிஐடிடி 9.5 சதவீதம் உயர்ந்து ரூ.1532.6 கோடியாக இருந்தது
-
பருவமழைக் குறைவு, அணைகளின் நீர்மட்டத்தையும், அறுவடையையும் பாதிக்கும் !
இந்தியாவில் இப்போது பெய்து கொண்டிருக்கும் தென்மேற்குப் பருவமழை தனது நான்கு மாத இறுதியை அடுத்த சில தினங்களில் நெருங்குகிறது.ஜூன் மாதத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய மழை, படிப்படியாக குறைந்து, ஜூன் மாத இறுதியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பருவமழை மீண்டும் ஆகஸ்டில் பலவீனமான கட்டத்தை அடைந்துள்ளது. சீரற்ற மழை கோடை (காரிஃப்) பயிர் விதைப்பை பாதித்துள்ளது, பருவமழை விரைவாக புத்துயிர் பெறாவிட்டால், இறுதி விளைச்சலில், குறிப்பாக தாமதமாக விதைக்கப்பட்ட பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த வெள்ளிக்கிழமை வரை, காரிஃப்…
-
இந்திய வணிகர்களுக்கு எதிராக செயல்படுகிறாரா “இன்போசிஸ்” நாராயணமூர்த்தி?
இ-காமர்ஸ் ஜாம்பவான் அமேசானுக்கும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் “கேட்டமரான்” (Catamaran Ventures) நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டு வணிகம் முடிவுக்கு வருகிறது. “பிரிஒன் பிசினஸ் சர்வீசஸ்” (Prione Business Services) என்றழைக்கப்படும் இந்த கூட்டு வணிகமானது கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. வருகிற மே 19, 2022 அன்று மறு ஒப்பந்தத்துக்கு வரும் நிலையில் இருநாட்டு நிறுவனங்களும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டு நிறுவனத்தில் 3,00,000 வியாபாரிகள், தொழில் முனைவோர் ஆன்லைனில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 40…
-
2020 முதல் ₹10,000 கோடி இழப்பு, ஆனால் இண்டிகோ இன்னும் உயரமாக பறப்பது எப்படி?