-
விதிமீறல்களுக்காக இ-காம் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் !
கடந்த ஓராண்டில் மட்டும் தங்கள் தயாரிப்புகளில் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் சரிவர இல்லாததால் 217 பொருட்களுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் அதிகபட்சமாக மின்னணு சாதனங்கள். ஆடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விதிமீறலுக்குள்ளானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நோட்டீசில் இருக்கும் 217 அறிவிப்புகளில், 202 பொருட்களின் மீது தயாரிக்கப்பட்ட இடத்தின் பெயர், காலாவதியான தேதி, மற்றும் இறக்குமதியாளர்கள் முகவரி இல்லாதது, எம்.ஆர்.பி யை விட அதிக விலைக்கு…
-
எல்ஐசி யில் அன்னிய முதலீட்டாளர்கள் ! – முழு விவரம் இதோ !
நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது புதிய பங்குகளை வெளியிட இருக்கும் நிலையில், அதன் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளில் 20% வரை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்க வகை செய்யும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த…
-
பாதியில் நின்றுபோன குடியிருப்புகள், கடனில் சிக்கித் தவிக்கும் நடுத்தர மக்கள் !
இந்தியாவில் ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்பு வீடுகள் நிதி நெருக்கடி காரணமாக பாதியில் நிற்கிறது, இந்தியாவைப் பொருளாதார வளர்ச்சியை நோக்கி வழி நடத்துகிற நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும் பாதியில் நிற்கிறது, புதுடெல்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் இருக்கும் விஷ் டவுன் குடியிருப்பை எடுத்துக் கொள்வோம், பசுமையான சூழலுடனும், நேர்த்தியுடனும் காணப்படும் இந்தக் குடியிருப்புப் பகுதியில் தங்கள் வாழ்நாளின் சேமிப்பை எல்லாம் முதலீடு செய்து பணம் கட்டியவர்களின் நிலை இப்போது பரிதாபகரமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான வெறுமையான வீடுகளும்,…
-
சிரிஞ்ச் தேவையை அதிகரித்த கோவிட் தடுப்பூசி!
-
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு – மக்கள் அதிர்ச்சி!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ₹25 உயர்ந்ததால், தமிழகத்தில் சிலிண்டர் விலை 900 ரூபாயை தாண்டியது. 9 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹285 உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ₹1831.50 ஆக உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி சரி செய்யத் தொடங்கியதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. மறுபுறம், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்திற்கு இரண்டு முறை…
-
டெஸ்லா இந்தியாவிற்குள் நுழையும் தருணம் நெருங்குகிறது; 4 மாடல்களுக்கு ஒப்புதல்!
-
GST தொடர்பாக அரசாங்கத்தை வறுத்தெடுத்த ஆர் சி பார்கவா, வேணு ஸ்ரீனிவாசன்; அரசின் பதில் என்ன?
அரசாங்கம் தான் சொன்னதைச் செய்யவில்லை என்று வாகன தொழில் உற்பத்தியின் ஜாம்பவான்கள் குற்றம் சாடியுள்ளனர். தில்லியில் நடந்த ஒரு தொழில்துறை நிகழ்ச்சியில் மாருதி சுஸுகியின் தலைவரான ஆர் சி பார்கவாவும் டிவிஎஸ் மோட்டார்ஸின் தலைவரான வேணு ஸ்ரீனிவாசனும் அரசாங்கம் ஆட்டோ துறைக்கு ஆதரவு தரும் நோக்கத்துடன்தான் செயல்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினர். இந்த உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்; பின்னர் அவரது முறை வந்தபோது பதில் அளித்தார். வரிகள்…
-
எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் எண்ணெய் பத்திரங்கள் குறித்து அரசு ஏன் நம்மைத் தவறாக வழிநடத்துகிறது?
“ஏன் எனும் காரணம் முக்கியமில்லை, பின்னணி விளக்கத்தை விவரிப்பது மட்டுமே முக்கியம்.” – “சப்-அர்பன் டிக்ஸ்” நாவலிலிருந்து “ஃபேபியன் நிசியேசா”. இப்போது நிலவும் அதீத பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட எண்ணெய் பத்திரங்கள் தான் காரணம் என்று கடந்த சில ஆண்டுகளாக தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் பழி கூறுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். முந்தைய எரிபொருட்கள் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2018-ல் இவ்வாறு ட்வீட் செய்திருந்தார்: “ஐக்கிய…