-
நிர்மலா சீதாராமனின் முயற்சியை வரவேற்ற ப.சிதம்பரம்
பெரிய நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களில் வாராக்கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இதே பிரச்னையை ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ஹேர்கட் எனப்படும் முறையில் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்கள் வாராக்கடன் என்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக 514 நிறுவனங்களுக்கு 5 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகள் சலுகைகள் அளித்துள்ளதாக காட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில்…
-
இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி வெறும் கனவா??
நாட்டின் பொருளாதார நிலை குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அவர் அண்மையில் புதிய டிவிட் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதன்படி, நாட்டின் நிதியமைச்சர், நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எதிர்ப்பார்த்து உள்ளதாகவும், ஆனால் அவரின் ஆசையை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 16.2%வளர்ச்சி இருக்கும் என்றும், முறையே இரண்டு, 3மற்றும்…
-
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சேமிக்க கூட முடியாத நிலை – ப.சிதம்பரம்
விலைவாசி உயர்வு மக்களை, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். அத்துடன் நுகர்வு மற்றும் சேமிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது, வீட்டுக் கடன் அதிகரித்துள்ளது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு (குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில்) அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த உண்மைகளை ஒப்புக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசு நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதம் அல்லது ரூ.16,61,196 கோடி என…
-
பணவீக்கம், முன்னேறிய பொருளாதாரங்களில் 5.7% வளரும் பொருளாதாரங்களில் 8.7%
தேசிய புள்ளியியல் அலுவலகம் மே இறுதியில் தேசிய வருமானத்தின் தற்காலிக மதிப்பீடுகளையும் GDPயின் காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டது. மார்ச் 31, 2022 அன்று நிலையான விலையில் இருந்த பொருளாதாரத்தின் அளவு ரூ. 147.36 லட்சம் கோடி. மார்ச் 31, 2020 ரூ. 145.16 லட்சம் கோடி. தனிநபர் வருமானம் இரண்டு ஆண்டுகளில் ரூ.1,08,247ல் இருந்து ரூ.1,07,760 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்களில் பெரும்பாலோர் வேலை செய்யாமல் இருக்கிறார்கள் அல்லது வேலை தேடாமல் இருக்கிறார்கள். மேலும்…
-
காணாமல் போன வேலைவாய்ப்புகள் – ப.சிதம்பரம்
விடுதலை பெற்ற இந்தியாவில் 1947 க்குப் பிறகு 10க்கு மேற்பட்டவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறதா? அர்த்தமற்ற கேள்வியாக இருக்கலாம், கேள்விக்கு விடை “ஆம்” என்பதுதான். 2013-14 க்குப் பிறகு என்று எடுத்துக்கொண்டாலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. போர், பஞ்சம் அல்லது இயற்கைப் பேரழிவுகளால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டால் ஒழிய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை, இயல்பான சூழலில் ஒரு கடற்பயணம் மேற்கொள்ளும் கப்பலில் உறுதியான பற்சக்கரங்கள் இல்லையென்றாலும் அது முன்னோக்கி நகரும் என்பதுதான் உண்மை. உண்மையான கேள்வி…
-
அநீதியிழைக்கும் “நீட்” தேர்வுமுறை – ப. சிதம்பரம்
இந்திய அரசியலமைப்பானது ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கச்சிதமானதாக இருந்தது, இந்திய அரசியலமைப்பின் தூண்களாக மூன்று பட்டியல்கள் இருக்கிறது. 1) ஒன்றிய அரசின் பட்டியல், 2) மாநிலப்பட்டியல் 3) இருவருக்குமான பொதுப்பட்டியல். முதலில் இயற்றப்பட்ட பட்டியல் இரண்டு (மாநிலப்பட்டியல்) 11 ஆவது விதிப்படி – பல்கலைக்கழகங்கள் உட்பட்ட கல்வியானது பட்டியல் 1 (ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்) இன் 63,64,65,66 விதிகளின் கீழ் வரும். பொதுப்பட்டியலின் 25 ஆவது விதிப்படி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழிலாளர் சார்ந்த…
-
சுதந்திர தின உரையில் “தேசத்தின் நிலையும்”, அதன் உண்மை நிலையும் – ப.சிதம்பரம் அவர்களின் எழுத்துக்களிலிருந்து…
உலகத் தலைவர்களின் உரைகளில், அதிகம் எதிர்பார்க்கப்படுகிற ஒன்று, அமெரிக்க ஜனாதிபதி ஆண்டுதோறும் அமெரிக்க காங்கிரசில் ஆற்றும் “ஸ்டேட் ஆஃப் தி யூனியன்” உரையாகும், காரணம், அமெரிக்காவின் கொள்கைகள் உலகின் மற்ற நாடுகளிலும் அதன் தாக்கம் ஏற்படுவதுதான். அதேபோல, இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று இந்தியப் பிரதமர் செங்கோட்டையில் ஆற்றும் உரை, உலகத்தால் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படவில்லை என்றாலும், அதன் மீதான கணிசமான ஆர்வம் உண்டு. சுதந்திர தின கொண்டாட்டம் என்பது குடியரசு தின அணிவகுப்பைப்…