-
YES Bank பங்குகள்.. 5%-க்கு மேல் உயர்வு..!!
அதன் மொத்தச் செயல்படாத சொத்துக்கள் (NPAs) மொத்த முன்பணங்களின் சதவீதமாக மார்ச் 31 இல் 13.9% ஆக இருந்தது, இது 150 அடிப்படைப் புள்ளிகள் (bps) மற்றும் முந்தைய காலாண்டை விட 80 bps குறைந்தது.
-
YES வங்கியின்பங்குகள் உயர்வு .. வைப்பு விகிதம் மார்ச் 31-ல் 92%..!!
2020 –ம் ஆண்டு ஜூலையில் பொதுச் சலுகையின் (FPO) மூலம் பெறப்பட்ட மூலதனத்தை உயர்த்திய பிறகு, வங்கியின் முன்னேற்றத்திற்கு மதிப்பீடுகள் தொடர்ந்து காரணிகளாக உள்ளன.
-
மார்ச் 2022 காலாண்டு.. யெஸ் வங்கி 4-வது காலாண்டு வணிகப் புதுப்பிப்பு..!!
தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிகர முன்பணங்கள் ஆண்டு அடிப்படையில் ரூ.166,893 கோடியுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் அதிகரித்து ரூ.181,508 கோடியாக உள்ளது.
-
Airtel Payments வங்கி வாடிக்கையாளர் டெபாசிட் தொகை உயர்வு..!!
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் எம்டி மற்றும் சிஇஓ அனுப்ரதா பிஸ்வாஸ் கூறுகையில், Airtel Payments வங்கி இந்த ஆண்டில் இதுவரை 35 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
புத்தாண்டில் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணங்கள் !
நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
-
பங்கு, பத்திரங்கள் மூலம் 10,000 கோடி நிதி திரட்ட எஸ் வங்கி திட்டம் !
தனியார் வங்கியான “யெஸ் வங்கி” வணிக வளர்ச்சியை ஆதரிக்கவும், பிற வளர்ச்சித் திட்டங்களுக்கும் பங்கு மற்றும் பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. நிதி திரட்டும் திட்டத்திற்கு அதன் நிர்வாக குழு ஒப்புதல் அளித்ததாக பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் வங்கி கூறியது. வங்கி அதன் பங்குதாரர்களிடமிருந்து ஒப்புதலைக் கோரும், இதன் விளைவாக பிப்ரவரி 28, 2022 அன்று காலாவதியாகும் தற்போதைய பங்குதாரர் ஒப்புதலுக்கான நீட்டிப்பைக் கோரும். இந்த ஆண்டு மார்ச்…
-
வங்கிக் கடன்களுக்கு “கல்தா” ! கடன் நிலுவைத் தொகை 62,970 கோடியாக கிடுகிடு அதிகரிப்பு !
வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்ப செலுத்தத் தவறுபவர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர் என்று இந்திய வங்கிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வேண்டுமென்றே கடனை கட்டாதவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வின்படி பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து நிலுவையில் உள்ள கடன்களின் மதிப்பு ரூ.62,970 கோடி அல்லது சுமார் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது. 2019 டிசம்பரில் ரூ.6.22 டிரில்லியனில் இருந்து, ஜூன் மாதத்தில் மொத்த நிலுவை தொகை ரூ.6.85 டிரில்லியன் ஆக அதிகரித்துள்ளது. வேண்டுமென்றே கடன் கட்டத் தவறிய கடனாளிகளின் தொகை…
-
மேலும் இரண்டு வங்கிகள் தனியார் மயமாகிறது !
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளை தனியார்மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நவம்பர் 24ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா பங்குகளின் விலை 15 – 20 சதவீதம் அதிகரித்தன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, இரண்டு வங்கிகளின் தனியார்மயமாக்கலை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதல் கட்டமாக இரண்டு வங்கிகளும் தங்களிடமுள்ள 51 சதவீத பங்குகளை விற்பனை…
-
சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ₹ 84,328 கோடியாக அதிகரிப்பு !
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 84,328 கோடியாக அதிகரித்துள்ளது என்று அதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார். கும்பகோணத்தை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி 2021-22 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு கணக்கு மற்றும் முதல் அரையாண்டிற்கான முடிவுகளை வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி நேற்று வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது,”நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வியாபாரம் ரூ.84,328 கோடியாக…