-
ராணிப்பேட்டையில் மாபெரும் மின்வாகன உற்பத்தி தொழிற்சாலை! தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்!
“கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்” நிறுவனத்தின் இ-மொபிலிடி பிரிவான க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் மிகப்பெரிய மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி மூலம் 700 கோடி முதலீட்டின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டையில் 35 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக செயல்படும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கிரீவ்ஸ் ஆலை…