-
2 கட்டங்களாக தனியார் மயமாகிறது ஐடிபிஐ வங்கி…
ஐடிபிஐ வங்கி நிறுவனத்தின் 60.72% பங்குகளை விற்க அண்மையில் மத்திய அரசும், எல்ஐசியும் அறிவிப்பாணைகளை வெளியிட்டன. இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியை பொதுத்துறையில் இருந்து தனியார் வசம் மாற்ற 2 கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் முறைக்கு fit and proper என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பின்னர் இதில் தேர்வு செய்யப்படும் ஏலதாரர்களை ரிசர்வ் வங்கியும் மத்திய உள்துறை விவகாரங்கள் துறை அமைச்சகமும் கண்காணிக்க இருக்கிறது. இரண்டாம் கட்டத்தில் நம்பகத்தன்மை முக்கிய பங்கு வகிக்க உள்ளது. ஐடிபிஐ…
-
தொடர்ந்து சரியும் கையிருப்பு!!!
மத்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பணம் குறித்த நிலை அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற நாடுகளின் பணம் கடந்த 23ம் தேதி வரை 537.51 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அளவு இதற்கு முன்பு இருந்ததை விட 8.1 பில்லியன் குறைவாகும். நாட்டில் உள்ள வெளிநாட்டு பண கையிருப்பு குறைந்துள்ளதன் மூலம் FCAஎனப்படும் வெளிநாட்டு பண சொத்து மதிப்பு 477பில்லியன் டாலராக சரிந்துள்ளது அதேபோல…
-
மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரித்த ரிசர்வ் வங்கி…
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். ரெபோ விகிதம் எனப்படும் இந்த வரி உயர்வு காரணமாக வாகனம், வீட்டுக்கடன், தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தவே ரெபோ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது ரிசர்வ்…
-
வலுவடையும் டாலர், தொடர்ந்து தேயும் இந்திய ரூபாயின் மதிப்பு..
அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்துள்ளது இதுவரை இல்லாத உச்சமாக 81 ரூபாயை கடந்து ரூபாய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் வரும் நாட்களில் 83 ரூபாய் வரை மேலும் சரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய ரூபாயின் மதிப்பு 9 விழுக்காடு இந்தாண்டில் சரிவை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான குறியீடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…
-
ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் பேசப்போவது என்ன…
ரிசர்வ் வங்கி அவ்வப்போது தங்கள் நிதி ஆலோசனைக்கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம்.இந்த நிலையில் சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்க உள்ளது. இதன்படி செப்டம்பர் 30ம் தேதி அடுத்த எம்பிசி எனப்படும் நதி கொள்கை ஆலோசனை குழு கூட்டம் நடக்க உள்ளது. இதில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய அம்சங்கள் என்னவென்று இப்போது காணலாம் இந்திய ரூபாய் மதிப்பு மீளுமா இல்லை தொடர்ந்து…
-
டோக்கனைசேஷன் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்யும்?
ஆன்லைனில் பொருட்களை வாங்க தற்போது டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த வகை பரிவர்த்தனைகள் ஹேக்கர்கள் புகுந்துவிடுவதால் தோல்வியில் முடிவதுடன், பணத்தை இழக்கும் அபாயமும் உள்ளது. இந்த சூழலில் டோக்கனைசேஷன் என்ற புதிய முறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது இந்த வகை டோக்கன்கள் மூலம் உங்கள் 16 இலக்க எண் இனி ஒவ்வொரு முறையும் பதிவிட வேண்டிய அவசியம் இருக்காது.…
-
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு
முன் எப்போதும் இல்லாத அளவாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சமாக 81 ரூபாய் 62 பைசாவாக உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க பாண்டுகள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவடையத் தொடங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் மீது ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு சரிந்து வந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை…
-
கடன் வசூல் செய்யும் முகவர்கள் மீது ரிசர்வ் வங்கி காட்டம்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை வங்கிகள் மற்றும் நதி நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகிறது. இந்நிலையில் அண்மையில் ஹசாரிபாக் பகுதியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கிய விவசாயி கடனை திரும்பி செலுத்தவில்லை என்பதால் டிராக்டரை கடன் வசூலிக்கும் முகவர் எடுத்துச்சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் விவசாயியின் கர்ப்பிணி மனைவி டிராக்டர் ஏற்றிக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து கடன் வழங்கிய மகேந்திரா நிறுவனம் மூன்றாம் நபர்களை வைத்து கடன் வசூலிக்க ரிசர்வ்…
-
மகேந்திரா பைனான்சின் வாராக்கடன் அதிகரிக்க வாய்ப்பு….
வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் வாங்க நிதி அளித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று மகேந்திரா அன்ட் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கடன் மீட்புப் பிரதிநிதியாக செயல்பட்ட நபர் ஒருவர் ஜார்க்கண்டில் பெண் விவாசாயியை டிராக்டர் ஏற்றி கொன்றுவிட்டதாகவும், அவர் 3 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து களமிறங்கிய ரிசர்வ் வங்கி, கடந்த வியாழக்கிழமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 3-ம் நபரை வைத்து பணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை…
-
ஃபின்டெக் நிறுவனங்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர்
ஃபின்டெக் எனப்படும் நிதிசார்ந்த தொழில்நுட்ப நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த்தாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நிதிசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்துவோர் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் விதியை பின்பற்ற வேண்டும் என்றார். கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஆன்லைன் தற்கொலைகள் குறித்து சுட்டிக்காட்டி பேசிய சக்தி காந்த்தாஸ், டிஜிட்டல் முறையில் பணத்தை கடனாக மக்களுக்கு வழங்கப்படுவதை வரவேற்பதாக கூறியுள்ள அவர், விரும்பத் தகாத சிலநிகழ்வுகளையும் சுட்டிக்காட்டினார். பணம் கொடுக்கல் வாங்கல்…