-
3 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்த முதலீட்டாளர்கள்…..
இந்திய பங்குச்சந்தைகளில் நிலவிய நிலையற்ற சூழல் காரணமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே 57 ஆயிரத்து 365 புள்ளிகளாக சரிந்த பங்குச்சந்தையால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியான நிலையில் அங்கு மேலும் கடன்களின் விகிதம் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதன் எதிரொலியாகவே இந்திய பங்குச்சந்தைகளிலும் தாக்கம் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாதோரின்…
-
கடன் வாங்கும் அம்பானி?? …..
முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாயும்,ஜியோ நிறுவனம் 20 ஆயிரத்து 600 கோடி ரூபாயும் வெளிநாட்டு கடன்தரும் நிறுவனங்கள் மூலம் கடன் வாங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 5ஜி செல்போன் சேவையை அண்மையில் ஜியோ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நிறுவன விரிவாக்கத்துக்கு இந்த கடன் வாங்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பார்க்கிளேஸ், எச்.எஸ்.பி.சி,MUFGவங்கிகளிடம் கடன் வாங்குவது குறித்துபேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் அங்கீக்கரிக்கப்பட்டுள்ள கடன் அளவான SOFRஐவிட 150 அடிப்படை புள்ளிகள்…
-
விஸ்தாரா-ஏர் இந்தியா இணைக்கும் முயற்சி தீவிரம்
டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை இணைக்கும் பணிகளில் டாடா குழுமம் அதீத முயற்சி செய்து வருகிறது. தற்போது இண்டிகோ நிறுவனம் இந்திய அளவில் முன்னோடி நிறுவனமாக உள்ளது. இந்த சூழலில் இண்டிகோ நிறுவனத்துடன் போட்டி போடும் டாடா நிறுவனம், அதன் ஏர் இந்தியா நிறுவனத்தையும், விஸ்தாரா நிறுவனத்தையும் நிர்வாக ரீதியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. விஸ்தாரா நிறுவனத்தில் 25 விழுக்காடு பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது.…
-
அதானி நிறுவன பரஸ்பர நிதி பங்குகளை தவிர்ப்பது ஏன்?
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, உலகளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1.6 டிரில்லியன் ரூபாயாக இருந்த சந்தை முதலீடு தற்போது 20 டிரில்லியனாக உயர்ந்துள்ளது இத்தனை பெரிய அசுர வளர்ச்சி பெற்ற அதானி நிறுவனத்துக்கு பங்குகள் ஹெட்ஜிங் எனப்படும் வகையில் நிதி திரட்டப்பட்டது. இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அதானி, பரஸ்பர நிதியில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் மொத்த மதிப்பில் 0.76% மட்டுமே அவர் பரஸ்பர…
-
அமெரிக்காவில் என்னதான் நடக்குது??
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மையால் அந்நாட்டில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. நிறுவனங்களில் ஆட்குறைப்பு , வணிகம் செய்வதில் ஏற்பட்டுள்ள தொய்வு ஆகிய காரணிகளால் அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இதுதான் சரியான தருணம் என பங்குகள் வாங்குவோரையும் நிதி ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர். 2008ம் ஆண்டு இருந்ததை விடவும் அமெரிக்க பங்குச்சந்தைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், இந்த நேரத்தில் பங்குகளை வாங்குவது கண்ணை மூடியபடி நீர்வீழ்ச்சியில் விழுவதைப்போன்றது என்றும்…
-
என்ன!!! 7லட்சம் கோடியா ?
உலகளாவிய பங்குச்சந்தையில் நிலையற்ற சூழல் உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சென்றுள்ளன பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக 7 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தையில் இந்திய பங்குகளின் மதிப்பு 269.86லட்சம் கோடியாக சரிந்துள்ளது அமெரிக்க பெடரல் ரிசர்வ், கடன்களுக்கான வட்டியை மேலும் ஒரு முறை விலையேற்றம் செய்து அறிவிக்க…
-
கடினமான தருணத்துக்கு தயாராகும் அமெரிக்க பங்குச்சந்தைகள்….
அமெரிக்காவில் விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் அதிரடி கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து வகையான கடன்களின் விகிதங்களும் கடுமையாக உயர இருக்கிறது. இந்த சூழலில் மக்களையும், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வின் தலைவர் ஜெரோம் பாவல் தெரிவித்துள்ளார். நூறு அடிப்படை புள்ளிகளை உயர்த்துவதற்கு பதிலாக 75 புள்ளிகள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டில் விலைவாசி…
-
அமெரிக்க பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி
அமெரிக்க பெடரல் ரிசர்வ், தங்கள் நாட்டு கடன் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக அறிவிக்க உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் சரியத் தொடங்கியுள்ளன. நேற்று அமெரிக்க பங்குச்சந்தைகளில் 0.35% சரிவு ஏற்பட்டது. S&P 500 துறை பங்குகளில் பிரதான 11 பங்குகளில் 5 பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. சுகாதாரத்துறை பங்குகள் ஒன்றரை விழுக்காடு சரிந்துள்ளது. ஆற்றல் துறையில் 1 விழுக்காடு விலை வீழ்ச்சியும் காண முடிந்தது.பெடரல் ரிசர்வ் அந்நாட்டில் கடன் வட்டி விகிதத்தை நூறு…
-
இன்றைய சந்தை நிலவரம்…
வாரத்தின் கடைசி வர்த்தக தனமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் அதிகரித்து 59 ஆயிரத்து 956 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 886 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை என்று 60,000 புள்ளிகளை கடந்தது குறிப்பிடத்தக்கது. அதானி…
-
இந்த நிறுவன பங்குகள் வைத்துள்ளீர்களா?.. ஜாக்பாட் உங்களுக்குத்தான்:
ஐடிசி நிறுவன பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம் வியாழக்கிழமை தொடங்கியதும். ஐடிசியின் ஒரு பங்கின் விலை 329 ரூபாய் 60 காசுகளாக இருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஐடிசி நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஐடிசி ஹோட்டல்களின் பங்குகள் தனியாக விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி தெரிவித்ததும், நாடு முழுக்க உணவு தானியங்களின் விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளதுமே ஐடிசி நிறுவன…