-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஐபிஓ:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது புதிய ஐபிஓவை அண்மையில் தொடங்கியது. 3 நாட்கள் நடந்த பங்கு வர்த்தகத்தில், 831 கோடி மதிப்புள்ள பங்குகள் , 2 கோடியே 49லட்சத்து 39 ஆயிரத்து 322 பங்குகளாக விற்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு பங்குகளை அளிப்பது தொடர்பாக வரும் 12ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பங்குச்சந்தையில் விருப்பம் தெரிவித்தோருக்கு பங்குகள் வரும் 14 ம் தேதி கிடைக்க உள்ளது. வரும் 15ம் தேதி இந்தியாவின் இரண்டு பங்குச்சந்தைகளிலும் தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கியின்…
-
இந்த நிறுவன பங்குகள் வைத்துள்ளீர்களா?.. ஜாக்பாட் உங்களுக்குத்தான்:
ஐடிசி நிறுவன பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம் வியாழக்கிழமை தொடங்கியதும். ஐடிசியின் ஒரு பங்கின் விலை 329 ரூபாய் 60 காசுகளாக இருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஐடிசி நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஐடிசி ஹோட்டல்களின் பங்குகள் தனியாக விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று ஐடிசி தலைவர் சஞ்சீவ் பூரி தெரிவித்ததும், நாடு முழுக்க உணவு தானியங்களின் விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளதுமே ஐடிசி நிறுவன…
-
வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 664 புள்ளிகள் சரிந்து 55,769 ஆகவும், நிஃப்டி 0.26% குறைந்து 16,584 ஆகவும் முடிந்தது.
வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 664 புள்ளிகள் சரிந்து 55,769 ஆகவும், நிஃப்டி 0.26% குறைந்து 16,584 ஆகவும் முடிந்தது. இருப்பினும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 1.61% மற்றும் 1.42% வாராந்திர ஆதாயங்களைப் பெற்றன. சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் இந்தியாவில் சாதாரண பருவமழை எதிர்பார்ப்பு ஆகியவை இந்த வார தொடக்கத்தில், முதலீட்டாளர்களின் பங்குகள் ஏற்றம் காண உதவியது. ரிசர்வ் வங்கி விகிதங்களை 25-35 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மத்திய வங்கி 50 அடிப்படை…
-
டெஸ்லா மற்றும் ட்விட்டரின் பங்குகள் இந்த வாரம் சரிந்தன
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் மற்றும் ட்விட்டர் தளத்தை வாங்குவதற்கான $44 பில்லியன் ஏலத்தைச் சுற்றியுள்ள சாத்தியமான சட்ட சிக்கல்களை முதலீட்டாளர்கள் கையாள்வதால் டெஸ்லா மற்றும் ட்விட்டரின் பங்குகள் இந்த வாரம் சரிந்தன. இரண்டில், மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனம் மோசமாக உள்ளது, அதன் பங்கு இந்த வாரம் இதுவரை 16 சதவீதம் குறைந்து $728 ஆக உள்ளது. ட்விட்டர் பங்குகள் வாரத்தில் 9.5 சதவீதம் சரிந்து, வியாழன் அன்று $45.08 ஆக முடிந்தது.…
-
மந்தமான நிலையில் பட்டியலான CMS Info Systems பங்குகள் !
இன்று இந்திய பங்குச் சந்தையில் சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் பங்குகள் அறிமுகமாகின. இந்த வருடத்தின் இறுதி ஐபிஓ வெளியீடான இந்த பங்குகளின் ஈக்விட்டி பங்குகள் ‘பி’ குரூப் செக்யூரிட்டிகளின் பட்டியலில் என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கும், ஒப்பந்தங்களுக்கும் பயன்படுத்தப்படும்.